எதிரிகள் இனி உங்கள் பக்கம், தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள் !! எதிரிகளை ஓட ஓட விரட்ட கூடிய சக்தி இந்த ஒரு பரிகாரத்திற்கு உண்டு !! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் !!

நாம் எவ்வளவு தான் நல்ல மனிதராக இருந்தாலும் கூட நமக்கென்று சில எதிரிகள், நம்முடைய வாழ்க்கையில் கட்டாயம் இருக்கத்தான் செய்வார்கள். சில பேர் என்னதான் ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்று இருந்தாலும், பிரச்சினைகள் தேடி வரும்.’ எதிரிகளும் தேடி வந்து கொண்டே இருப்பார்கள். எதிரிகளை நேர் எதிராக சந்தித்து, முடிந்தவரை வெளிப்படையாகப் பேசி, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. என்ன செய்வது? நம் எதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஏதாவது ஒரு வழியில் இதற்கு தீர்வு காண தான் வேண்டும். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை சமாளிப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை சமாளிப்பது இன்னும் பெரிய கஷ்டமான விஷயம். எதிரிகள் நிறைந்த உங்களுடைய வாழ்க்கை சூழலை, எதிரிகளின் தாக்குதலிலிருந்து, காப்பாற்றிக் கொள்வதற்கு சுலபமான பரிகார வழிமுறைகளை நீங்கள் விரும்பினால், இந்த பதிவில் கொடுக்கப்படும், இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒன்பது நீளவாக்கில் இருக்கும். ஒன்பது ஸ்பூன் அளவு கல்லுப்பு. ஒரு துண்டு கற்பூரமும் இருந்தால் மட்டுமே போதும். கொஞ்சம் தீ மூட்டுவதற்கு கொட்டாங்குச்சிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சமித்து குச்சிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது வீட்டிற்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். பால்கனி இருந்தால் அங்கே செய்து கொள்ளலாம். அல்லது பின் வாசலுக்கு வெளியில் செய்யலாம். அல்லது மொட்டை மாடியில் செய்யலாம். உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போட இரும்பில், தனியாக கரண்டி வைத்திருப்பீர்கள் அல்லவா? அதையே இந்த பரிகாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்பிராணி தூபம் போடுவதற்கு தயார் செய்வது போல், கொஞ்சமாக கொட்டாங்குச்சியை வைத்து, கற்பூரம் போட்டு கொட்டாங்குச்சியை எரிய விட்டு, அதன் பின்பாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

கொட்டாங்குச்சிக்கு பதிலாக சமுத்து கட்டைகள் இருந்தாலும் அதற்கும் இதே விதிமுறை தான். ஒரு தட்டில் 9 நீளவாக்கில் இருக்கும் வரமிளகாய்களையும், கொஞ்சம் கல் உப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரமிளகாயாக எடுத்து உங்களுடைய எதிரியின் பெயரைச் சொல்லி, அவர் உங்கள் பக்கம் வரக்கூடாது என்றபடி உச்சரித்து, அந்த மிளகாயை நெருப்பில் போட்டு விட வேண்டும். அடுத்தபடியாக கொஞ்சம்போல் உப்பை எடுத்து உங்களது எதிரியின் பெயரை சொல்லி, அவர் உங்கள் பக்கம் வரக்கூடாது என்று சொல்லி, அந்த உப்பையும் நெருப்பில் போட்டு விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வரமிளகாய், கொஞ்சம் போல உப்பு இப்படி, ஒன்பது முறை எதிரியின் பெயரை உச்சரித்து நெருப்பில் இந்த இரண்டு பொருட்களை போடும் பட்சத்தில் உங்களுடைய எதிரிக்கு எந்த ஒரு ஆபத்தும் இருக்காது. ஆனால், அந்த எதிரி உங்களைப் பற்றிய நினைப்பில் இருந்து வெளிவந்து, அவருடைய வேலையை மட்டும் பார்க்க தொடங்கி விடுவார்.

கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், ‘கண்ணுக்குத் தெரியாத பிரச்சனை தரும் எதிரிகள், என்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்கு தடையாக இருக்கக்கூடாது என்று’ சொல்லி இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் தரும். வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று இரவு 7 லிருந்து 8 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை என்றால், தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் உடனடி பலனை கண்கூடாக காணமுடியும். ஆனால் பரிகாரத்தை தொடங்கக் கூடிய தினம் மட்டும் சனிக்கிழமையாக இருக்க வேண்டும். வாரம் ஒருமுறை செய்பவர்களாக இருந்தால் தொடர்ந்து 5 வாரங்கள் செய்யும் பட்சத்தில் உங்களுடைய பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர முடியும். நம்முடைய அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்கள், உறவினர்களும் நமக்கு எதிரியாக இருப்பார்கள். நாம் கொஞ்சம் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கு பொறுக்காது. அப்படிப்பட்டவர்களை நினைத்தும் இதை செய்யலாம். தொழிலில் எதிரியாக இருப்பவர்களை நினைத்தும் செய்யலாம். கட்டாயம் உங்கள் எதிரியின் உயிருக்கு ஆபத்து வராது. அவருடைய முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு தடையும் இருக்காது. அவர் உங்கள் பக்கம் வரவே மாட்டார் என்பது மட்டும் உறுதி. திருஷ்டி கழிப்பது போல தான் இந்த பரிகாரமும். நம்பிக்கை இருந்தால், நம்பிக்கையோடு நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.