உங்களுக்கு ஞாபக சக்தி இல்லையா மூளையைத் தூண்டி நினைவாற்றலை அதிகப்படுத்த ஐந்து நிமிட பயிற்சி செய்தால் போதும் !!

பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் ஞாபக மறதி என்பது, எல்லோருக்குமே இயற்கையாக இருக்கும் விஷயம்தான். சிலருக்கு அதிகப்படியான ஞாபகமறதி இருக்கும். இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள். படிக்கும் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல், பல பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள். இந்த பயிற்சியை மாணவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? என்றால் கட்டாயமில்லை. நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்கள் இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம். இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூளை சுறுசுறுப்பு அடைந்து, ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்தப் பயிற்சியினை நின்றபடியும் செய்யலாம். அமர்ந்த படியும் செய்யலாம். அவரவர் சௌகரியம் தான். முதலில் இந்தப் பயிற்சிக்கு, உங்கள் இரண்டு கைகளில் இருக்கும், ‘நடுவிரல் ஆள்காட்டிவிரல்’ இந்த இரண்டு விரல்களை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்ற மூன்று விரல்களை மடக்கி வைத்துக்கொள்ளுங்கள். நீட்டி வைத்திருக்கும் இந்த இரண்டு விரல்களைக் கொண்டு, உங்களது தாடையின், இரு பக்கங்களிலும் அழுத்தம் கொடுத்து கொடுத்து எடுக்க வேண்டும். அதாவது புரியும்படி சொன்னால், தாடையின் நடுப்பகுதி மேடாக இருக்கும். இரண்டு உதடுகளுக்கு கீழ் இருக்கும், தாடையின் இரண்டு பக்கத்திலும், உங்களது இரண்டு கைகளின் ஆள்காட்டிவிரல் நடுவிரலை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இரண்டு கைகளையும் ஒரே சமயத்தில் தாடையில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். உங்கள் விரல்களை கொண்டு அழுத்தம் கொடுப்பதும், விரல்களை எடுப்பதும் என்று 15 முறை இதே போன்று செய்ய வேண்டும்.

அதன் பின்பு தாடையின் நடுப்பகுதி லேசாக மேடாக இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் உங்களது கட்டை விரலை வைத்து லேசான முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். 25 லிருந்து 30 வினாடிகள் அப்படி வைக்க வேண்டும் அதாவது 30 Seconds. கட்டை விரலை எடுத்து எடுத்து வைக்க வேண்டாம். லேசான அழுத்தம் கொடுத்தபடியே தான் வைக்கவேண்டும். உங்களது தாடையின் மேடான பகுதியில் கட்டைவிரலை அழுத்தும்போது முகத்தில் இருக்கும் நரம்புகள், லேசாக அதிர்வடைவதை உங்களாலாலே உணர முடியும். (அதாவது விறுவிறு என்ற உணர்வு ஏற்படும்.)இந்த பயிற்சியை தினம்தோறும் செய்து வர, கட்டாயம் உங்களது நினைவாற்றல் அதிகரிக்க செய்யும். படிக்கும் மாணவர்களுக்கும், முக்கியமான அலுவலகப் பணியை வீட்டில் செய்பவர்களுக்கும் சில குறிப்புகளும் உண்டு. அது என்ன என்பதையும் பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

வளர்பிறை நாட்களில் மாணவர்கள் வீட்டில் படிக்கும் சமயத்தில், கிழக்கு பக்கமாக நோக்கி அமர்ந்து படிக்க வேண்டும். இதேபோல் முக்கியமான வேலைகளை செய்யும் தருணத்திலும், கிழக்கு பக்கமாக அமர்ந்து செய்யும் பட்சத்தில் அது விரைவாக முடியும். அதுமட்டுமல்லாமல் உங்களது படிக்கும் ஆர்வமும், வேலைசெய்யும் ஆர்வமும் அதிகரிக்கும். இதேபோல் தேய்பிறை சமயங்களில் படிக்கும்போதும், வேலை செய்யும் போது மேற்குப் பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொள்வது மிகவும் நல்லது. மாணவர்கள் படிக்கும் போது கையில் சின் முத்திரையை வைத்து படிக்கும் பழக்கத்தை கொண்டு வரலாம். மன தைரியத்தை வரவழைத்துக் கொள்ள ஆதி முத்திரையைப் பயன்படுத்தலாம். இவ்வாறாக முத்திரை பயிற்சியோடு சேர்ந்த மேலே குறிப்பிட்டுள்ள முறையான பயிற்சியையும் தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் ஞாபகசக்தி அதிகரிப்பதை உங்களாலேயே உணர முடியும். இது ஒரு சுலபமான பயிற்சி தான் இந்த பயிற்சியை மொத்தமாக செய்து முடிக்க ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.