உங்கள் வாழ்க்கையில் இருக்கும் 4 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமா ?? நம் வீட்டில் உள்ள சுலபமான துளசி பரிகாரம் !!

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு குறைவில்லை. பிரச்சினைகளை தீர்க்கும் பரிகாரங்களுக்கும் குறைவில்லை. எத்தனை பரிகாரங்கள் இருந்தாலும், நம்முடைய பிரச்சினைக்கு எந்த பரிகாரம் தீர்வாக இருக்கும்? எந்த பரிகாரத்தை பின்பற்றினால் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது அவரவர் கையில்தான் உள்ளது. குழப்பமான சூழ்நிலையில் கூட, தெளிவாக சிந்திக்கும் திறமை நம்மிடம் இருந்தால் பிரச்சினையிலிருந்து சுலபமாகத் தப்பித்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் என்ன பிரச்சனை உள்ளது? அதற்கு நீங்கள் எடுக்கப்போகும் முடிவு தான் என்ன? இந்தப் பதிவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள போகும் துளசி பரிகாரம் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பயனை அடையலாம்.

உங்களுக்கான பரிகாரங்கள் இதோ.. உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சனையினாலோ அல்லது எதிர்மறை சக்தியினாலும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியினாலும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றதா? கண் திருஷ்டியின் மூலம் பிரச்சினையா? இந்த பிரச்சினைகளை தீர்க்க 5 துளசி இலைகளை எடுத்து, பித்தளை சொம்பில் இருக்கும் தண்ணீரில் போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் 24 மணி நேரம் வைக்க வேண்டும். அதன்பின்பு அந்த தண்ணீரை எடுத்து உங்கள் வீட்டில் வெளிப்பக்கத்தில், அதாவது நில வாசப்படிக்கு வெளியே உள்ள இடங்களில், அந்த தண்ணீரை தெளித்து விட வேண்டும். அதே நீரை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து, குளித்து வர பிரச்சனைகளிலிருந்து சுலபமாக விடுபடலாம். பிரச்சனை இருந்தால் தான் இதை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இந்த பழக்கத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை பெறலாம். சில பேரது வீட்டில், ஒரு சில குழந்தைகள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்படிதான் அறிவுரையை எடுத்து சொன்னாலும், நம் பேச்சை கேட்கவே மாட்டார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தினம் தோறும் மூன்று துளசி இலைகளை எடுத்து பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம். குருவி, துளசி இலைகளை விரும்பி சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து செய்துவர உங்கள் குழந்தையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை உங்களாலேயே உணர முடியும். சிலபேருக்கு சுபகாரிய தடை ஏற்படும். திருமணம் நடப்பதில் தடை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும். செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு நெய்தீபம் ஏற்றி வைத்து துளசி செடியை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறைந்து கொண்டே வரும். எப்படிப்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும், அதை தீர்க்கக்கூடிய வழி உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லையா? தடைகள் வந்து கொண்டே இருக்கின்றது. தொழிலில் முன்னேற்றம் அடைய வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று, துளசி செடிக்கு வெள்ளை நிற பால் பாயாசம், நைவேத்தியமாக செய்து வைத்து, நெய் தீபம் ஏற்றி மகா லட்சுமி தாயாரை மனதார நினைத்து வேண்டிக்கொண்டால் உங்கள் வியாபாரத்தில் இருக்கும் எப்படிப்பட்ட தடைக் கற்களும், படிக்கற்களாக மாறும். நீங்கள் நைவேத்தியமாக படைத்த பால் பாயாசத்தை, கன்னிப்பெண்களுக்கு தானமாக வழங்குவது இன்னும் சிறந்த பலனைத் தரும். சிறு குழந்தைகள், பெண் குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம். துளசி இலைகளை செடியிலிருந்து ஞாயிறு கிழமை, ஏகாதசி, துவாதசி, அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம், சூரிய கிரகணம் வரும் இந்த நாட்களில் கட்டாயம் பறிக்கக் கூடாது.