உங்க பர்ஸில் எப்பவுமே, இந்தப் ஒரு பொருளை வெச்சுக்கோங்க! உங்கள் பர்ஸில் இருக்கும் பணம் தீரவே தீராது !!

பொதுவாகவே பணம் வைக்கும் பர்ஸில் இரும்பு பொருட்கள் ஹேர்பின், ஊக்கு, சாவி, இப்படிப்பட்ட பொருட்களை வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். உங்கள் பர்ஸில் இப்படிப்பட்ட இரும்பு பொருட்களை வைக்கும் பட்சத்தில், கட்டாயம் அதில் இருக்கும் பணம் வீண் விரையம் ஆகத்தான் செய்யும். முடிந்தவரை, இந்த தவறை இனியும் செய்யாதீர்கள். சில பேர் பர்ஸை பொக்கிஷம் போல மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். இருந்தும் அதில் பணம் தங்கவே தங்காது. ஒரு சிலருக்கு என்னதான் கடுமையாக உழைத்தாலும் பணவரவு இருக்கவே இருக்காது. சில பேர் உழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஏதோ ஒரு சோம்பேறித்தனம் வந்து அவர்களை தடுத்துவிடும். இப்படிப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்மே ஒரு சின்ன தீர்வு உள்ளது.

அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி மஞ்சள் கொம்பிற்க்கு உள்ளது. உங்களுடைய பர்ஸில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், பர்ஸ்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கவும் ஒரு மஞ்சள் கொம்பை அந்த பர்ஸில் எப்போதுமே வைத்துக்கொள்ளுங்கள். அது கொம்பு மஞ்சளாக இருந்தாலும் சரி, குண்டு மஞ்சளாக இருந்தாலும் சரி. சிலபேர் எப்போதுமே சோம்பேறித்தனத்தோடு இருப்பார்கள். சுறுசுறுப்பாகவே இருக்க மாட்டார்கள். அவர்கள் செய்யும் வேலை செய்யும் இடத்திலும், சோம்பேறி என்ற பெயரை வாங்கி வைத்திருப்பார்கள். பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலையை செய்தால் தான் அவர்களிடத்தில் மகாலட்சுமி நிலைத்திருக்க முடியும் என்பதும் உண்மையான ஒரு கருத்து.

பெண்கள் வீட்டு வேலை செய்வதிலும் சுறுசுறுப்பாகதான் இருக்க வேண்டும். சிலசமயங்களில் சோம்பேறித்தனம் பிடித்துக்கொண்டு, மூதேவியின் சாயல் நம்முடைய முகத்தில் தெரியும். கண்களில் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு மண் அகல் விளக்கில், தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த ஜோதி நெருப்பில், மஞ்சள் கொம்பை காட்டுங்கள். மஞ்சள் கொம்பு, அந்தத் தீயில் கருகும் போது, லேசான வாசம் வரும். அதை முகரும் பட்சத்தில் நம் உடம்பில், நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு அடியில் விளையும் இந்த மஞ்சள் கொம்பிற்க்கு அதிக சக்தி உண்டு. எந்த ஒரு தோஷமாக இருந்தாலும், அதை நீக்கும் ஒரு பொருளாகவும் இது கருதப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் இது ஒரு கிருமிநாசினி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எப்போதுமே ஒரு மஞ்சள் கிழங்கை தங்களுடன் வைத்திருப்பது நல்ல பலனைத் தரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.