உங்களுடைய வீட்டில் பொருளாதாரப் பிரச்சினை நீங்கி பண மழை பொழிய அட்சய திதி அன்று இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும் !!

அட்சய திரிதியை அன்று நம்முடைய வீட்டில் தங்கம், வெள்ளி, உப்பு போன்ற மங்களகரமான பொருட்களை வாங்கி வைத்தால் மேலும் மேலும் சேரும். ‘அக்ஷயம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி நாம் செய்யும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது பலமடங்கு பெருகும். பெரும்பாலும் இந்த தகவல்கள் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். சித்திரை மாதம் அமாவாசை திதியில் இருந்து, மூன்றாவது வளர்பிறை திதியை அட்சய திருதியை என்று சொல்லுவார்கள். இந்த சித்திரை மாதம் வரப்போகும் அட்சய திதி அன்று, உங்கள் வீட்டில், இந்த ஒரு சிறிய பூஜை செய்வதன் மூலம் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, செல்வ வளம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த பூஜை, அந்த பூஜையை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். வெளியில் போக முடியாத சூழ்நிலை இன்று நிலவிவருகிறது.

முடிந்தவரை இந்த பொருட்களை எல்லாம் அட்சய திதிக்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மண் பானையோ, செம்பு சொம்போ அல்லது பித்தளை சொம்பு இதில் ஏதாவது ஒன்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய தாம்பூலத் தட்டு, மஞ்சள், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், புனுகு, 3 ஒரு ரூபாய் நாணயம் இதோடு சேர்த்து நாட்டு மருந்து கடைகளில் விற்கும் ‘அழுகன்னி, தொழுகன்னி’ என்ற மூலிகையௌயும், சேர்த்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த அழுகன்னி தொழுகன்னிக்கு பணத்தை வசியம் பண்ணும் தன்மை உள்ளது. கல் உப்பை மட்டும் அட்சய திதி அன்று வாங்கிக் கொள்வது உத்தமம். முதலில் அட்சய திதிக்கு முந்தைய நாளில் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, அட்சய திதி அன்று காலை கல் உப்பை மட்டும் கடையிலிருந்து வாங்கி வந்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு ஒரு தாம்பாளத் தட்டின் மேல், நீங்கள் எடுத்து வைத்துள்ள சொம்பில் முதலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, சிறிதளவு மஞ்சள், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், புனுகு, மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள், இறுதியாக அழுகண்ணி தொழுகண்ணி மூலிகையை போட்டு விட வேண்டும். அதன்பின்பு உங்களுடைய வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினை தீர்ந்து, வருமானம் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனதார, வேண்டிக் கொள்ளுங்கள். இந்த கலச சொம்பை மகாலட்சுமியின் முன்பு வைத்து தீப தூப ஆராதனைகள் எல்லாம் செய்து முடிந்தால் சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக வைத்து அல்லது பால் பாயாசம் வைப்பது மிகவும் சிறப்பு. இந்தப் பூஜையை, அட்சயதிதி அன்று காலை 8 மணிக்கு முன்பாகவே நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்தக் கலசமானது மாலை நேரம் வரை மகாலட்சுமியின் முன்பே இருக்கட்டும்.

அதன்பின்பு அட்சயதிதி அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி தீப ஆராதனைகள் எல்லாம் காட்டிவிட்டு அந்த கலசத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் எடுத்து நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாணயங்களை ஒரு மஞ்சள் நிறத் துணியில் முடிச்சாக கட்டி வைப்பது சிறப்பு. செலவு செய்ய வேண்டாம். மீதமுள்ள பொருட்களை எல்லாம் நன்றாக பொடி செய்து சாம்பிராணி தூப பொடியில் கலந்து விடுங்கள். இந்த சாம்பிராணி தூபத்தை வாரம் இரண்டு முறை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தூபம் போட்டு, வீடு முழுவதும் காட்டி வர வீட்டில் இருக்கும் அனைத்து தரித்திர நிலையும் மாறி, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த கலச சொம்பில் வைத்திருக்கும் பொருட்களுக்கு எல்லாமே பண வசிய சக்தி அதிகம். குறிப்பாக இந்த அட்சய திருதியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பொருட்களுக்கு இன்னும் மகிமை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.