உங்கள் வீட்டில் இந்த செடிகள் மட்டும் இருந்தால் எந்த விதமான திருஷ்டியும் உங்களை நெருங்கக்கூட செய்யாது தெரியுமா ??

கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க எதை எதையோ வாங்கி வீட்டு வாசலில் கட்டி வைக்கிறோம். அவைகள் நல்ல பலன்களை கொடுத்தாலும் அதை விட சிறந்த பரிகாரமாக வீட்டில் செடிகளை வளர்ப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு பலன்களை தருவது போல் மற்றவர்களின் கண்பார்வை திருஷ்டி, பொறாமை போன்றவை நம்மை அண்டாமல் இருக்க இந்த சில செடிகளை வீட்டில் வளர்த்தால் மிகவும் நல்லதாம். பில்லி, சூனியம், ஏவல் என்று நம் வீட்டை இந்தச் செடியை தாண்டி எதுவும் நுழையக் கூட முடியாதாம். அப்படி என்ன செடிகளை நாம் வளர்க்க வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

பொதுவாகவே நம் வளர்ச்சியை கண்டு அக்கம் பக்கத்தினர் முதல் உற்றார் உறவினர்கள் வரை பொறாமை படுவது உண்டு. ஒரு சிறு பொருளை புதிதாக நாம் வாங்கி விட்டாலும் இவர்களுக்கு எங்கிருந்து தான் பணம் வருகிறதோ? என்று நினைப்பார்கள். இப்படி மற்றவர்கள் நினைப்பது கூட கண் திருஷ்டி தான். இதற்காகவே ஒரு சிலர் ஏதாவது வாங்கினாலும் அதனை வெளியில் சொல்வதில்லை. எங்கு கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். உண்மையில் நீங்கள் பயப்படுவது சரிதான் என்று கூற வேண்டும். மற்றவர்களின் திருஷ்டி, பொறாமை போன்றவை நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அதிலும் குழந்தைகள் விஷயத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய குழந்தை நன்றாக சாப்பிட்டால் போதும். உடனே திருஷ்டி பட்டு விடும்.

நன்றாக சாப்பிட்டு விளையாடிய குழந்தை கூட மந்தமாகி விடும். இதைப் பலரும் அனுபவ பூர்வமாக பார்த்து இருப்பார்கள். இதனால் தான் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுதும், பால் கொடுக்கும் பொழுதும் மொத்தமாக எடுத்து வைத்துக் கொடுக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க சொல்லி பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். இது போன்ற எந்த திருஷ்டிகளும் உங்களை நெருங்காமல் இருக்க உங்கள் வீட்டில் இந்த 5 செடிகளை மட்டும் வளருங்கள். கண் திருஷ்டியை நெருங்க விடாமல் தடுக்கும் ஆற்றல் எந்த செடிகளுக்கு உண்டு என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் வாருங்கள். வீட்டில் முற்றம் மற்றும் இடம் காலியாக இருக்கும் அனைத்து பகுதிகளிலும் சிறு சிறு செடிகளை வளர்ப்பது நல்லது. அதில் குறிப்பாக தொட்டாசினிங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம் மற்றும் கற்றாழை செடிகள் வளர்ப்பது விசேஷமான சக்திகளை வீட்டினுள் பரப்பும்.

இந்த ஐந்து செடிகளும் கண் திருஷ்டியை போக்க வல்லது. உங்களை அழிக்க நினைக்கும் எந்த ஒரு சக்தியும் நெருங்கக்கூட முடியாது என்று கூறலாம். இதில் ஏதாவது ஒன்றை வளர்ப்பதை விட இந்த ஐந்தையும் வளர்த்தால் நீங்கள் வாழ்வில் ஜெயித்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த ஐந்து செடிகளும் ஒருசேர வளர்ப்பவர்களுக்கு அவர்களுடைய சந்ததியினர் வரை உண்டான பாவமும், சாபமும் நீங்கும் என்பது சாஸ்திர உண்மை. இந்தச் செடிகளை எதற்காக வளர்க்கிறார்கள்? என்று தெரியாமலே வளர்க்கிறார்கள் ஒரு சிலர். ஆனால் உண்மையில் இந்த செடிகள் ஒவ்வொன்றும் மகத்துவமான சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது. உடல் ஆரோக்கியமும், வீட்டின் நன்மையும் இந்த 5 செடிகளை வளர்த்து வந்தால் கிடைத்துவிடும். வீட்டில் கஷ்டங்கள், வறுமை போன்றவை நீங்கி செல்வ வளம் பெருகும்.