உங்கள் வீட்டில் இந்த தண்ணீரை மட்டும் தெளித்தால் போதும் !! நீங்கள் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி விடலாம் !!

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் விலகி ஓடிவிடும். தெரிந்தும் தெரியாமலும் நாம் எவ்வளவோ பாவங்களை செய்து கொண்டிருப்போம். அவைகள் எல்லாம் நீங்கிவிடும். உதாரணத்திற்கு நம்முடைய பாவ சாஸ்திரத்தின் படி பார்த்தால் தெரியாமல் செய்த பாவங்களுக்கு கூட தண்டனை உண்டு என்பது நியதி. அந்த பாவங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இந்த புனித தீர்த்தத்தை பல்வேறு வகையில் வீட்டில் பயன்படுத்தினால் நல்லது நடக்கும். தெரியாமல் செய்த பாவங்கள் என்பது ஒரு ஈ, எறும்புக்கும் செய்த பாவம் கூட கணக்கில் அடங்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த மதமானாலும், எந்த சமுதாயம் ஆனாலும் சிறு உயிருக்கு கூட தீங்கு இழைக்கக் கூடாது என்று தான் கூறுகிறது.

அதை மதிக்காமல், உணராமல் நாம் செய்யும் சிறு சிறு பாவங்கள் கூட நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்து விடுகிறது என்பது தான் உண்மை. சிலர் இவ்வாறு புலம்பிக் கொண்டே இருப்பார்கள்! ‘நான் என்னதான் பாவம் செய்தேனோ தெரியவில்லை!’, ‘நான் ஒரு பாவமும் அறியவில்லையே!’ எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்? என்பதை கேட்டிருப்போம். அதற்கு ஒரு வகையில் நாம் செய்யும் இந்த பாவங்கள் கூட காரணமாக இருக்கக்கூடும். சிறு உயிருக்கும் துரோகம் இழைப்பது, இதுவும் ஒரு உயிர் தான் என்பதை மதிக்காமல் இருப்பது, பிறருக்கு துன்பம் நேரும் பொழுது அதை வேடிக்கை பார்ப்பது என்பது கூட தெரியாமல் செய்யும் பாவங்கள் தான். மகாபாரதத்தில் திரௌபதியின் துகிலுரியப்பட்ட பொழுது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் குற்றவாளிகள் தான் என்று கீதை சொன்னது. அதே நீதி தான் கலியுகத்திலும். நமக்கென்ன வந்தது? நமக்கு எதுக்கு வம்பு?

என்பது போல் நீங்கள் விலகி சென்றால் அதற்குரிய தண்டனையை இந்த காலத்திலேயே அனுபவிக்க வேண்டும் என்பது தான் விதி. இப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே ஒரு விதத்தில் குற்றவாளிகள் தான். இதனை தவிர்க்கவே முடியாது. இது போன்ற சிறுசிறு பாவங்களில் இருந்து விமோசனம் பெற இந்த புனித தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். வாரம் ஒரு கிழமையில் பூஜை செய்யும் பொழுது பூஜை அறையை துடைப்பதற்கு இந்த தீர்த்தத்தை பயன்படுத்தலாம். அது போல் பூஜை செய்யப்படும் சுவாமி படங்களை இந்த தீர்த்தம் கொண்டு துடைத்தால் சகல விதத்திலும் உங்களுக்கு செல்வம் சேரும். முதலில் ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது பித்தளை பாத்திரத்தில் ஒரு சிறிய பாட்டில் பன்னீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதனுடன் 4 பச்சை கற்பூரம், 9 ஏலக்காய்களை நுணுக்கி போடுங்கள். இதனுடன் லவங்கம் 4, துளசி இலைகள் 10, மஞ்சள் தூள் சிறிதளவு, ஜவ்வாது சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவைகளை பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் ஸ்பூன் கொண்டு கைகள் படாமல் கலக்கி விட்டு மூடி போட்டு பத்திரமாக ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். உங்களிடம் கங்கா தீர்த்தம் இருந்தால் அதையும் சில சொட்டுக்கள் கலந்து வையுங்கள். இந்த தீர்த்தத்தை ஒரு முறை நீங்கள் செய்து வைத்து விட்டால் ஒரு மாதம் வரை பயன்படுத்த முடியும். 4 வாரங்கள் வரை இது போல் ஒவ்வொரு வாரத்திலும் வீடு முழுவதும் இந்த தீர்த்தத்தைக் கொண்டு துடைத்து, பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து, வீடு முழுவதும் தெளித்து கொள்ள வேண்டும். சுவாமி படங்கள் அனைத்தையும் இந்த தீர்த்தத்தைக் கொண்டு துடைத்து, மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் வீட்டிற்கு வெளியே கிழக்கு முகமாக நின்று கொண்டு வாசலில் தெளித்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பாவங்கள் நீங்கினாலே நமக்கு வரும் துன்பங்கள் குறையும், இயல்பாகவே நன்மைகளும், சுக போக வாழ்வும் கிட்டும். இழந்த மரியாதையும், செல்வங்களும் கிடைத்து விடும். நீங்களும் செய்து பயனடையுங்கள்.