உங்கள் தொழிலில் நஷ்டமா முன்னேற்றம் அடைய மகாலட்சுமி வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ??

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், சொந்த தொழில் செய்து, அதிகப்படியான லாபத்தை அடைவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும், நேர்மையாக தொழில் செய்து, அதில் அதிக லாபத்தை பார்ப்பது என்பது மிக மிக கஷ்டம். சொந்தத் தொழிலில் அதிகப்படியான லாபத்தை பெரவேண்டும் என்றால், என்ன செய்வது? அந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், மகாலட்சுமி வழிபாட்டை முறைப்படி எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொந்தத் தொழிலில் அதிகப்படியான லாபத்தை அடைய வேண்டுமென்றால், உங்களுடைய வேலையாட்களை, உங்களுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களை, நீங்கள் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கவேண்டியது அவசியம்.

அதாவது, உங்களுடைய தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய மாதச்சம்பளமாக இருந்தாலும், தினசரி கூலியாக இருந்தாலும் அவர்கள் செய்யும் வேலைக்கு சமமாக இருக்கவேண்டும். ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்கலாமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் செய்த வேலைக்கு குறைவான கூலியையோ, சம்பளத்தையோ நீங்கள் தரக்கூடாது.எந்த ஒரு முதலாளி தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளிக்கு, ‘உழைப்புக்கேற்ற ஊதியத்தை’ தருகின்றாரோ அவரது தொழில் சிறப்பாக மேலோங்கி செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடிய கருத்து என்று இதை தூக்கி போட்டு விட வேண்டாம். ஆன்மீக ரீதியாகவும் இதில் சில விஷயங்கள் அடங்கித்தான் இருக்கின்றது. ஒருவருடைய ஜாதகத்தில், சனி பகவானின் அம்சம் சரியான முறையில் அமைந்திருந்தால் அவருக்கு சொந்த தொழில் சிறப்பாக நடக்கும் என்பது ஜோதிட ரீதியான உண்மை.

இந்த இடத்தில் சனி பகவான் அம்சம் என்பது தொழிலாளர்களை குறிக்கின்றது. ஆகவே, ஒரு தொழில் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால், அந்த தொழில் பணிபுரியும் வேலையாட்கள் சரியான முறையில் அமைய வேண்டும். நமக்கு அமையக்கூடிய தொழிலாளர்கள் சரியான முறையில் அமைவதும், சரியான முறையில் அமையாததும் நம் கையில்தான் உள்ளது. அதாவது, முதலாளி இடத்தில் இருப்பவர்கள், ‘தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளி தானே! தன்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் வேலையால் தானே!’ என்று நினைத்து, அவர்களை தகாத வார்த்தையில் திட்டுவது, இழிவாக நடத்துவது போன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபடவே கூடாது. பரிகாரத்தை செய்வதற்கு முன்பு, முதலாளிகளிடம் இப்படிப்பட்ட தவறுகள் இருந்தால், அதை சரி செய்து கொண்டு, பின்பு பரிகாரத்தை செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை அன்று உங்கள் வீட்டில்(முதலாளியாக இருப்பவர்களது வீட்டில்), பருப்பு சம்பந்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள், ஏதாவது ஒன்றை சமைத்து, அதை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து, அதன்பின்பு, அந்த நைவேத்தியத்தை கொண்டு போய், உங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். எந்த பருப்பாக இருந்தாலும் சரி. பாசிப்பருப்பு பாயாசமாக இருந்தாலும், போதும். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். மனநிறைவோடு இந்த பிரசாதத்தை உங்களது தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டும். அடுத்ததாக, செவ்வாய்க்கிழமையில் பால் சேர்த்த இனிப்பு பலகாரம் ஏதாவது ஒன்றை செய்து, உங்கள் வீட்டில் மகாலட்சுமிக்கு நெய் விதமாக படைத்து, அந்த பலகாரத்தை கொண்டுபோய் உங்களது தொழிலாளர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். பால் பாயசமாக இருந்தாலும் போதும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களது தொழிலாளர்கள் உங்களுக்கு நேர்மையாகவும் இருப்பார்கள். அதேசமயம் நிரந்தரமாகவும் வேலையில் இருந்து, உங்களுக்கான அதிக லாபத்தை ஈட்டித் தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.