எதுக்கு எடுத்தாலும் வீட்டிற்குள் அடிக்கடி பிரச்சினை வந்துகொண்டே இருக்கிறதா ?? அதற்கான தீர்வு காண இந்த ஓரே ஒரு பரிகாரம் போதும் !!

மனிதனாக பிறந்து விட்டால் பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. இருப்பினும், ஒரு மனிதனுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால், என்னதான் செய்வது? ஒரு பிரச்சினை முடிவுக்கு வருவதற்குள், அடுத்த பிரச்சினை தலை தூக்கி விடும். கணவரால் பிரச்சனை வரும். அதை முடிப்பதற்குள், பிள்ளைகளால் பிரச்சனை, அதை முடிப்பதற்குள் பணப்பிரச்சனை, கடன் பிரச்சனை, இதற்கிடையில் இவ்வளவு பாரங்களை சுமந்தால், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை! இப்படி சிலபேர் வாழ்க்கை, வாழ்வா சாவா? என்ற தடுமாற்றத்தோடு செல்லும். இப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? எந்த கோவிலுக்கு சென்றால் மன நிம்மதியை பெறலாம்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை சக்தியும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தான், பிரச்சனைகள் அதிகரிக்கும். ஒருவரின் எண்ணம் எதிர்மறையாக இருந்தாலும் சரி. நம்முடைய வீட்டில் எதிர்மறையாக ஆற்றல் இருந்தாலும் சரி. எது எப்படியாக இருந்தாலும் நெகட்டிவ் வைப்ரேஷன் ஆட்டிப்படைக்க தான் செய்யும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உடையவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் உக்கிரமான அம்மன் கோவில்களுக்கு சென்று, குங்குமம் வாங்கி கொடுப்பது நல்ல பலனைத் தரும். உங்களிடம் கெட்ட சக்திகள் குடிகொண்டு இருந்தாலும் கூட, அவைகள் தெரிந்து ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது‌‌. அம்மன் கோவில்களுக்கு அரளிப்பூவை வாங்கிக்கொடுத்து அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

இதோடு விட்டுவிடாமல், வாரம் ஒருமுறை நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அரச மரக் குச்சிகளை வாங்கிக்கொள்ளுங்கள். வென்கடுகு சிறிதளவு வாங்கிக்கொள்ளுங்கள். இதை இரும்பு பாத்திரத்தில் போட்டு தூபம் போடக்கூடாது. ஒரு மண் சட்டி அல்லது சிறியதாக இருக்கும் மண் தட்டு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் நான்கு அரச மர குச்சிகளை வைத்து, நான்கு வெண்கடுகு போட்டு, ஒரு கற்பூரம் வைத்து ஏற்றி தூபம் போடுங்கள். இந்தப் புகையை நீங்கள் சுவாசிப்பதும் நல்லது. உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களும் கட்டாயம் சுவாசிக்க வேண்டும். உங்கள் வீடு முழுவதும் காட்டுவதும் நல்லது. உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் எல்லா உறுப்பினர்களும் இருக்கும்போது இந்த தூபத்தை போடுவது மிகவும் நல்லது.

இந்த அரசமர குச்சியில் புகையை, சுவாசிக்கும் பட்சத்தில், அவர்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம் நீக்கப்பட்டு, கோபம் குறைக்கப்பட்டு, அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே நம்மால் வித்தியாசத்தை கண்டுபிடித்துவிட முடியும். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் சுலபமான பரிகாரம் தான். முடிந்தவரை நம்பிக்கையோடு அம்மன் வழிபாடு செய்து பலனடையுங்கள். இதோடு விட்டுவிடாமல், வீட்டில் சண்டை சச்சரவு என்று வரும்போது, யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து போகும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சேர எல்லோரும் அமர்ந்து பேசினாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். ‘இதனால்தான் பிரச்சினை வருகிறது’ என்பதை பேசி, ஒரு முடிவுக்கு வராமல், அவரவர்களாகவே ஏதாவது ஒன்றை தப்பு தப்பாக யோசித்துக்கொண்டு, பிரச்சனையை பெரிதாக்கி விட வேண்டாம். சண்டை சச்சரவுகள் குறைந்தால் தான் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும். லட்சுமி கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.