உங்கள் வீட்டில் ஏற்படும் தொடர் கெட்ட விஷயங்கள் உங்கள் மனதை குழப்பத்தில் வைத்துள்ளதா ?? வீட்டில் கெட்ட விஷயங்கள் ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரம் !!

வீட்டில் ஏற்படக்கூடிய தொடர் கெட்ட சகுனங்கள், அந்த குடும்பத்தில் உள்ளவர்களை மனக்குழப்பத்தில் தள்ளி இருக்கும். சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் வரப்போகின்றது என்பதை, வருவதற்கு முன் கூட்டியே உணர்த்துவது, கெட்ட சகுனங்கள் தான். அதாவது நாம் வழிபடும் தெய்வம் ‘உனக்கு வாழ்க்கையில் பிரச்சனை வர போகின்றது’ என்பதை சில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும் என்று சொல்கிறது சாஸ்திரம். அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு கெட்ட கனவுகள் தொடர்ந்துவந்து அச்சுறுத்தும். அந்த கெட்ட கனவில் உங்களுடைய வீட்டு உறுப்பினர்களுக்கு உயிருக்கு ஆபத்து வருவது போல கனவுகள் வரும். துர்சக்திகள் உங்கள் வீட்டுக்குள் நுழைவது போல கனவு வரும்.

கனவில் பாம்பு, போன்ற விஷ ஜந்துக்கள், வீட்டின் உள்ளே நுழைவது போல கனவு வரும். இந்த கனவுகள் அனைத்தும், கெடுதல் நடக்கப் போவதை உணர்த்தும் அறிகுறிகளாக சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் போது, வீட்டில் பூஜை நடக்கும்போது சுவாமி படங்கள் அல்லது இறந்தவர்களின் படங்கள் தானாக கீழே விழுந்து உடைவது. கண்ணாடிப் பொருட்கள் உடைவது போன்ற அபசகுனங்களும் கெட்டதை முன்கூட்டியே அறிவுறுத்த கூடியதாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் எதிர்பாராமல் தேனீக்கள் கூட்டமாக வந்து கூடு கட்ட ஆரம்பித்தால், அதுவும் ஒரு அபசகுனம் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை, உங்களுடைய வீட்டில், தேன் கூடு கட்டுவதை ஆரம்பத்திலேயே பார்த்தால் அந்த இடத்தில், தேன் கூடு கட்டாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதை முதலில் செய்து விடுங்கள்.

சரி, உங்களுடைய வீட்டில் மனக்குழப்பம், தெளிவில்லாத ஒரு நிலை, நிம்மதியற்ற சூழ்நிலை, நம்முடைய மனதிற்கு தோன்றும் ஏதோ ஒன்று சரி இல்லை என்று, இப்படி எதிர்மறை சூழ்நிலைகள் நிலவி வரும் பட்சத்தில், பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, கை மேல் பலன் தரும் பரிகாரங்களும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன், காளியம்மன், அங்காள பரமேஸ்வரி இப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களின் கோவில்கள் இருந்தால், அந்த கோவில்களுக்கு பௌர்ணமி தினத்தில் சென்று வேப்பெண்ணை தீபம் ஏற்றுவது உங்களுக்கு வரப்போகும் கெடுதலை கட்டாயம் தடுத்து நிறுத்தும். இந்த வேப்பெண்ணை தீபத்தை 18 அல்லது 27 என்ற கணக்கில் போடுவது மிகவும் சிறந்தது. கெட்ட சகுனமும் அபசகுனம் உங்களுடைய வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் முதலில் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து விட்டு, வீட்டில் கோமியம் தெளித்து விடவும்.

தொடர்ந்து 11 நாட்கள் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் சாம்பிராணி தூபம் கட்டாயம் போட வேண்டும்‌. அந்த சாம்பிராணி துன்பத்தில் மருதாணி விதையை தூவி சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எந்த ஒரு விஷயமும் உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லப்படவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள அபசகுனங்கள் உங்களுக்கும் உங்களுடைய வீட்டிற்கும் ஏற்பட்டால், கெட்டது நடந்தே தீரும் என்பது அர்த்தமில்லை. கெட்டது நடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் எல்லோரும் மன பயமும் குழப்பமும் அடைய வேண்டாம் . மேற்குறிப்பிட்ட அபசகுனங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் பட்சத்தில் அதனால் கட்டாயம் ஆபத்து வந்து விடும் என்று பயப்படாமல், வரப்போகின்ற ஆபத்தை முன்கூட்டியே தடுப்பதற்கு வழிபாட்டு முறைகள் தான் கட்டாயம் கைமேல் பலனை தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.