உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோற்க்கவே கூடாது என்றால் பயம் இருக்கக்கூடாது !! மன பயத்தை போக்க வலிமையான எளிமையான பரிகாரம் இதோ !!

வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு விடும். ஆனால், இதையே சற்று மாற்றி கூறிப் பாருங்கள்! மனபயம் ஏற்பட்டாலே தோல்வியைத் தழுவுவார்கள். பயம் இல்லாதவர்கள் வெற்றி அடைவார்கள். இதை எப்படிக் கூறினாலும் சரி. ஆக மொத்தத்தில், மனிதனுடைய மனதில் எதற்கெடுத்தாலும் பயம் என்பது வரக்கூடாது. அவ்வளவுதான். பயம் இல்லாத வாழ்க்கை தான், தடுமாற்றம் இல்லாமல் நிலையாக செல்லும் என்பது உறுதி. சில பேருக்கெல்லாம் வாயை திறந்து பேசுவதற்கே பயம் இருக்கும்.

தனக்குத் தேவையானவற்றை வெளிப்படையாக கேட்பதற்கே பயப்படுவார்கள். ‘தனக்கு எது தேவையோ, அதை வெளிப்படையாக கேட்டு பெற்றுக் கொள்பவன், அந்த நேரத்தில், அந்த நிமிஷத்தில் மட்டும்தான் பார்ப்பவர்கள் கண்களுக்கு முட்டாளாக தெரியலாம்! ஆனால், கேட்கவேண்டும் என்று நினைத்து, கேட்டால், அது நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ, இதை நாம் கேட்பதன் மூலம் யாராவது நம்மை தவறாக எண்ணி விடுவார்களோ! என்ற பயத்துடன், அந்த விஷயத்தை, வெளிப்படையாக கேட்காமல் மனதிலேயே வைத்து பூட்டி கொள்பவன் தினம்தோறும் முட்டாளாக வாழ்கின்றான்’ என்பது தான் உண்மை.

இதற்கு காரணம் பயம். இந்த ஒரு விஷயம் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் எல்லோருக்குமே பொருந்தும். வாழ்க்கையில் வரக்கூடிய ஒவ்வொரு நிமிடத்தையும் வெற்றியில் கொண்டு செல்ல, பயம் கட்டாயம் இருக்கக் கூடாது. இதற்கு நம் மனதை தயார் செய்து கொள்ள என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும்? இது ஒரு சுலபமான பரிகாரம் தான். தண்ணீரை வைத்து! அதாவது நாம் குளிக்கப் போகும் சுடே தண்ணீராக இருந்தாலும் சரி, பச்சை தண்ணீராக இருந்தாலும் சரி அதை வைத்து செய்யக்கூடிய பரிகாரம். நீங்கள் குளிக்கப் போகும் அந்த தண்ணீரை, சுத்தமான பக்கெட்டில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். உங்களது ஆள்காட்டி விரலைக் கொண்டு, அந்த தண்ணீரில் ‘ஓம் கணபதியே காரியசித்தி சுவாகா’ இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை, உங்கள் ஆள்காட்டி விரலில், அந்த தண்ணீரில் எழுதினாலே போதும். எழுதிவிட்டு, அதன் பின்பாக அந்த தண்ணீரில் உங்கள் விருப்பம் போல் மேலுக்கு மட்டும் குளித்துக் கொள்ளலாம்.

தலைக்கு வேண்டும் என்றாலும் குளித்துக் கொள்ளலாம்.அதாவது குளிக்கும்போது விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு, நீங்கள் எடுக்க கூடிய காரியம், வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து குளிக்கும் போது உங்களது மனநிலை மாறிவிடும். உங்களுடைய எண்ணங்கள், நேர்மறையாக மாறிவிடும். ‘நாம் விநாயகரை வேண்டிக் கொண்டு ஸ்நானம் செய்திருக்கின்றோம். ஆகையால் இன்றைக்கு கட்டாயம் காரியசித்தி அடையும்.’ என்ற அந்த எண்ணம், உங்களுடைய அந்த ஒரு நாளை வெற்றிகரமாக மாற்றி உங்கள் கையில் தரும். நம்பிக்கையோடு செய்ய வேண்டிய பரிகாரம். தொடர்ந்து ஒரு 11 நாள் செய்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை கட்டாயம் உணரமுடியும். விக்னங்களை தீர்க்கக்கூடிய விநாயகர் வெற்றியை மட்டும் தான் உங்களுக்கு கொடுப்பார். அந்த வெற்றி, பயத்தை போக்கி தைரியத்தை தந்துவிடும். சுலபமான பரிகாரம். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.