உங்கள் முயற்சி எல்லாம் வெற்றி பெர வேண்டுமா ?? இந்த மூன்று பொருட்களையும் உங்கள் கையில் எடுத்து சென்றால் போதும் எந்த காரியத்திலும் தடை ஏற்படாது !!

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால், நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்கள், தோல்வியில் முடியாமல் இருந்தாலே போதும். அது, நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளாக இருந்தாலும் சரி, இறைவனிடம் வைக்கும் வேண்டுதல்களாக இருந்தாலும் சரி. எல்லா விஷயங்களிலும், எடுத்த முதல் மார்கதிலேயே, நமக்கு வெற்றி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்? சந்தோஷத்தோடு சேர்ந்த புத்துணர்ச்சியும் கிடைக்கும். காரிய தடை நீங்கவும், இறைவனிடம் நாம் வைக்கும் வேண்டுதல்கள் சீக்கிரமாகவே நிறைவேறவும் என்ன பரிகாரம் செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்த சிரமமும் தேவை இருக்காது.

பணச் செலவும் கிடையாது. பரிகாரத்திற்க்கு நமக்கு தேவைப்படும் அந்த மூன்று பொருட்கள் என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். சக்திவாய்ந்த மூலிகை இலைகள். இந்த மூலிகை இலைகளுக்கு, நேர்மறை ஆற்றலை வசியப்படுத்தும் தன்மை அதிகம் உண்டு என்றே சொல்லலாம். ஒன்று தொட்டாச்சிணுங்கி, இரண்டாவது வில்வ இலை, மூன்றாவது துளசி இலை, இந்த மூன்று இலைகளையும் தனித்தனியாக வைக்கும்போது, கிடைக்கக் கூடிய ஆற்றலை விட, ஒன்றாக சேர்த்து வைக்கும் போது கிடைக்கக்கூடிய ஆற்றலானது, மிக மிக அதிகமாகவே உள்ளது. நீங்கள் வேலைக்கு இன்டர்வியூக்கு செல்கிறீர்கள் என்றாலும், தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்த செல்கிறீர்கள் என்றாலும், சொத்து வாங்க செல்கிறீர்கள் என்றாலும் இப்படியாக, எந்த ஒரு சுப காரியத்திற்கு சென்றாலும், இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு பேப்பரிலோ அல்லது மஞ்சள் நிறத் துணியை மடித்து உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.

ஒரு கைக்குட்டையில் வைத்து மடித்து எடுத்துச் சென்றாலும் கூட போதும். நிச்சயம் உங்களது முயற்சி வெற்றி அடையும். தீராத கஷ்டம் தீர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்யும்போது கூட, உங்களது பிரார்த்தனைக்கு, பஞ்சபூதங்களும் செவிசாய்த்து, அந்த எம்பெருமான் உங்களது பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றி தர, உங்களது உள்ளங்கைகளில் இந்த மூன்று இலைகளையும் வைத்து வேண்டுதலை வைக்க வேண்டும். சாமி கும்பிடும் போது, இரு கைகளையும் சேர்த்து வைத்து சாமி கும்பிடுவார்கள் அல்லவா? இரண்டு உள்ளங்கைகளுக்கும் நடுவே இந்த இலையை வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்!இப்படி செய்யும்பட்சத்தில், உங்களுடைய வாழ்க்கையில் தடை என்பதே இருக்காது. தடையற்ற முன்னேற்றத்தை பெற இந்த மூன்று இலைகளும் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தடையே இல்லை என்றால், பின்பு என்ன? வெற்றி! வெற்றி! வெற்றி! சரி, கையில் வைத்து வேண்டிக் கொண்ட இந்த 3 இலைகளை என்ன செய்யலாம்? உங்களது வேண்டுதல்கள் முடிந்த பின்பு, இந்த இலைகளை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வாருங்கள். இலைகளைப் போட்டு சேகரிக்கும் அதே டப்பாவில், காசு போட்டு சேர்த்து வந்தால், அதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்ச நாட்களில் இந்த இலைகள் எல்லாம் காய ஆரம்பித்துவிடும். காய்ந்த இலைகளை நன்றாக பொடி செய்து, விபூதியில் கலந்து தினந்தோறும் நெற்றியில் இட்டுக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். திருநீற்றில் கலந்திருக்கும் இந்த இலைகளின், காய்ந்த தூல்கள் கூட நமக்கு வெற்றியைத் தேடித் தரும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்களும் இந்த மூன்று இலைகளை உங்களுடனே வைத்து தான் பாருங்களேன்! அதிர்ஷ்டம் கிடைத்தால் அதுவும் ஒரு வெற்றி தானே!