உங்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டி நீங்கி நினைத்ததை விட அதிக பணம் சேர இதை செய்தால் போதும் !!

நாம் என்னதான் கஷ்டபட்டு உழைத்தாலும் வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற முடியாது. அப்படி முன்னேற முடியாமல் போவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? முன்னேற்றம் தடைபட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கண் திருஷ்டி தோஷங்கள் முக்கிய காரணமாக இருக்கும். பிறர் உங்கள் மேல் பொறாமை கொண்டு பார்க்கும் போது எதிர்மறை ஆற்றலானது வெளிப்படுகிறது. இந்த நெகடிவ் வைப்ரேஷன் உங்களது முன்னேற்றத்தை தடை செய்யும். உங்களது எண்ணங்கள் சீராக இருக்க தடை ஏற்படுத்தும். இத்தகைய சிக்கல்களில் இருந்து விடுபட்டு கண் திருஷ்டி நீங்கி செல்வம் நிலைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதுமானது. அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம். கல் உப்பு மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுவதால் கல் உப்பின் இருப்பை வீட்டில் குறைந்து விடாமல் பாதுகாப்பது லக்ஷ்மி கடாட்சத்தை உண்டாக்கும்.

அதே போல் திருஷ்டிக்கும் கல் உப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. வெறும் கல் உப்பை கையில் வைத்து குழந்தைகளுக்கு தினமும் திருஷ்டி கழித்து வந்தால் நிம்மதியாக தூங்குவார்கள். காப்பு, கருப்பு எதுவும் அண்டாது. நாள் முழுவதும் கண்ட இடங்களில் கால் வைத்து விளையாடி விட்டு வரும் பிள்ளைகளுக்கு எழுமிச்சையை பகுதியாக வெட்டிவிட்டு அதனுள் கற்பூரம் வைத்து திருஷ்டி கழித்து கற்பூரத்தை வாசலில் போட்டு விட்டு எழுமிச்சையை இரண்டாக்கி வலது கையில் உள்ளதை இடது புறமும், இடது கையில் உள்ளதை வலது புறத்திலும் வீசிவிடுங்கள். வீசும் போது ஓரமாக வீசவும். நடு ரோட்டில் வீசாதீர்கள். பிறரின் கால் படாதபடி பார்த்து கொள்ளுங்கள். பொறாமையில் ஏற்படும் திருஷ்டியை உங்களிடம் நெருங்க விடாமல் தடுப்பதற்கு ஒரு தட்டில் கல் உப்பை பரப்பி கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு நல்ல எழுமிச்சங்கனியை எடுத்து இரு புறமும் பாதியளவு வெட்டி நான்கு கூறாக்கி கொள்ளுங்கள்.

இந்த கனியை பரப்பி வைக்கப்பட கல் உப்பின் மேல் வைக்கவும். இந்த தட்டை அப்படியே ஒரு ஓரமாக வைத்து விடவும். வெள்ளிக்கிழமையில் இதை செய்யவும். யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களின் பார்வை இதன் மீது பதிய வேண்டும். எனவே எந்த இடத்தில் வைப்பது என்று நீங்களே பார்த்து கொள்ளுங்கள். பொறாமைக் கண்கள் இதன் மீது பதிவதால் உங்களின் மேல் விழாது தடுத்து பாதுகாக்கும். ஒரு வாரம் வரை அப்படியே வைத்திருக்கலாம். மூடி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அதில் குழந்தைகள் கை வைக்காமல் பார்த்து எட்டாத வகையில் வைத்து விடுங்கள். அடுத்த வெள்ளியன்று இதனை கை படமால் ஒரு பாலிதீன் பையில் போட்டு அப்படியே முடிந்து எங்காவது வீசி விடுங்கள். அல்லது குப்பையிலும் போடலாம் தவறில்லை. உங்களுக்கு ஏற்படவிருந்த திருஷ்டிகள் அனைத்தும் இந்த பரிகாரம் செய்வதால் நீங்கி விடும். உங்களது முன்னேற்றத்தில் தடை உண்டாகாமல் விரைவில் உங்களது லட்சியங்களை அடைவீர்கள்.

இதே போல் ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு எழுமிச்சையை எடுத்து கொள்ளுங்கள். பௌர்ணமியிலும் இதை செய்யலாம். மேற்கூறியது போல் நான்கு கூறாக வெட்டி கொள்ளுங்கள். பிய்த்து விடக் கூடாது. அதன் நடுவே கல் உப்பை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நிரப்பி கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமம் நடுவிலும், நான்கு புறங்களிலும் இட்டு கொள்ளுங்கள். இதனை அப்படியே வீட்டின் நிலை வாசலில் இரண்டு மூலைகளிலும் வைத்து விடுங்கள். நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைக்கும் போது இதையும் சேர்த்து செய்து விடலாம். இதன் மூலம் வீட்டில் கண்ணுக்கு புலப்படாத துஷ்ட சக்திகள் தங்குவதை தடுக்க முடியும். உங்கள் மீது விழும் தீய பார்வைகளின் கெடுதலை தடுத்து நிறுத்தும் சக்தி கல் உப்பிற்கும், எழுமிச்சை பழத்திற்கும் உண்டு. மிகவும் எளிய பரிகாரங்கள் தான். ஆனால் பலன்கள் மிகவும் பெரியவை. ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று முன்னோர்கள் கூறி வைத்தது சரியாக தான் இருக்கும். சிலர் இதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.