உங்களுடைய வேண்டுதல் மகாலட்சுமியின் செவிகளில் உடனே கேட்க வேண்டுமா ?? பணப் பிரச்சினை உடனே தீர 3 ஏலக்காய்களை இப்படி வச்சா போதும் !!

நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளில், முதல் பிரச்சனையாக வந்து நிற்பது பணப்பிரச்சினை தான். பண பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு நீங்கள் எத்தனை பரிகாரத்தை செய்து வந்தாலும், மகாலட்சுமி வழிபாட்டை மட்டும் நிறுத்தவே கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் மகாலட்சுமியை நினைத்து தீபம் ஏற்றி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து பூஜை செய்வது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது என்பதை மறக்க வேண்டாம். சரி, இந்த பதிவின் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனையை, சுலபமாக தீர்க்கக் கூடிய அளவிற்கு, ஒரு சுலபமான சிறந்த பரிகாரத்தை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படிப்பட்ட பரிகாரங்கள் எல்லாம் மூடநம்பிக்கை என்று நம்புபவர்கள், பரிகாரத்தை செய்ய வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும், நம்பிக்கையோடு செய்து பலன் பெற்றால் போதும்.

பரிகாரத்திற்கு செல்வோமா? இந்த பரிகாரத்தை செய்வதற்கு மூன்று ஏலக்காய்களும், சிவப்பு நிற காட்டன் துணி மட்டுமே போதுமானது.முடிந்தவரை இந்த பரிகாரத்தை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே செய்து வைத்து விடுங்கள். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் குறிப்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு முடிந்தால் மல்லிகை பூ அல்லது தாமரைப்பூவை சூட்ட வேண்டும். அதன் பின்பாக, தரையில் பாய் அல்லது மன பலகை போட்டு அதன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். 3 ஏலக்காய்களை எடுத்து, வலது உள்ளங் கைகளில் வைத்து இருக்க மூடிக்கொண்டு, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மகாலட்சுமியிடம் வேண்டுதலாக வைத்து, பின்வரும் மந்திரத்தை 27 முறை கட்டாயம் உச்சரிக்கவேண்டும். 27 முறைக்கும் மேலாக ஒற்றைப்படையில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் நீங்கள் உச்சரித்து கொள்ளலாம்.

அது உங்களுடைய இஷ்டம். மந்திரத்தை நீங்கள் எத்தனை முறை உச்சரிக்கிறார்கள் என்பதைவிட, எவ்வளவு நம்பிக்கையோடு உச்சரிக்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களுக்கான மகாலட்சுமி மந்திரம் இதோ! ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம. மந்திரத்தை உச்சரித்த உடன், உங்கள் கையில் இருக்கும் அந்த ஏலக்காயை, தயாராக வைத்திருக்கும் சிவப்புத் துணியில் வைத்து, ஒரு நூல் போட்டு கட்டி உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில், யார் கண்ணுக்கும் படாத ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். 27 நாட்கள் கழித்து உங்களுடைய வீட்டின் அருகில், ஓடும் தண்ணீர் இருந்தால் அதில் இந்த முடித்துக் கொண்டு போய் போட்டுவிடலாம். அப்படி இல்லை என்றால் கால் படாத இடத்தில் ஒரு பேப்பரில் மடித்து போட்டு விடுங்கள்.

முடிச்சை தயார் செய்து வைத்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் ஏலக்காயை கையில் வைத்துக் கொள்ளாமல் கூட , சாதரணமாக உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரிப்பதன் மூலம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்கும். உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும். உங்களுடைய பிரச்சினை சின்ன பிரச்சினையாக, இருந்தால் 27 நாட்களில் உங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு, கட்டாயம் கிடைத்திருக்கும். அப்படியில்லை, பிரச்சினை கொஞ்சம் பெரியதாக இருக்கிறது என்றால், அந்த பிரச்சினைக்கான தீர்வை தேடிக்கொண்டே, இந்த பரிகாரத்தை மீண்டும் செய்து, மீண்டும் அந்த முடிச்சை தயார் செய்து, தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். 27 நாட்களுக்கு ஒரு முறை அந்த முடிச்சை புதியதாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் பரிகாரதிதற்கான பலனை உங்களால் முழுமையாக, விரைவாக பெற முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.