உங்கள் வீட்டில் இந்த மரங்களை மட்டும் வளர்க்காதீங்க !! கண்டிப்பாக பிரச்சனை மடடும் தான் வரும் !!

இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் அதில் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அதே போல தாங்க.. தாவரங்கள் கூட நல்லதும் செய்யும். கெட்டதும் செய்யும். நாம தான் எச்சரிக்கையா இருந்துக்கனும். சில வகை தாவரங்களை வீட்டில் வளர்த்தால் அதிஷ்டம் வரும்னு சொல்வாங்க. அவை தெய்வீக மரங்களாகவும், செடிகளாகவும் நம்ம வீட்ட பாதுகாக்கும். துளசி, வாழை, கற்றாழை, மணி பிளாண்ட், மாதுளை, கொய்யா, நெல்லி போன்றவை அதிர்ஷ்டம் தரும் தாவரங்களாக பார்க்கப்படுகின்றன. இது போல நிறைய வகைகள் நமக்கு நன்மைகள் செய்யும் தாவரங்கள் உள்ளன. அந்த வரிசையில் இந்த வகை தாவரங்கள் பிரச்சனைகளை தான் தருகின்றன என்று சொல்லலாம். எந்த தாவரங்களை வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது என்பதை இப்பதிவில் காணலாம். முதலில் முட் செடிகளை கட்டாயம் வீட்டில் வளர்க்கக் கூடாது. முட்கள் இருக்கும் செடிகளில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை உண்டு. சிலர் அழகிற்காக வீட்டிற்குள் முட்கள் கொண்ட செடிகளை வளர்க்கிறார்கள்.

இந்த வகைச் செடிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கும். உதாரணத்திற்கு வீடுகளில் எலுமிச்சை மரத்தை வளர்க்க கூடாது என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமும் இதுதான். எலுமிச்சை மரத்தில் முட்கள் அதிகம் இருக்கும். எலுமிச்சை தேவ கனியாக பார்க்கப்பட்டாலும், வீடுகளில் வளர்க்க கூடாது என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. மற்ற எந்த தாவரங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சம் எழுமிச்சை மரத்திற்கு உண்டு. ஒரு மரத்திலிருந்து நீங்கள் ஒரு கனியை பறித்ததும் அதன் உயிர் பிரிந்துவிடும். அதனால் எலுமிச்சைக்கு அது காயும் வரை உயிராற்றல் இருக்கும். அதனால் தான் அது தெய்வீக காரியங்களுக்கும், மந்திர, மாந்திரீக காரியங்களுக்கும் கூட அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை மரத்திற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் நல்ல சக்திகளை வெளியிடும் ஆற்றல் உண்டு என்றாலும், எலுமிச்சை மரம் முட்கள் நிரம்பிய மரமாக இருப்பதாலும், சில தீய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுகிறார்கள். முட்கள் நிரம்பி, படர்ந்து வளர்வதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் இம்மரங்களை நாடி வரலாம்.

எனவே உங்கள் வீட்டில் முட்கள் கொண்ட எந்த செடிகளையும், மரங்களையும் வளர்க்க வேண்டாம். மரம் போன்றே சிறிய அளவுகளில் இருக்கும் போன்சாய் மரங்களும் வீட்டில் வளர்க்க கூடாத தாவர வகை தான். இவ்வகை தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்காமல் வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்கலாம். வெறும் அழகிற்காக வளர்க்கப்படும் இவ்வகைத் தாவரங்கள் வீட்டின் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது. போன்சாய் மட்டுமல்ல சிறிய சிறிய அளவுகளில் அழகிற்காக நீங்கள் செடிகள் வைத்தால் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதே போல வீட்டின் கிழக்கு திசையில் அதிக உயரம் உள்ள மரங்களையும், பருமன் உள்ள மரங்களையும் கட்டாயம் வளர்க்கக்கூடாது. புளியமரத்தை வீட்டில் கட்டாயம் வளர்க்க கூடாத மரமாக கூறலாம். புளிய மரத்துக்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் தன்மை உண்டு. நீங்கள் ஒரு வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால் அந்த இடத்தில் புளிய மரம் இல்லாத இடமாக வாங்க வேண்டும் என்று கூறுவார்கள், கேள்விப்பட்டதுண்டா?

அதற்கு காரணம் புளிய மரம் சுவாச கோளாறுகள், மூப்பு போன்ற பிரச்சனைகளை தரும். உடல் ஆரோக்கியதிற்கு கெடுதல் விளைவிக்கும். எனவே வீட்டில் புளிய மரத்தை வளர்க்க கூடாது. உங்கள் வீடுகளில் நீங்கள் வளர்க்கக்கூடிய செடிகள் அல்லது மரங்கள் பட்டுப் போய் விட்டால் அல்லது காய்ந்து போயிருந்தாலும் உடனே அதை அப்புறப்படுத்துவது நல்லது. முறையான பராமரிப்பின்றி வாடிவிடும் பூக்களும், தழைகளும் வெட்டிவிட வேண்டும். அதை அப்படியே விட்டு வைத்தால் வீட்டில் இருப்பவர்களின் மன நிம்மதி கெடும். குடும்பத்தில் சந்தோஷமான மனநிலை இருக்காது என்று கூறுவார்கள். இந்த வரிசையில் பருத்தி செடியையும் நம் வீட்டில் வளர்க்கக் கூடாத தாவரமாக பார்க்கப்படுகிறது. வீட்டிற்கு உள்ளேயும், வீட்டைச் சுற்றியும் பருத்தி செடி கட்டாயம் வைக்கக்கூடாது என்பார்கள். மேலும் அத்தி, விளா, பனை, வாகை, எட்டி, எருக்கு, ஆமணக்கு, ஆல மரம், நாவல் மரம் போன்றவற்றையும் வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது.