எக்காரணத்தைக் கொண்டும், வீட்டின் சமையல் அறையில், பெண்கள் இந்த தவறை மட்டும் தெரியாமல் கூட இனி செய்யவே செய்யாதீர்கள் !!இந்த சின்ன தவறு, வீட்டின் சந்தோஷத்தை கெடுத்து விடும் !!

நம்முடைய வீட்டில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பரிகாரங்களையும் தேடுவதைவிட, பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருக்கும் பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தான் முதலில் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அந்த காலத்தில் நம்முடைய அம்மாக்கள், பாட்டிமார்கள் செய்து வந்திருந்த பல விஷயங்களை நாகரீகம் என்ற பெயரில் இன்றைக்கும் நாம் மாற்றி வைத்துள்ளோம். பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது, நாகரீக வளர்ச்சி என்று சொல்லி, நமக்கு நாமே மாற்றிக்கொண்ட சாஸ்திரங்கள் தான். அந்த வரிசையில் சமையலறையில் பெண்கள் செய்யக் கூடிய ஒரு சிறு தவறின் மூலம், அந்த வீட்டில் ஐஸ்வர்யம் குறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்தத் தவறு பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்த தவறை செய்வதன் மூலமாகவா, நம் வீட்டில் பிரச்சனை வந்துவிடப் போகின்றது? என்று அலட்சியமாக, தொடர்ந்து இந்த தவறை செய்து கொண்டே இருந்தால், கட்டாயம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து கொண்டே செல்லும். நம்முடைய வீட்டை இரவு நேரங்களில் சுத்தப்படுத்த கூடாது அது சரிதான். ஆனால், சில பேர் சமையலறையை கூட இரவு நேரத்தில் சுத்தம் செய்தால் அதிர்ஷ்டம் போய்விடும் என்று எண்ணி, இரவு சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை கூட சுத்தப்படுத்தாமல், ஸ்டவ்வை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டு மறுநாள் காலையில் எழுந்த சுத்தம் செய்வார்கள். இது மிகப்பெரிய தவறு. அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சமையல் அறையை சுத்தம் செய்து அடுப்பை தூய்மைப்படுத்தி, மெழுகி விட்டு அதன் பின்புதான் தூங்கவே செல்வார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அடுப்பு கிடையாது. நம் வீட்டில் இருக்கும் கேஸ் ஸ்டவ்வை சுத்தமாக துடைத்துவிட்டு, ஷிங்கிள் இருக்கும் எச்சில் பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்துவிட்டு, மேடையை துடைத்து விட்டு அதன் பின்பு தூங்கச் செல்வது மிகவும் சிறப்பானது.இரவு நேரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் நம் சமயலறையில் எச்சில் பாத்திரம் இருக்கவே கூடாது. பெண்கள் அதை சுத்தம் செய்து முடித்துவிட்டு தான் தூங்க செல்ல வேண்டும். இதோடு சேர்த்து, தினம்தோறும் அடுப்பை வைத்திருக்கும் மேடையை தண்ணீர் தெளித்து நன்றாக தொடைத்துவிட்டு, அரிசி மாவில் சிறிய கோலம் ஒன்றைப் போட்டு, அந்த கோலத்திற்கு கீழ் பக்கத்தில் ‘ஸ்ரீ அக்ஷயம்’ என்ற ஒரு வார்த்தையை எழுதி விட்டு தூங்கச் செல்வது நம்முடைய வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை மேலும் மேலும் தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

https://1.bp.blogspot.com/-G0ZZan_w5Zc/YN8DkFp-icI/AAAAAAAAIcA/MvsKh9yzyLgEzQrqEreWj9FxsVZ2X7i9QCNcBGAsYHQ/s650/144.jpg

நம்முடைய குடும்பமும், நமக்கு வரக்கூடிய அடுத்த சந்ததியினருக்கும், எந்த காலத்திலும் சாப்பாட்டிற்கும் தன, தானியத்திருக்கும் பஞ்சம் வரக்கூடாது என்றால், உங்கள் வீட்டு சமையலறையில் இரவு நேரத்தில் இந்த எழுத்து இருக்க வேண்டும். ‘ஸ்ரீ அக்ஷயம்’ இப்படி எழுதினால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்து நிற்கும் என்று மகா பெரியவா சொல்லி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுப்பை சுத்தம் செய்யாமல் ஷிங்க்ல் இருக்கும் எச்சில் பாத்திரத்தை கழுவாமல், அப்படியே இந்த வார்த்தையை எழுதி வைப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் தன்னுடைய வீட்டையும் தன்னுடைய சமையலறையும் வீட்டின் பூஜை அறையையும் எப்படி பராமரித்து வருகின்றாரோ, அதைப் பொறுத்து தான், அந்த வீட்டில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்களாம். ஒரு வீட்டில் ஐஸ்வர்யமும் தன தானியமும் லக்ஷ்மி கடாட்சமும் எப்போதும் நிலப்பது என்பது அந்த வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் கையில்தான் உள்ளது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.