உங்கள் பெண் குழந்தைகளுக்கு நிறைய தங்கம் வாங்கி சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா ?? உங்க வீட்டு பெண் குழந்தைகளை இந்த முறையில் விளக்ககேற்ற சொல்லுங்கள் !!

நம் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்றால், அந்த பெண் குழந்தைகளுக்கு நிறைய தங்கம் வாங்கி, சேர்க்க வேண்டும் என்று தான், பெற்றவர்களுக்கு ஆசையிருக்கும். ஆனால், இன்றைய கால சூழ்நிலையில் ஒரு குண்டுமணி தங்கத்தை கூட நம்மால் வாங்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கின்றது. காரணம், விலைவாசி ஏற்றம், வருமானத்தில் குறைவு. சரி இருக்கின்ற தங்கத்தை அடகு போகாமல் பார்த்துக் கொள்ள முடியுமா, என்றால் அதற்கும் வழியில்லை. பற்றாக்குறை பட்ஜெட் தங்கத்தை அடகு வைக்க செய்கின்றது. வருகின்ற வருமானத்தை எப்படியாவது சேமித்து, தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தாலும், கையில் இருக்கின்ற தங்கம் அடகு கடைக்கு போக கூடாது என்று நினைப்பவர்களாக இருந்தாலும், கையில் கொஞ்சம் தங்கம் இருக்கின்றது, மேலும் மேலும் தங்கத்தை வாங்கி சேர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களிடத்தில் இருந்தாலும், உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பெண் பெண் குழந்தைகள் கையால், இந்த தீபத்தை ஏற்ற சொல்லுங்கள்.

பெண் குழந்தை இல்லாதவர்கள், குடும்பத் தலைவிகளே இந்த தீபத்தை ஏற்றலாம். அதிலொன்றும் தவறில்லை. முடிந்தவரை இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை காலையில் எட்டு மணிக்கு முன்பாக ஏற்றுவது மிகவும் சிறப்பானது. வெற்றிலை 2, கொட்டைப்பாக்கு 2, வாசனை மிகுந்த பூ ஒன்று, மண் அகல் விலங்குகள் 2, இந்த தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்கள் இவை மட்டும்தான். இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் தாராளமாக ஏற்றலாம். ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு வெற்றிலைகளை வைத்து, அதில் இரண்டு கொட்டைப்பாக்குகளை வைத்து, வெற்றிலையின் மேல் காலியான ஒரு மண் அகல் விளக்கை வைத்து விடுங்கள். அந்த மண் அகல் விளக்கு முழுவதுமாக உப்பைக் கொட்டி நிரப்பி, அந்த உப்பின் மேல் பக்கத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட பொருளை வைத்துவிடுங்கள். மோதிரம், மூக்குத்தி, கம்மல், திருகாணி எதுவாக இருந்தாலும் ஒரு குண்டுமணி தங்கம் இருந்தால் போதும்.

அதன்பின்பு அந்த தாம்பூலத் தட்டில் ஒரு அகல் தீபத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு மகாலட்சுமியையும், குலதெய்வத்தையும் நினைத்து, மனதார உங்கள் வீட்டில் தங்கம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று, உங்கள் வீட்டில் இருக்கும் உங்களுடைய பெண் குழந்தையை வேண்டிக்கொண்டு, தீபத்தை ஏற்றச் சொல்லுங்கள். வழிபாடு புரிந்ததா? ஒரு தாம்பூலத் தட்டு, அதில் இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, அந்த வெற்றிலையின் மேல் கல்லுப்பு நிரப்பப்பட்ட அகல் விளக்கு, கல் உப்பின் மேல், ஒரு குண்டுமணி தங்கம், தங்கத்தின் பக்கத்தில் ஒரு பூ. ஏற்றப்படும் தீபத்தை வெற்றிலையின் மேல் வைக்காதீர்கள். வெற்றிலைக்கு பக்கத்தில், அதே தாம்புல தட்டில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும் அவ்வளவுதான். தீபம் கிழக்கு நோக்கி பார்த்தவாறு எறியலாம். இத்தனை வாரங்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. தொடர்ந்து மூன்று வார வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்! சேமிப்பில் முன்னேற்றம் தெரிந்தால், தொடர்ந்து இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையில் செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சேமிப்பு பல மடங்காகப் பெருகி, அந்த சேமிப்பின் மூலம் தங்கம் வாங்க, இது ஒரு நல்ல பரிகாரமாக இருக்கும்.