எதையெல்லாம் கெட்டது என்று ஒதுக்கி வைத்து விடுகின்றோமோ அவையெல்லாம் நமக்கு நன்மை தரக்கூடியவை தான் !! அவற்றில் சில உங்களுக்காக !!

அந்தக் கால சூழ்நிலையில் இருந்து, நம்முடைய வாழ்க்கைமுறையானது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, நவநாகரீகம் என்ற பெயரில், பல நன்மை தரக்கூடிய விஷயங்களை, கெட்டது என்று சொல்லி நாம் ஒதுக்கி வைத்துவிட்டோம். ஆனால், சொல்லப்போனால், கெட்டது என்று ஒதுக்கி வைத்திருக்கும், அனைத்துமே நமக்கு நன்மை தரக்கூடியவை தான். நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம் ‘வாழ்க்கையில் ரீவைன் பட்டன் இருந்தால், அதை அழுத்தி பின்னோக்கி சென்றால் நன்றாக இருக்கும்.’ என்று! சரி. நாம் கெட்டது என்று ஒதுக்கி வைத்திருக்கும் நல்லது எது? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

குதிரை எந்த இடத்தில் தண்ணீர் குடிக்கிறதோ, அந்த இடத்தில் இருக்கும் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து குடிப்பது மிகவும் நல்லது. ஒருபோதுமே குதிரை கெட்ட தண்ணீரை குடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பூனை எந்த இடத்தில் தூங்குகின்றதோ, அந்த இடத்தில் நீங்கள் தாராளமாக தூங்கலாம். அமைதி இல்லாத இடத்தில் எப்போதுமே பூனை தூங்காது என்பதும் உண்மை. பறவைகள் வெயில் காலத்தில், எந்த இடத்தில் தங்குகின்றதோ, எந்த இடத்தில் போய் ஓய்வு எடுக்கிறதோ, அந்த இடத்தில் கட்டாயம் நீரூற்று இருக்கும். கிணறு தோன்றுவதாக இருந்தாலும், போர் போடுவதாக இருந்தாலும் அந்த இடத்தை தேர்ந்தெடுக்கலாம்.. புழு துளைத்திருக்கும் காகாய்கறிகள் நல்ல காய்கறிகள். நச்சுப்பொருட்கள் உள்ள காய்கறிகளை புழு எப்போதுமே சாப்பிடாது. பூச்சிகள் அரித்து, பூச்சிகள் சாப்பிட்ட காளான்கள் நல்ல தரமான காளான்கள். விஷ காளானை, பூச்சிகள் உண்ணவே உண்ணாது.

முயல் எந்த இடத்தில் குழி தோன்றுகிறதோ, அந்த இடத்தில் மரத்தை நட்டால் செழிப்பாக வளரும். பறவைகள் எப்போது தூங்க செல்கிறதோ, அப்போது நீங்களும் தூங்கச் செல்லுங்கள். அது எப்போது கண் விழிக்கிறதோ, அதே நேரத்தில் நீங்களும் கண்விழிக்க வேண்டும். பின்பு பாருங்கள்! உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை. நீச்சல் கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. மீன்களைப் போல அடிக்கடி நீந்தும் பழக்கத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் தண்ணீரில் அடிக்கடி நீந்தினால், பூமியில் நடக்கும் போதுகூட, உற்சாகத்தை உணர்வீர்கள். அதாவது நீந்துவது போல! அடிக்கடி வானத்தைப் பார்க்க பழகுங்கள். உங்களது எண்ணங்கள் தெளிவு பெறும்.

அந்த எண்ணமும் வெளிச்சத்திற்கு வரும். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். நிறைய பேசாதீர்கள்! மரியாதை தானாக தேடிவரும். உங்களுடைய இதயத்தில் அமைதி குடிகொள்ளும். ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும். இப்போது புரிகிறதா? இவையெல்லாம் கெட்டது என்று நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். அவை எல்லாமே நம் வாழ்க்கைக்கு நன்மை தரக்கூடியவை தான். எவையெல்லாம் நன்மை என்று இன்று நாம் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகின்றமோ, அதில் பல தவறாகத்தான் இருக்கின்றது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.