எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் AK 61 படத்தின் டைட்டில் பற்றி லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்தின் திரைப்படத்தில் நடிக்கிறார், இது தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று அழைக்கப்படுகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். அவர் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ படத்திற்காக கைகோர்க்கவுள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டணத்தில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

By admin