உங்களுக்கு இருக்கும் கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வீழ்த்த இந்த தீபச்சுடரை 5 நிமிடம் பார்த்தால் போதுமே !!

நமக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய, நேரடி பிரச்சனைகளை விட, மறைமுக பிரச்சனைகள் தான் அதிகம் என்று சொல்லவேண்டும். அதாவது நேரடியாக, எதிரே நின்று பேசி, சண்டை போடும் எதிரியைக் கூட சமாளித்துவிட முடியும். ஆனால், நம் கண்ணுக்குத் தெரியாமல் நம் முதுகில் குத்தும் எதிரிகளை என்ன செய்வது? நம்முடன் உறவாடி, நம் குடியை கெடுக்கும் எண்ணம் கொண்டவர்கள் பலபேர். பொதுவாக எல்லாரையும், அப்படி கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும், இந்த உலகத்தில் இப்படிப்பட்ட கெட்ட குணம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மைதான். நம் வாழ்க்கையில், நமக்கு எதிராக செயல்படக்கூடிய எதிரிகளின் சூட்சமம் நம்மை தாக்காமல் இருக்கவும் வேண்டும் என்றாலும், அந்த எதிரிகளின் எதிர்மறை எண்ணம் கூட நம்மை தாக்காமல் இருக்க வேண்டும் என்றாலும், என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பரிகாரம் என்று கூட சொல்லலாம். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள், இந்த வழியை பின்பற்றி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் வெள்ளை எருக்கன் செடி இலை, வெள்ளெருக்கம் பூ, ஒரு சிறிய மண் அகல் தீபம், பஞ்சுத்திரி. முதலில் ஒரு வெள்ளை எருக்க இலையை எடுத்து, அதன் சாறைப் பிழிந்து, பஞ்சு திரியை அந்த சாரோடு நனைத்து, உங்கள் வீட்டுக்குள்ளேயே நிழலில், அந்தத் திரியை நன்றாக உலர்த்தி விடுங்கள். அந்த திரையானது இலையின் சாறை உறிஞ்சி தயாராக இருக்கட்டும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்ய வேண்டாம். மற்றபடி உங்கள் வீட்டில், வேறு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு எச்சில் படாத தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் மேல் வெள்ளருக்கன் இலையை வைத்து விட்டு, அதன் மேல் அகல் தீபம் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, வெள்ளரிக்க சாரில் நனைத்து ஊற வைத்திருக்கும் திரி போட்டு, தீபம் ஏற்றி, அந்த தீபத்தின் பக்கத்தில் வெள்ளருக்கன் பூவை வைத்துவிடுங்கள். கிழக்கு பக்கம் பார்த்தவாறு இந்த தீபம் எரியட்டும். தீபத்திற்கு எதிர்ப்பக்கமாக நீங்கள் அமர்ந்துகொண்டு, தீபத்தை பார்த்தவாறு, உங்கள் கண்ணுக்கு தெரிந்த எதிரியின் மூலம் பிரச்சனை இருக்குமேயானால், அந்த எதிரியின் பெயரை உச்சரித்து, அவரால், ‘எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது’ என்று மனதார இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினை இருக்கிறது. ஆனால் எந்த எதிரியினால் பிரச்சனை என்பது புரியவில்லை! கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் தொல்லை இருந்தால் ‘கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் எந்த ஒரு நபரும், எனக்கு எதிரியாக செயல்பட கூடாது. அப்படி எதிரியாக செயல்பட்டாலும், அந்த எதிர்மறை எண்ணங்கள் என்னை வந்து சேரக் கூடாது’ என்று அந்த தீப சுடரைப் பார்த்து 5 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தாலே போதும்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் செய்யக்கூடாது. மற்றபடி உங்களுக்கு எந்த நாட்கள் சவுகர்யமாக இருக்கிறதோ, அந்த நாளில் செய்து கொள்ளலாம். எந்த நேரம் சவுகர்யமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளுங்கள். உச்சி வேளையில் மட்டும் செய்யக்கூடாது. இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்த பின்பு, உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாக காணலாம். அதேபோல், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களது எதிரிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ, என்ற பயமும் உங்களுக்கு தேவையில்லை. உங்களை, நீங்கள், பாதுகாத்துக் கொள்ள போகிறீர்கள்! அவ்வளவு தான், கட்டாயம் எந்த ஒரு பாதிப்பும் அந்த குறிப்பிட்ட நபருக்கு ஏற்படாது. எதிரிகளின் மூலம் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்களும், எதிரிகளால் அதிகப்படியான பிரச்சனையை எதிர்கொண்டு இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.