எந்தவிதமான நோய் தொற்றும் நம்மை தாக்காமல் இருக்க இந்த தீபம் ஏற்றினால் போதும் !! இந்த தீபத்தை எப்படி தயார் செய்வது பாக்கலாம் வாங்க ??

இன்றைய சூழ்நிலையில் நம் உலகமே பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது? இந்த குழப்பமான மனநிலையில், ஆன்மீகத்தில் நம் மனதை ஈடுபடுத்துவது மிகச்சரியான ஒரு வழிதான். நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி கட்டாயம் இருக்கிறது. அதுதான் இறைவன். இதை நம்புபவர்கள் நிச்சயமாக தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனின் காலடியை சரண் அடைவார்கள். இப்படிப்பட்டவர்களின் இறை வழிபாட்டை நிறைவு செய்வதற்காக தான் இந்த பதிவு. நம் வீட்டில் ஏற்றப்படும் ஒரு தீபத்தின் மூலம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், நம் வீட்டை அண்டாது என்று சொன்னால் அந்த தீபத்தை ஏற்றி பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

நம்பிக்கையுள்ளவர்கள் இந்த தீபத்தை ஏற்றி கண்ணுக்குத் தெரியாத நோய்த் தொற்றில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளலாம். நோய் தொற்று கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்க இரண்டு பரிகாரங்கள் காஞ்சி பாலா பெரியவரினால் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, விளக்கெண்ணை ஊற்றி, திரிபோட்டு, ஒரு தாம்பூலத்தின் மேல்வைத்து, உங்கள் வீட்டு நுழைவாயிலில் உள்பகுதியில் வைத்துவிடுங்கள். இந்த தீபத்தை ஏற்ற வேண்டாம். தயார் செய்த தீபத்தை கிழக்கு நோக்கி வைத்தாலே போதும். வீட்டிற்குள் கெட்ட கிருமிகள் எதுவும் அண்டாது. இரண்டாவதாக சிறிதளவு கோதுமை மாவுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இவை இரண்டையும் நன்றாக கலந்து கொண்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

உங்கள் வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளார்களோ, அத்தனை உருண்டைகளாக பிடித்து, அந்த உருண்டைகளை அகல் தீபம் வடிவில் மாற்றிக்கொள்ள வேண்டும். தயார் செய்யப்பட்ட தீபங்களில் மஞ்சள் குங்குமம் வைத்து, நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் தயார் செய்து, ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து, தீபம் ஏற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும். எந்த ஒரு நோய்த்தொற்றும் உங்கள் வீட்டிற்குள் வராது என்று சொல்லுகிறது ஆன்மீகம். இது ஒரு சின்ன பரிகாரம் தான். ஒருமுறை செய்யக்கூடிய பரிகாரம் தான். உங்கள் வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளார்களோ, அத்தனை பேருக்கும் தீபம் ஏற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டில் மூன்று நபர்கள் இருந்தால், மூன்று கோதுமை மாவு தீபம் ஏற்றவேண்டும். அதற்கேற்றவாறு கோதுமை மாவைப் போட்டு மண் அகல் தீபம் அளவிற்கு, தீபத்தை தயார் செய்து கொண்டாலே போதுமானது.

இந்த தீபம் நெய் தீரும் வரை எரிந்து முடிந்ததும், தீபத்தை எடுத்து காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம். இல்லை என்றால் கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். ஓடும் நதிகள் அல்லது கடல் இருந்தால் அங்கு எடுத்துக்கொண்டு போய் போட்டுவிடலாம். வெளியில் போகும் சூழ்நிலை இப்போது இல்லை என்பதால் உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்துவிட்டு நிலைமை சரியான பின்பு கூட இதை கடலில் கொண்டுபோய் சேர்த்துவிடலாம். இறைவழிபாட்டில், மனதார உண்மையாக வேண்டப்படும் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது நிறைவேற்றப்படும். நம்மோடு சேர்த்து, நம் உலக மக்களையும் இந்த நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையை, இந்த தீபத்தை ஏற்றி நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். நம்பிக்கையோடு இருப்போம். விரைவாக, நல்ல தீர்வை அந்த இறைவன் நமக்கு கட்டாயம் காட்டுவார்.