உங்கள் இஷ்ட தெய்வங்களை வீட்டிற்குள் வர செய்ய இதை கட்டாயம் செய்யுங்கள் !! கண்டிப்பாக பலன் கிடைக்கும் !!

நம்மில் பலருக்கும் நம் வீட்டில் தெய்வம் வாசம் செய்கிறதா? தெய்வ சக்தி குடிகொண்டிருக்கிறதா? தெய்வ சக்தி இருந்தால் ஏன் இவளவு பிரச்சனைகள் வருகிறது? இப்படி பல சந்தேகங்கள் கிளம்புவது வழக்கம். ஒரு வீட்டில் தெய்வ சக்தி இல்லை என்றால் அதற்கான காரணம் நாமே அன்றி வேறு யாரும் இல்லை. நாம் முறையாக சிலவற்றை செய்யாததின் விளைவாக தான் தெய்வ அனுக்கிரகம் நம்மை விட்டு நீங்குகிறது. சரி, தெய்வங்களை நாம் எப்படி நம் வீட்டிற்கு அழைத்து அவர்களது அனுகிரகங்களை பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். தெய்வங்களை வீட்டிற்குள் அழைக்கும் உரிமை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக உண்டு. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியே. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்தது.

பெண்கள் காலையில் எழுந்து சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவது வழக்கம். ஆனால் இன்று, பணத் தேவை காரணமாக பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அதனால் அவர்களால் ஆன்மீக ரீதியான பல செயல்களை செய்ய இயலுவதில்லை. அப்படி கைவிட்ட பழங்கங்களில் மிக முக்கியமான ஒன்று வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது. வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவதென்பது தெய்வங்களை ஈர்ப்பதற்கானம் ஒரு சூட்சுமமாகும். ஆனால் அதை நாம் தற்போது செய்வது கிடையாது. இன்றைய சூழலில் அதை செய்வது கொஞ்சம் கடினம் தான். சரி, அதை செய்ய முடியவில்லை என்றால் வேறு என்ன செய்யலாம்? மனதார இறைவனை வேண்டி வணங்கி, இறைவா நீங்கள் எங்கள் வீட்டிற்குள் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வாசலில் மஞ்சள் தெளிக்கலாம்.

குறிப்பாக வாசற்படிகளில் மஞ்சள் பூசி குங்குமம் வைப்பது அவசியம். இன்றைய காலத்தில் பலர் வாசற்படிகளில் மஞ்சள் வர்ண பெயிண்ட் அடித்து வைத்திருப்பதை நாம் பார்க்கிரோம். நிச்சயமாக அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகையால் முடிந்தவரை செவ்வாய், வெள்ளி கிழைமைகளிலாவது வாசலில் கோலமிட்டு, வாசற்படிகளில் மஞ்சள் பூசி குங்குமமிட வேண்டும். இறைவனை வாசல் வரை அழித்தாகிவிட்டது. அடுத்து என்ன செய்யலாம்? காலை மாலை என இரு வேலைகளிலும் வீட்டில் தீபம் ஏற்றி, நம் வீட்டில் குடிகொண்டுள்ள தெய்வங்களுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து, நம்மால் முடிந்தவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லை என்றால் வாழை பழமாவது வைக்கலாம். இப்படி ஒரு 48 எட்டு நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உங்களால் உணர முடியும்.