உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு பாவக் கணக்கு எழுதப்படும் !! இப்படிப்பட்ட பாவங்கள் கண்டிப்பா செஞ்சிருப்பீங்க !! செய்த பாவத்தை எப்படி திருத்துவது ??

பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தாலும், சிலரால் சில பாவங்களை செய்யாமல் இருக்க முடியாது. அதை பாவம் என்று நாம் தெரிந்தே செய்வதில்லை. நம்முடைய சூழ்நிலை, நமக்கு இருக்கும் கோபம், இவையெல்லாம் சேர்ந்து செய்யக்கூடாத ஒரு செயல்பாட்டை செய்தாலும், அது பாவக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. சரி. தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்துவிட்டீர்கள். அந்த பாவத்தை அழிச்சிட்டு புண்ணிய கணக்காக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதாவது நாம் செய்யப்போகும் பரிகாரமானது எப்படி இருக்கவேண்டும் என்றால், உண்மையிலேயே கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களை கைதூக்கி விடுவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சில செயல்பாட்டை தான் நாம் செய்ய வேண்டும். அது என்ன செயல்பாடுகள்?

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாழ்பவர்கள் இந்த பூமியில் ஏராளமானோர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, இருப்பவர்களுக்கு திரும்பத் திரும்பக் கொடுப்பது, நமக்கு எந்த புண்ணியத்தையும் சேர்க்காது. உண்மையாகவே சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பவர்களுக்கு மூன்று கைப்பிடி அளவு அரிசியை தானமாக கொடுத்தால் போதும். இதேபோல் பறவைகளின் இயல்பு என்பது சுதந்திரமாக பறந்து திரிவது தான். இன்றைக்கு அதை அழகிற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், கூண்டில் அடைத்து வளர்க்கின்றோம். உங்களால் முடிந்தால் ஒரு ஜோடி பறவைகளை காசு கொடுத்து வாங்கி, சுதந்திரமாக பறக்க விடுங்கள். கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கும் பறவையை வாங்கி, பறக்கவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.ஞாயிற்றுக்கிழமை அன்று, குறிப்பாக ஏழை பெண் குழந்தைகளுக்கு, உங்களால் முடிந்த நோட்டுப் புத்தகம், பேனா பென்சில் அல்லது அவர்களுக்கான படிப்பு செலவு இவைகளை செய்ய வேண்டும்.

நல்லது செய்வது என்று ஆகிவிட்டது. அதென்ன ஞாயிற்றுக்கிழமையில் தான் செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை செய்தால் நல்லது. முடியா விட்டால் உங்களால் எந்த கிழமையில் செய்யமுடியுமோ அந்த கிழமையில் செய்யுங்கள். தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவது நீங்கள் தீங்கு செய்வித்து விட்டதாக நினைத்து வருத்தம் அடைந்தால், அந்த நபருக்கு துளசிச் செடியை வாங்கி பரிசாக கொடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒரு மனநிம்மதி ஏற்படும். செய்த பாவத்திற்கான தண்டனையும் குறைக்கப்படும். இன்றைக்கு, நம்முடைய வாழ்க்கைத்துணையை திட்டிவிட்டு, சண்டை போட்டுவிட்டு, காலம் தள்ளி கவலைப்படுவதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். ஏனென்றால், ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்த பின்பு தான் கஷ்டம் என்றால் என்னவென்று தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்களும் இருக்கின்றார்களா?

அப்படி இருக்கும் பட்சத்தில் சுமங்கலிப் பெண்களுக்கு சிவப்பு நிறங்களில் கண்ணாடி வளையலை வாங்கி தானமாக கொடுங்கள். பெற்றோர்களை எதிர்த்து பேசுவது தான் இன்றைய பிள்ளைகளின் நாகரீகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், அது எவ்வளவு பெரிய பாவத்தை தேடித்தரும் என்றும், அது பெற்றவர்களுடைய மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தும் என்பதும், அந்தப் பிள்ளைகள், எப்போது பெற்றோர்களாக மாறுகிறார்களோ அப்போதுதான் அது புரியும். அப்போது தான் அவர்கள் செய்யும் தவறை உணர்கிறார்கள். உங்களுடைய பெற்றோர்களை நீங்கள் மனம் நோகும்படி பேசியிருந்தால், ஐந்து வகையான தானியங்களை வாங்கி அவர்கள் கைகளில் கொடுத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் மனது மகிழும்படி உங்களால் என்ன பொருட்களை வாங்கி கொடுக்க முடியுமோ, அதை வாங்கி பரிசாக கொடுக்கலாம். சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.