உங்கள் வீட்டில் தீய சக்தி இருப்பதை இந்த பரிகாரம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும் !! அதை விரட்டும் வழி இதோ !!

சிலரது வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் அடிக்கடி நடைபெறும். யாரோ ஒருவரின் குரல் கேட்பது போலவும், யாரோ உங்களைத் தொடுவது போலவும் நீங்கள் உணர்வீர்கள். உங்களது சிந்தனை எப்போதும் வேறொரு இடத்தில் இருக்கும். அந்த சமயத்தில் யார் உங்களிடம் பேசினாலும் உங்கள் காதுகளுக்கு கேட்காது. இரவில் உறங்கும் போது யாரோ உங்களை அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். இந்த உலகத்தில் நல்ல சக்திகள் இருப்பது போல், தீய சக்திகளும் உலாவிக் கொண்டு இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதை பற்றி அச்சம் கொள்ள தேவை இல்லை. மிக எளிதாக உங்கள் வீட்டிலேயே இந்த செயல்முறையை நீங்கள் செய்து பார்த்து உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை ஓரளவு கணித்து கொள்ள முடியும். ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்கள். எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் இனி காணலாம். உங்கள் வீட்டில் உண்மையில் ஏதோ ஒரு தீய சக்தி இருப்பதாக நீங்கள் உணர நேர்ந்தால் எந்த அச்சமும் இல்லாமல் இந்த பரிகாரத்தை முயன்று பாருங்கள்.

இறை சக்தியை மிஞ்சிய சக்தி ஒன்று உலகில் இல்லை என்பதை முதலில் உணருங்கள். உங்களை விட்டு பிரிய மனமில்லாத சில உறவுகள், தாங்கள் எதற்காக வந்தோமோ அந்தக் காரியத்தை நிறைவேற்றாமல் இறந்து போன சில ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்தை விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியேறுவது இல்லை. தங்களுக்கு பிரியமானவர்கள் உடன் அவர்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். – அவர்கள் ஆசைப்பட்டபடி அவர்களுக்கு பிடித்தவர்கள் வாழ்க்கை மாறிவிட்டால் அவர்களாகவே சென்று விடுவார்கள். உண்மையில் அவர்கள் உங்களுக்கு நல்லது தான் செய்வார்களே தவிர கெட்டது செய்வதில்லை. ஆனால் இந்த உலகிற்கு சொந்தமில்லாத அந்த ஆத்மா உங்கள் வீட்டில் இருப்பது இறை நெறிக்கு எதிரானது. இதனால் சில பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம். அதிலிருந்து வெளிவருவதற்கு மிகச்சிறந்த பரிகாரமாக இறை வழிபாடு ஒன்றே இருக்கும். அதுபோன்ற இல்லங்களில் தொடர்ந்து பூஜைகள் செய்து வர வேண்டும். வழிபாட்டில் முக்கியமாக இருப்பது தீப ஜோதி. அதாவது விளக்கின் ஒளி. இந்த விளக்கின் ஒளியை வைத்து உங்கள் இல்லத்தில் எந்த மாதிரியான சக்திகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விளக்கு மண் அகலாக மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த உலோக விளக்கையும் பயன்படுத்தவேண்டாம்.

மண் அகல் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் இந்த தீபத்தை வைத்து உற்று நோக்கிப் பாருங்கள். தீபஜோதி எப்பொழுதும் அடிப்பாகம் நீல நிறமாகவும், மேல்பாகம் ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். நீங்கள் பரிசோதனையில் ஈடுபடும் பொழுது இந்த நிலை தலைகீழாக மாறுவதை நீங்களே கண்கூடாக காணமுடியும். நீங்கள் ஒவ்வொரு அறையாக செல்லும் பொழுது எந்த அறையில் விளக்கின் நிறம் மாற்றம் அடைகிறதோ அந்த அறையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற விஷயம் எல்லா வீடுகளிலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. நமக்கே சில நேரங்களில் சந்தேகம் எழும். யாரோ நம்முடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அவர்கள் மட்டும் இதனை செய்து பார்ப்பது நல்லது. அப்படியே விளக்கின் நிறம் மாறும் பட்சத்தில் அந்த இடத்தில் விளக்கை வைத்துவிட்டு ஒரு சொம்பு நிறைய தண்ணீர் பக்கத்தில் வையுங்கள். குறைந்தது 12 நாட்களுக்கு இதுபோல் விளக்கு ஏற்றி தண்ணீர் வையுங்கள். விளக்கின் திரியையும் மற்றும் தண்ணீரையும் தினமும் மாற்றிவிடுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் தண்ணீர் வைத்து சோதனை செய்து பார்க்கும் பொழுது நிச்சயம் சிறிதளவாவது தண்ணீரின் அளவு குறைந்து போயிருக்கும்.

நல்ல சக்தியோ அல்லது தீய சக்தியோ எதுவாக இருந்தாலும் அவை பஞ்ச பூதங்களில் ஒன்றாக கலப்பது தான் உங்களுக்கு நல்லது. பஞ்ச பூதங்களில் மற்ற நான்கு வெளிப்படையாக இருக்கின்றன. தண்ணீர் ஒன்றே அதற்கு தேவையானது. அதனால்தான் தண்ணீர் வைக்க சொல்கிறார்கள். இப்படி தண்ணீர் வைக்கும் பொழுது 12 நாட்களுக்குள் அந்த சக்தி உங்கள் வீட்டை விட்டு நிச்சயம் வெளியேறிவிடும். அதற்குப் பிறகு உங்கள் வீட்டில் நீங்கள் இதற்குமுன் அனுபவித்த எந்த அமானுஷ்ய விஷயங்களும் நடைபெறாது. நீங்கள் எப்போதும் போல் உங்கள் பணிகளை பயமின்றி தொடரலாம். உங்கள் இல்லத்தில் எப்போதும் தெய்வீக சக்தியை உணரும்படி விளக்கேற்றி வையுங்கள். தீப தூபம் காண்பித்து, பச்சைக் கற்பூரம், துளசி இலைகள் கலந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வையுங்கள். மேற்கூறிய இந்த பரிகாரத்தை நீங்கள் அமாவாசை அன்று செய்வது இன்னும் சிறப்பான பலனை தரும். அமாவாசை நாளில் மிகுந்த சக்தி இருப்பதால் இன்னும் தெளிவாக உங்களால் உணர முடியும். இறைவனை நம்புங்கள். அவர் உங்களுக்கு நிச்சயம் துணையாக இருப்பார். இறைவனை முழுமையாக நம்புபவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் பய உணர்வை ஏற்படுத்தாது. இறை நெறியில் இருந்து விலகி இருப்பவர்களுக்கு தான் பயம் உண்டாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.