உங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற இந்த மூன்று தீபங்கள் போதும் !! எந்தெந்த வேண்டுதலுக்கு எந்தெந்த தீபம் ஏற்றலாம் ??

இறைவனிடம் வைக்கும் வேண்டுதலில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். சிலருக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும், சிலருக்கு தீராத நோய் தீர வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும், சிலருக்கு கஷ்டமே வரக்கூடாது என்ற வேண்டுதல் இருக்கும். அந்த வரிசையில் மங்களகரமான காரியங்கள் உங்கள் வீட்டில் தடை இல்லாமல் நடைபெற வேண்டுமென்றால், நல்ல உயர்ந்த வேலை கிடைக்க வேண்டும் என்றால், யாருடைய கண் திருஷ்டியும் வயிற்றெரிச்சலும் நம் மேல் படாமல் இருக்க வேண்டும் என்றால், என்ன தீபமேற்ற வேண்டும்? குறிப்பிட்ட இந்த மூன்று வேண்டுதல்களுக்கான தீபம் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்கள் வீட்டில் தொடங்கியிருக்கும் சுபநிகழ்ச்சி எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் வீட்டு பூஜை அறையில், சிறிது மஞ்சளை எடுத்து, தண்ணீர் ஊற்றி குழைத்து, ஒரு தாம்பாளத் தட்டில், அந்த மஞ்சளை வைத்து அதன்மேல் அகல் தீபம் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்கள் குல தெய்வத்தை வழிபட வேண்டும். இரண்டாவதாக, உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருந்தால், கொஞ்சம் சந்தனத்தை எடுத்து குழைத்து, தாம்பூல தட்டில் வைத்து, அதன் மேல் அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். (சந்தனக்கட்டையை இழைத்த, சந்தானம் என்றால் மிகவும் சிறப்பு அதுவே, மிக உயர்வான வேலை, உயர்பதவியாக கிடைக்க வேண்டும். நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருப்பவர்கள், ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் ஏலக்காயை பரப்பி, அதன்மேல் அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு, மகாலட்சுமியை வேண்டி தீபம் ஏற்றுவது உடனடி பலனை கொடுக்கும்.

(அதென்ன! எல்லாரும் மிக உயர்ந்த பதவி, பெரிய வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக்கூடாதா? என்று நினைக்காதீர்கள். அவரவருடைய தகுதி, அவருடைய படிப்பு என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது அடுத்தவர்களுடைய கண்திஸ்டி நம் மேல் படக்கூடாது. வீட்டில் ஆடம்பரமான சுப நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தால், அதன் மூலம் திருஷ்டி ஏற்பட்டு, அடுத்தவர்களின் கண் பார்வை நம்மேல் ஆழமாக பட்டிருக்கும் அல்லவா? அதன்மூலம் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள், ஒரு தாம்பாளத் தட்டில் சிறிதளவு குங்குமத்தை கொட்டி, பரப்பி அதன் மேல் அகல் தீபத்தை வைத்து, அம்பாளை வேண்டி நல்லெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இந்த தீபங்களை இத்தனை நாட்கள் தான் தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒருமுறை ஏற்றினாலே போதும், என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு சிறிய பரிகாரம் போல் தெரிந்தாலும், இந்த தீபங்களை ஏற்றி மனதார உங்கள் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் உண்டு என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.