உழைத்து சம்பாதிக்கும் பணம் உங்கள் கைகளில் செலவாகாமல் இருக்க, அஷ்ட லட்சுமியை இப்படி வழிபாடு செய்ய வேண்டும் !!

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, உழைத்து சேர்த்து வைக்கும் செல்வம், நம்முடைய கைகளில், நிலைத்து நிற்க வேண்டும் என்றாலும் நம் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றாலும், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதிலும் நாம் சிக்கிக் கொள்ளாமல், நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்றாலும் மகாலட்சுமியின் அருளோடு சேர்ந்த அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும், அருளும் கட்டாயம் ஒருவருக்கு இருக்கவேண்டும். இப்படியாக பணம் சம்பந்தமான எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை காண அஷ்டலட்சுமிகளுடைய வழிபாட்டை தினசரி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய உள்ளங்கைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. இதனால் தான் காலையில் கண் விழிக்கும் போது நம்முடைய உள்ளங்கைகளில் விழிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இது நம்மில் பல பேருக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த உள்ளங்கை தரிசனத்தை இன்னும் கொஞ்சம் சிறந்த முறையில் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தன லட்சுமி, தானிய லட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி, விஜய லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, மகாலட்சுமி என்று சொல்லப்படும் இந்த அஷ்டலட்சுமிகளின் அருள் கடாட்சம் நமக்கு கிடைத்தால், பல பிரச்சினைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும். உங்கள் வீட்டு பூஜை அறையில் இறைவனை வழிபாடு செய்து விட்டு, உங்களுடைய உள்ளங்கைகளை பார்த்து, அஷ்ட லட்சுமிகளும் உங்கள் உள்ளங்கைகளில் வாசம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

வட்டவடிவில் லட்சுமிகள் அமர்ந்திருக்கும் அமைப்பு நாம் எல்லோரும் அறிந்ததே! அஷ்ட லட்சுமிகள், வட்டவடிவில், உங்களுடைய உள்ளங்கைகளிலும் அமர்ந்திருப்பதாக ஆவாகனம் செய்து கொண்டு, பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்து கொண்டு, உங்களுடைய இரண்டு கைகளையும் உங்களுடைய கண்களில் ஒற்றிக் கொண்டு, அதன்பின்பு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வெளியே கிளம்புங்கள். கட்டாயம், அஷ்டலட்சுமிகளும் உங்கள் கைகளிலேயே குடி வந்து, உங்கள் கைகளால் செய்யக்கூடிய பணப்பரிமாற்றமாக இருந்தாலும், ஒப்பந்த கையொப்பமாக இருந்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து தருவார்கள். உள்ளங்கைகளை பார்க்கும்போது அஷ்டலட்சுமிகளின் பெயர்களையும் வாய்விட்டு உச்சரித்து, உங்கள் உள்ளங்கைகளில், அஷ்ட லட்சுமிகளும், அமர்ந்திருப்பதாக மனக் கண்ணால் காண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வராத கடனை வசூல் செய்வதாக இருந்தாலும், பெரிய காண்ட்ராக்ட் உங்கள் பக்கம் கையெழுத்தாக வேண்டுமென்றாலும், வங்கியில் கடன் பெற வேண்டும் என்றாலும், அல்லது எப்படிப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றமாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்து விட்டு செல்லும் பட்சத்தில் அது உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. சாஸ்திரத்தில் இது ஒரு தாந்த்ரீக பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. தினந்தோறும் செய்கின்ற இறைவழிபாடு உங்களது உள்ளங்கைகளில் கற்பனையாக இந்த அஷ்டலட்சுமிகளை, உள்ளங்கைகளில் கொண்டுவந்து அமரச் செய்து தான் பாருங்களேன்! அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிட்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.