உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் மட்டும் பார்வர்கள் இந்த தவறுகளை எல்லாம் மறந்து கூட செய்து விடாதீர்கள் !!

நவ கிரகங்களில் சில கிரகங்கள் நமக்கு கெடு பலன்களை தருவதற்கென்றே படைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சனி பகவான் மற்றும் ராகு, கேது போன்ற கிரகங்கள் நம் ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லாமல் போகும் போது நம் வாழ்க்கையில், நம்மள வெச்சி செய்ற அளவுக்கு கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் என்று அனைத்துமே லைன் கட்டி நிற்கும். நம் கஷ்டங்கள் குறைய எந்த விஷயங்களை எல்லாம் நாம் நிச்சயம் செய்து விடக் கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். சனி பகவான் தன்னுடைய தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தீவிர சிவபக்தரான தன் தாயுடைய பக்தியை உணர்ந்தே உருவானவர். சனி பகவான் நமக்கு தரும் கெடுதல்களை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டுமென்றால் நாம் சனிபகவானை வணங்குவதை விட அவர் குருவாக நினைக்கும், சிவபெருமானை வணங்குவது எவ்வளவோ மேல்! சிவபெருமானுக்கு ஐஸ் வைத்தால், சனி பகவான் நிச்சயம் உருகி விடுவார்.

நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு கெடுபலன்களை உண்டாக்கக்கூடிய செயல்களாக சில செயல்கள் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த செயல்களை எல்லாம் நீங்கள் செய்தால், உங்களை நெருங்க நினைக்கும் தீய கிரகங்களுக்கு நீங்களே வந்து பிடித்துக் கொள்! என்று வழி விட்டதாக அர்த்தமாகிவிடும். இது எப்படி தெரியுமா இருக்கும்? நமக்கு நாமே ஆப்பு வைப்பது போல் இருக்கும். நாம் நம்முடைய வீட்டை எப்பொழுதுமே இருள் சூழ்ந்த நிலையில் விட்டு விடக் கூடாது. 5.30 மணி ஆனாலே அலாரம் வெச்சா மாதிரி மின் விளக்குகளை எல்லாம் போட்டு வைக்க வேண்டும். பூஜை அறையில் திருவிளக்கு ஏற்றி விட வேண்டும். சிலர் என்ன செய்வார்கள் என்றால் ஆறு மணி ஆகியும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். இது போல் செய்தால் உங்கள் கிரக நிலை நல்ல இருந்தா ஒண்ணும் ஆகாது.

ஆனா சரியில்லாத சமயத்தில் கெடு கிரகங்கள் உங்களைப் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். குளித்து விட்டு அங்கேயே நன்றாக ஈரத்தை துடைத்து விட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஈரத்துணியை உடுத்தி கொண்டு செல்வது தரித்திரத்தை ஏற்படுத்தும். அதே போல் தினமும் குளித்து விட வேண்டும். வேறு வழியே இல்லாத பட்சத்தில் நீங்கள் குளிக்காமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சோம்பல்தனம் பட்டு குளிக்காமல் சுத்தமாக இல்லாமல் நீங்கள் இருந்தால் அப்புறம் உங்களுக்கு பிரச்சனை தான் பார்த்துக் கொள்ளுங்கள். சுத்தமாக இருக்கும் இடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்வாள். அதே சுத்தமாக இல்லாமல் இருந்தால் மகாலட்சுமிக்கு பதிலாக இது போன்ற தீய கிரகங்கள் தான் நிச்சயம் வாசம் செய்யும். அதன் பிறகு உங்களுக்கு எது நடந்தாலும் அதற்கு கிரகங்கள் பொறுப்பில்லை அவ்வளவு தான். வீட்டையும் நம்மையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் கூட நாம் பார்த்திருப்போம்.

ஒரு பிராமணர் சரியாக கால்களை கழுவாமல் வீட்டிற்குள் சென்று விடுவார். அதனால் அவரை சனி பகவான் அதன் வழியாக சென்று பிடித்துக் கொள்வார். கால்களைக் கழுவாமல் சென்றதற்கே இந்த நிலைமை என்றால், நாம் செய்யும் தவறுகளை எல்லாம் சற்று யோசிக்கத் தான் செய்ய வேண்டும். அதே போல் முந்தைய நாள் உடுத்திய உடையை மறுபடியும் உடுத்திக் கொள்ளக் கூடாது. நீதி தேவதைக்கு அடுத்த படியாக நீதியை நிலை நாட்டுவதற்கு பிறந்திருக்கும் சனிபகவானும், நம்மை எப்போதும் ஒரு கண் வைத்து பார்த்துக் கொண்டே தான் இருப்பார். நாம் பிறருக்கு வஞ்சகம் செய்யும் பொழுது, தீங்கு இழைக்கும் பொழுது, கெட்டவார்த்தைகள் பேசும் பொழுது நம்முடைய கிரக நிலைகள் சரியாக இல்லை என்றால் நம்முடைய கதி அதோகதி தான். நம் வாழ்க்கையை கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதை நீங்கள் நம்புபவர்களாக இருந்தால் இதையும் நம்பித்தான் ஆக வேண்டும். நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும். உஷாராக இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் சொல்ல முடியும்.