உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க !! வேகமா முன்னேற வழி கிடைக்கும் !!

ஒரு மனிதனை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வது அவனுடைய எண்ணம் தான், என்று கூறினால் அது பொய் ஆகாது. ‘எண்ணம் போல் வாழ்க்கை’. ‘நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்’. உங்களை வாழ்க்கையை உயரத்திற்கு நீங்களே கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது உங்கள் எண்ணத்தில் தான் உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் மனதையும், எண்ணத்தையும் சிதறவிடாமல் ஒருநிலைப்படுத்தி நல்ல முறையில் வழி நடத்தினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி இலக்கை அடைய முடியும். இந்த பதிவில் சொல்லப்படும் குறிப்புகள் எல்லோருக்கும் அறிந்ததாக இருந்தாலும், அதை நீங்கள் மறுபரிசீலனை செய்து உங்கள் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். படித்ததோடு விட்டுவிட்டால் அதன் பலன் நமக்கு தெரியாது. நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி பார்க்கும் போதுதான் அதன் பலன் தெரியும். உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் இந்த பதிவிற்குள் செல்லலாமா? வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களாக இருந்தால், அவர்கள் கஞ்சத்தனம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். நமக்கு கிடைக்காத ஒரு பொருள் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதை யாருக்கும் கொடுக்கக்கூடாது. நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். என்றும் சிலர் நினைப்பது உண்டு. அதுதான் பணம். உங்கள் கையில் வரும் பணத்தை கொஞ்சம் இல்லாதவர்களுக்கும் கொடுக்கும் பழக்கம் உங்களுக்கு வரவேண்டும். இல்லை, இல்லை என்று சொல்வதை நிறுத்திவிட்டு, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு நம் கையில் பணம் உள்ளது என்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்லி இல்லாதவர்களுக்கு, கொடுப்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும், ‘நம் ஆசை நிறைவேறிவிட்டது’ என்று அப்படியே உட்கார்ந்து விடக்கூடாது. எப்படியாவது இருக்கும் நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஓடிக்கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஓடக்கூடாது‌.

வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஓடுங்கள். காசு மட்டும் தான் வாழ்க்கையா? என்ற கேள்வியை உங்கள் மனதிற்குள் கேட்டுக் கொண்டு ஓடுங்கள். விஷயம் இருக்கிறது. நாளைக்கு தேவையான பணம் உங்கள் கைகளில் இருந்தால், நீங்கள் மன அழுத்தம் இல்லாமல், உங்களுடைய எண்ணங்களை எந்தவித சேதாரமும் இல்லாமல் செயல்படுத்த முடியும். கையில் காசு இல்லை என்றால், எண்ணங்கள் சிதறும், மன அமைதி கிடைக்காது. பயம் ஏற்படும். நடுக்கம் ஏற்படும். செய்யும் வேலையில் தடுமாற்றம் உண்டாகிவிட்டால் தோல்விதான். (அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலையில் பாதியை, இன்றே கொஞ்சம் கஷ்டப்பட்டு செய்து வைத்து விட்டோம் என்றால், அடுத்த நாள் செய்யும் வேலை நமக்கு இன்னும் சுலபமாகி, அன்று நம்முடைய வேலை செய்யும் திறனானது இரண்டு மடங்கு அதிகரிக்கும். இதை சோதித்துப் பாருங்கள். புரிகிறதா? நாளைக்கான வேலையை இன்றே செய்து வைத்தால், அடுத்த நாளைக்கான வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். நாளைக்கு தேவையான பணத்தை இன்றை கையில் வைத்துக்கொண்டால், அடுத்தநாள் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆற்றல் தானாகவே அதிகரித்துவிடும். நம் மனதை மாற்றும் எத்தனையோ வகையான நல்ல புத்தகங்கள் இருக்கின்றது.

ஏதாவது ஒரு புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் நம் மனது இப்போது பூத்த பூ போல அழகாக இருக்கும். தனியாக அமர்ந்து இருக்கும் போது நம்முடைய வாழ்க்கையை பின்னோக்கி யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம்? இரண்டு வருடத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம்? இப்போது இவ்வளவு முன்னேறி இருப்பதற்கு என்ன காரணம்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். வெற்றிக்கான பதில் வெளி நபரிடம் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. ‘நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’ விவேகானந்தரின் கூற்று. வீட்டில் அடிக்கடி பார்க்கும் இடத்தில், சுவற்றில் ஒட்டி வைத்து பார்த்துக்கொண்டே இருங்கள். முடிந்தால் கண்ணாடியில் கூட ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். கண்ணாடியை அடிக்கடி பார்ப்போம் அல்லவா? உங்களுடைய Mind set தான் உங்கள் வாழ்க்கையை மேலே எடுத்துச் செல்லும். கீழேயும் தள்ளிவிடும். ஆகவே, உங்களது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நேர்மறையாக வைத்துக்கொள்ளுங்கள். எண்ணங்கள் நல்லதாக, புதியதாக தோன்றிக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர, குறுக்கு வழியையும், கெட்ட வழியையும் என்றும் சிந்திக்க கூடாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை தான். ஏதாவது ஒரு வழியை பின்பற்றினால் கூட உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.