உங்கள் வீட்டு அலமாரி சாவிக்கொத்தில் இந்த கீச்செயின் இருந்தால் நிச்சயமாக பணம் சேராது !!

நாம் எல்லோரும் பணத்தை சேமித்து வைப்பது பீரோவில் தான். நம் வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருப்பதும் அந்த பீரோவில் தான். அந்த பீரோவை பாதுகாக்கும் சாவிக் கொத்தில், நாம் எப்படிப்பட்ட கீச்செயினை போட்டு பயன்படுத்தி வருகின்றோம் என்பதையும், ஜோதிட ரீதியாக நாம் கவனிக்க வேண்டியது மிக அவசியம். ஜோதிட ரீதியாக சாவிக் கொத்தில், இருக்கக்கூடாத கீ செயின் எது என்பதைப் பற்றியும், சாவிக் கொத்தில், எந்த கீ செயினை கோர்த்துக்கொண்டால் பணம் அதிகமாக சேரும் என்பதைப் பற்றியும், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதோடு சேர்த்து வரப்போகின்ற ஆடி மாதத்தில், வரக்கூடிய ஐந்து வெள்ளிக்கிழமையும், மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு, நம் பீரோவில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சில நாட்களில் ஆடிமாதம் தொடங்கப் போகின்றது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விசேஷமான மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே! ஆடிவெள்ளி ஐஸ்வர்யம் நிறைந்த வெள்ளையாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே, ஆடி மாதத்தில் வரக்கூடிய ஐந்து வெள்ளிக்கிழமைகளையும் தவறவிடாதீர்கள். ஆடி வெள்ளி வழிபாடு, நம் வீட்டில் ஐஸ்வர்யத்தை அதிகரிக்கும்.ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்றும், வீட்டில் அம்மனுக்கும், மகாலட்சுமிக்கும் மல்லிகை பூ அலங்காரம் செய்து, நிறைவான பூஜை செய்ய வேண்டியது அவசியம். ஆடி வெள்ளியன்று காலை 6.00 மணிக்கு மகாலட்சுமி பூஜையில், 2 வெற்றிலை மேல், 2 கொட்டைப்பாக்கு, ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம் 1, வாசனை நிறைந்த மல்லிகை பூ இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து பூஜை செய்த பின்பு, இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக வைத்து, வெற்றிலையில் மடித்து, ஒரு சிறிய நூல் போட்டு கட்டி, உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள். மீண்டும் அடுத்த வெள்ளி வரும்வரை, இந்த வெற்றிலை பொட்டலம் உங்கள் பீரோவில் இருக்கட்டும். (பழைய பொட்டலத்தை, அடுத்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலைத் தாண்டி வெளியே எடுத்து போடாதீர்கள். முடிந்தால் வியாழக்கிழமை அன்று போட்டுவிடுங்கள். முடியவில்லை என்றால், பீரோவில் இருந்து எடுத்து வெளியில் எங்காவது வைத்துவிட்டு, சனிக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியே எடுத்துப் போடுங்கள்.

ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய பொட்டலத்தை கால்படாத இடங்களிலோ, நீர்நிலைகளிலோ சேர்த்து விடுங்கள். 5 வாரம் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வரும் பட்சத்தில் உங்கள் கையில் இருக்கும் பண சேமிப்பும் அதிகரிக்கும். வீட்டில் என்றும் மகாலட்சுமி நினைத்திருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. சரி. அடுத்ததாக கீச்செயினுக்கு வருவோம். உங்கள் வீட்டு பீரோ சாவி கொத்தில் கட்டாயம் கைரினால் செய்யப்பட்ட கீச்செயின் இருக்கவே கூடாது. சில அழகு சாதனப் பொருட்கள் எல்லாம் கலர் நூல்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கீச்செயின்களை, சாவிக்கொத்தோடு கோர்க்க கூடாது. கயிறு என்பது கேதுவின் அம்சமாக சொல்லப்படும் ஒரு பொருள். இதை உங்கள் வீட்டு பீரோ சாவியோடு கோர்த்து வைத்திருந்தீர்கள் என்றால், அதை உடனே அகற்றிவிடுங்கள். இதன்மூலம் வீண்விரயம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எந்த கீ செயினை சாவி கொத்தோடு கோர்த்தால், அதிர்ஷ்டம் உண்டாகும்? சிறிய அளவில், வெள்ளியிலான மீன் உருவம் கொண்ட கீச்செயினை, வீட்டு சாவி, பீரோ சாவி கல்லாப்பெட்டி சாவி, இப்படி எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.

இப்படி வெள்ளியில் செய்யப்பட்ட மீன் கீச்செயின் அதிர்ஷ்டத்தை தீர்க்கக்கூடியது என்பது ஆன்மீக ரீதியான கருத்து. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் வீட்டு கிச்சனிலும் சிறிய அளவில் வெள்ளி மீனை மாட்டி வைத்து தான் பாருங்களேன்! முடிந்தால் வரப்போகும் ஆடி வெள்ளிக்கிழமை தினத்தில், இந்த மீனை வாங்கி உங்கள் வீட்டு பீரோ சாவி கொத்தோடு சேர்த்துவிடுங்கள்! எவ்வளவோ செலவு செய்கின்றோம். நம்முடைய நன்மைக்காக, வெள்ளியில் எடை குறைவான மீன் வாங்குவதில் தவறொன்றுமில்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும். இதேபோல், சில பேர் வீட்டில் அதிர்ஷ்டத்திற்காக மீனை வளர்த்து வருகிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. இருப்பினும், அந்த மீன் நீந்துவதற்கு ஏதுவான கண்ணாடி பெட்டியை வாங்கி வைத்து, அதில் மீனை விடுங்கள். மிகச் சிறிய மீன் தொட்டியில், மீனால் நீந்த முடியாத அளவிற்கு, சிறிய தொட்டியாக அமைக்கக் கூடாது. ஒரு உயிரை வைத்து சிரமப் படுத்தக் கூடாது, என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய நன்மைக்காகத்தான் மீனை வளர்க்கின்றோம். ஆனால், அந்த மீன் தண்ணீருக்குள், சுகந்திரமாக நீந்த முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தால், அது நமக்கு மேலும் கஷ்டத்தை உண்டாக்கி விடும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.