உங்கள் கைக்கு சில்லரையாக கடைகளில் தரக்கூடிய காசுகளை இப்படி செய்தால் கட்டாயம் உங்கள் கையில் பணம் சேரவே சேராது !!

பணம் என்றால் 100 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டுகளை தான் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டுமா? சில்லரையாக இருக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை சேகரித்து வைக்க கூடாதா? நம்மில் நிறைய பேர் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், இந்த சில்லரை காசுகளை மதிக்காமல், மதிக்காமல் என்றால் அதாவது அலட்சியமாக தான் கையாளுவோம். சில்லரை காசுகளை அதிகமாக சேமிப்பவர்கள் கையில், நோட்டும் அதிகமாக சேரும் என்பதுதில் தான் சூட்சம ரகசியமே அடங்கியுள்ளது. சரி, இந்த சிலரைக் காசை வைத்து, நாம் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா? நிறைய பேர் கையில் கிடைக்கும் நோட்டுக்களை பத்திரமாக பீரோவில் எடுத்து வைப்பார்கள். அதே, அந்த நோட்டை கொண்டுபோய் செலவு செய்து, அதில் மீதம் சில்லரையை எடுத்துக்கொண்டு வந்தால், அந்த சில்லரையை டிவியின் பக்கத்திலோ, அல்லது கம்ப்யூட்டர் டேபிளில் பக்கத்திலோ அல்லது துணிகளின் இடுக்கிலோ, அலமாரியில் விரித்து வைத்திருக்கும் பேப்பரின் அடியிலோ, சொருகி விடுவார்கள்.

அந்த சில்லரைக் காசுகளை சரியான முறையில் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள். உங்களுக்கு சில்லரை காசுகளை இப்படி ஆங்காங்கே சிதறி வைக்கும் பழக்கம் இருக்கின்றதா? இன்றிலிருந்து அதை மாற்றி பாருங்கள். ஒரு உண்டியலில் காசை சேர்க்க தொடங்குவதாக இருந்தாலும் கூட, அந்த உண்டியலில் முதலில் ரூபாய் நோட்டுக்களை போடக்கூடாது. வட்ட வடிவிலிருக்கும் நாணயங்களை போட்டால்தான் ராசி நமக்கு வந்து சேரும். முடிந்தால் அந்த உண்டியலில் இரண்டு கல் உப்பை போட்டு விட்டு அதன் பின்பு சில்லரை காசுகளை போட்டு பாருங்கள்! செவ்வக வடிவத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை விட, வட்ட வடிவத்தில் இருக்கும் நாணயங்களுக்கு தான், பணத்தை அதிகமாக ஈர்க்கும் வசிய தன்மை உள்ளது. இதற்காகத்தான் செவ்வக வடிவத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுடன், ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைப்பார்கள் 101, 201, 1001 என்று! உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு டப்பாவில் காசை சேகரித்து வைப்பதாக இருந்தாலும், உண்டியலில் காசை சேர்த்து வைப்பதாக இருந்தாலும், அதனுடைய வடிவம் முடிந்தவரை வட்ட வடிவமாக இருக்கும் டப்பாவிலோ, உண்டியலிலோ காசு சேர்க்க தொடங்குங்கள்.

குறிப்பாக உங்கள் வீட்டில் பயன்படுத்தாமல் மரக்கா, என்று சொல்லுவார்கள் அல்லவா ஒரு படி, 1/2 படி இதில் கூட சில்லரை காசுகளை செய்து வைத்தால் நல்ல ராசி கொடுக்கும். அந்த சில்லரை காசுகள் ரூபாய் நோட்டை போட்டு வைக்கலாம். நிச்சயம் உங்களது சேமிப்பு இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமே கிடையாது. சிலரெல்லாம் வீட்டில் சில்லரை காசுகள் அதிகமாக இருந்தால், அந்த சில்லரை காசுகள், சீக்கிரம் செலவாகி விடும் என்று அந்த காசையெல்லாம் கடைகளில் கொடுத்து விட்டு நோட்டுகளாக மாற்றி வைத்துக் கொள்வார்கள். முடிந்தவரை இதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எவ்வளவு சில்லரை காசுகள், சேர்ந்துகொண்டே இருக்கின்றதோ அந்த அளவிற்கு ரூபாய் நோட்டுகளும் மேலும் மேலும் சேரும் என்பது தான் உண்மை. இப்படி எல்லாம் சொன்னால் கட்டாயம் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். உதாரணத்திற்கு கோவில் உண்டியலில் நோட்டை விட அதிகமாக, சில்லரை காசுகள் தானே இருக்கும். இறைவனுக்காக வீட்டில் உண்டியல் வைத்தால், அதில் நம் முன்னோர்கள் சில்லறை காசைப் போட்டு தான் அதிகமாக சேர்த்து வைப்பார்கள்.

இப்படிப்பட்ட உண்டியல்களில் காசு மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கிறது அல்லவா? எவர் ஒருவர் தன் கையில் இருக்கும் சில்லரை காசுகளை அனாவசியமாக, அலட்சியமாக ஆங்காங்கே வைத்து சிதறவிடாமல், சேகரித்து அந்த சில்லறைக் காசுகளும் மொத்தமாக சேரும்போது, ஒரு பெரிய தொகையை கொடுக்கும் என்ற பொறுப்போடு, முறையாக மதிப்புக் கொடுத்து எடுத்து வைக்கின்றார்களோ அவர்களுடைய கையில் நிச்சயம் காசு தங்காமல் இருக்கவே இருக்காது. நீங்களும் சில்லரை காசுகளை அனாவசியமாக உங்கள் வீட்டில் ஆங்காங்கே வைக்கும் பழக்கம் இருந்தால், அந்த பழக்கத்தை இன்றிலிருந்து மாற்றித்தான் பாருங்களேன். அடுத்த மூன்று மாதம் கழித்து உங்களின் சேமிப்பு எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பதை நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள், இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது உங்களுக்கே புரிந்துவிடும். காசை சேர்பதற்கு இது ஒரு நல்ல தந்திர முறை. உங்களுக்கு வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. வேணாம்ன்னா விட்டுடுங்க!