உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத நோய் கூட நொடியில் தீரும் !! நோயை குணபடுத்த இதைவிட எளிமையான பரிகாரம் செய்ய முடியாது !!

இன்று நாம் சம்பாதிக்கும் பணம் எதில் வீண்விரயம் ஆகிறதோ, இல்லையோ? அந்தப் பணத்தை கொண்டுபோய், மருத்துவமனையில் கொட்டி தருகின்றோம். நம் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கின்றது. மருந்து, மாத்திரை சாப்பிடாத மனிதர்களே பூலோகத்தில் இல்லை! என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. சரி. பூலோகத்தில் கலிகாலம் முற்றிக் கொண்டே வருகிறது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆன்மீக ரீதியாக இதைச் சொல்லவேண்டும் என்றால், நம் லோகத்தில், ராகு கேதுவின் ஆட்சி குடிகொண்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். உண்மையில்லாத தன்மை, நடிப்பு, பொய், பித்தலாட்டம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் எங்கெல்லாம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றதோ, அந்த இடத்தில் ராகு கேதுவின் ஆதிக்கம் குடிகொள்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சொல்லப்போனால், இன்றைய சூழ்நிலை, ராகு கேதுவின் ஆதிக்கத்தால் தான் இருக்கின்றது என்பதை மேலும் மேலும் உறுதி செய்கிறது! தீராத நோய்களும், பசி பஞ்சமும், தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளவும், தீராத வியாதியை தீர்த்துக் கொள்ளவும், செய்யவேண்டிய ஒரு சின்ன, எளிமையான, சுலபமான பரிகாரம் தான் இது. இந்த பரிகாரம் செய்தால் நோய் தீர்ந்து விடுமா? என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை யாரும் செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு செய்து வந்தால் கை மேல் பலன் நிச்சயம் உண்டு. இன்றைக்கு நாம், நரசிம்மர் வழிபாட்டை பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். நரசிம்மர், சுவாதி நட்சத்திரத்திற்கு உரியவர். ராகுவை ப்ரீதி செய்யக்கூடியது, சுவாதி நட்சத்திரம். ஆகவே, நரசிம்மர் வழிபாட்டை திங்கட் கிழமையும், சனிக்கிழமையும் செய்வது மிகவும் விசேஷமானது. உங்களுக்கு நீண்ட நாட்களாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து கொண்டு வந்திருந்தால், தொடர்ந்து நீங்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுபவர்களாக இருந்தால், கட்டாயம் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

உங்களது உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு வகையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நரசிம்மருக்கு மஞ்சளையும், தேனையும்(தேன்), தானமாக வழங்க வேண்டும். குறிப்பாக திங்கள்கிழமை அன்று சனிக்கிழமை அன்றும் இந்த தானத்தை செய்து, அந்த மஞ்சள், தேனைக் கொண்டு நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, நரசிம்மருக்கு அபிஷேகம் செய்த அந்தத் தேனை, ஒரு சொட்டு வாங்கி நீங்கள் நாக்கில் தடவிக் கொண்டால் கூட போதும். அது உங்களுக்கு இருக்கக்கூடிய பிணியை நீக்கும்.கட்டாயம் மருத்துவர்களால் கைவிடப்பட்ட உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட ஒரு முடிவுக்கு வரும். ‘கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தும் நோய் தீரவில்லை. இந்த ஒரு தேன் உடல் நோயை எல்லாம் தீர்க்க போகிறதா?’ என்ற சந்தேகம் இப்போது கட்டாயம் உங்கள் மனதில் இருக்கும். நரசிம்மரை வழிபாடு செய்தால் பிரச்சினை தீரும் என்ற அந்த ஒரு நம்பிக்கை தான்! நம்பிக்கைதானே வாழ்க்கை.

இந்த பரிகாரத்தை இத்தனை வாரங்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நரசிம்மரை தரிசனம் செய்து வாருங்கள். வழிபாடு செய்யுங்கள். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல, உங்களுடைய மன குழப்பங்களுக்குக் கூட நல்ல தீர்வு தரும் அம்சம் கொண்டவர் நரசிம்மர். ஆமாம். (நரசிம்மரே ஆக்ரோஷமான தெய்வம்! அவரை வணங்கினால் மனம் அமைதி அடையுமா?) கட்டாயம் அமைதி கிடைக்கும். நீங்கள் முன்கோபக்காரராக இருந்தாலும், எல்லோரையும் எதிர்த்து பேசுபவர்களாக இருந்தாலும், 48 நாட்கள் தொடர்ந்து நரசிம்மர் வழிபாட்டை செய்து பாருங்கள்! உங்கள் சுபாவம், நிச்சயம் அமைதியானதாக மாறும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.