உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் முன் இனி இதை மட்டும் செய்ய மறந்து விடாதீர்கள் !! இப்படி விளக்கு ஏற்றினால் சகல செல்வமும் வந்து சேரும் !!

ஒவ்வொருவர் வீட்டிலும் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த துஷ்ட சக்திகளும் நெருங்கக் கூட முடியாது என்பார்கள். விளக்கு ஏற்றி வைத்த பின்னர், நாம் வைக்கும் வேண்டுதல்கள் நம்மைப் படைத்த அந்த சக்தியிடம் நேரடியாக போய் சேரும் என்பது ஐதீகம். அப்படி நம் வேண்டுதல்களை வைக்கும் பொழுது, விளக்கு ஏற்றும் முன் இதை செய்து விட்டு விளக்கு ஏற்றினால் நினைத்தது உடனே நிறைவேறும். அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிட்டும். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். பூஜை அறையில், பூஜை செய்யும் இடத்தில் விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது. குத்து விளக்காக இருந்தாலும், குபேர விளக்காக இருந்தாலும் அல்லது காமாட்சி அம்மன் விளக்காக இருந்தாலும் சரி விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது என்பது நியதி.

அல்லது வெறும் மேஜையில் வைத்தாலும், அது சரி அல்ல என்கிறது ஜோதிட சாஸ்திர நூல். அப்படி என்றால் நாம் விளக்கை எதன் மீது வைக்க வேண்டும்.? எப்படி வைக்க வேண்டும்? என்பதை பார்ப்போம். எப்பொழுதும் எந்த விளக்காக இருந்தாலும் அடியில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு அதன் மீது தான் விளக்கை வைக்க வேண்டும். அப்படியே எதுவும் இல்லாமல் வைத்தால் அது இறைவனை அவமதிப்பதாக அர்த்தம் ஆகிவிடும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குத்து விளக்காக ஏற்றி வைப்பது ஆனால் பச்சரிசியின் மீது வைக்கச் சொல்வார்கள். இது மிகவும் சிறந்த முறையாகும். ஒரு சிறு வாழை இலையை விரித்து, பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மேல் குத்துவிளக்கு வைத்து தான் தீபமேற்ற வேண்டும்.

அது போல் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது ஒரு பித்தளை தட்டு அல்லது பஞ்சலோகத்தால் ஆன தட்டின் மீது வைத்து விளக்கேற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த தட்டுடன் சேர்த்து, நீங்கள் சமைக்க பயன்படுத்தும் அரசி, உளுத்தம் பருப்பு, துவரை இந்த 3 பொருட்களை சிறிதளவு பரப்பி, ஒரு மஞ்சள் கிழங்கு வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு, அல்லது கஜலக்ஷ்மி விளக்கு வைத்து தீபம் ஏற்றினால் சகல நன்மைகளும் வந்து சேரும். சாஸ்திரத்திற்கு கொஞ்சமாக வைத்தாலே போதும். குடும்பத்தில் வறுமை என்பது எப்பொழுதும் இருக்காது. வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். இதனால் செல்வ வளம், நிம்மதியான மனநிலை உண்டாகும் என்பது ஐதீகம். இது போல் தீபமேற்றி வழிபடும் பொழுது, தெற்கு திசை தவிர மற்ற திசைகளில் தீபத்தின் ஜோதி எரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தெற்குத் திசையில் தீபம் ஏற்றுவது அவ்வளவு நல்லது அல்ல என்பார்கள். அகல் விளக்கு ஒன்றை தவிர, வேறு எந்த விளக்கையும் வெறும் தரையில் வைத்து ஏற்றக் கூடாது. நம் வீடுகளில் விளக்கு ஏற்றும் பொழுது எப்பொழுதும் மேற்கூறியபடி பொருட்களை வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் விரைவில் பணப் பிரச்சனை நீங்கும். பண பிரச்சனை நீங்க இந்த முறையில் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலன்களை தரும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் எல்லோருக்கும் வீட்டில் பணப் பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. அதனை சரி செய்ய, நம்முடைய பிரச்சினைகள், பிரார்த்தனைகள் தீர வெறும் தீபத்தை ஏற்றாமல், இது போல் ஏற்றி வழிபட்டால் நிறைய நன்மைகள் உண்டாகும்.