எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவும், உங்கள் கைகளால் இந்தக் குறியீட்டை 9 முறை எழுதிவிட்டு தொடங்கினால் நிச்சயம் வெற்றிதான்.

நாம் தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், அது வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்பது தான், எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. நாம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கும், வெற்றி பாதையில் செல்வதற்கும், நாம் தொடங்கும் ஒரு செயலினை நல்ல நாட்களில், நல்ல நேரத்தில், நல்ல மனதோடு தொடங்குவது வெற்றி தரும். கூடுமானவரை நல்ல செயலை தொடங்குவதற்கு முன்பு அனைவரும் நல்ல நேரம் பார்ப்பது பழக்கம்தான். சில சமயங்களில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், நல்ல நேரத்தில் தொடங்கினாலும் தோல்வியை சந்திக்க நேரிடும். இது இயற்கைதான். ஆனால் முடிந்தவரை நம் தோல்வியை சந்திக்காமல், பிரச்சினைகளை அதிகப்படியாக எதிர் கொள்ளாமல், சுலபமான முறையில் ஜெயிக்க வேண்டுமென்றால் சில தந்திரங்களை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தப்பதிவில் குறிப்பிடப்படும் இந்த சூட்சமத்தை பயன்படுத்தி, பலபேர் சுலபமாக வெற்றி அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் வெற்றி அடைய வேண்டுமா? நம்பிக்கையுள்ளவர்கள் இந்தப் பதிவை படித்து பயன் பெற்றுக்கொள்ளலாம். நாம் தொடங்கும் எந்த ஒரு காரியத்திற்கும் மூலாதாரமாகவும், அடிப்படையாகவும் அமைந்திருப்பது பஞ்சபூதங்கள் தான். பஞ்சபூதங்களின் உதவி இல்லாமல் நம்மால் வாழ முடியாது. பஞ்சபூதங்களின் உதவியில்லாமல் எந்த ஒரு தொழிலையும் செய்யவும் முடியாது. எந்த செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் முதலில் பஞ்சபூதங்களிடம் அனுமதி பெற்று, பஞ்சபூதங்களின் ஆசீர்வாதத்தை பெற்று தொடங்குவது நல்ல பலனைத் தரும். உங்களது செயல்பாட்டை தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, உங்களது மனதினை ஒரு நிலைப்படுத்தி அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு வர வேண்டும். இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல முதலில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஐந்து முறை மூச்சை உள்வாங்கி, வெளியிடுங்கள். ஐந்து நிமிடத்தில் உங்களது மனது ஒரு நிலைப்பட்டு இருக்கும். கண்களை மூடிக்கொண்டு பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றின் பெயராக வாய்விட்டு உச்சரிக்கலாம்.

இப்படியாக வாய்விட்டுச் சொல்லி வேண்டுவது நல்ல பலனைத் தரும்: ‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஐம்பூதங்களாலான நீங்கள், என்னுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்னுடைய செயல்பாட்டில் ஐம்பூதங்களினால் எந்த ஒரு தடங்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது. என்னுடைய குடும்பத்தையும், என்னுடைய தொழிலையும், முன்னேற்றும் பொறுப்பு ஐம்பூதங்களான உங்கள் கையில் ஒப்படைத்து விட்டு, என்னுடைய செயல்பாட்டை செயல்படுத்த போகின்றேன்.’ என்றபடி வாய்திறந்து கூறுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.இதன்மூலம் ஐம்பூதங்களின் ஆசீர்வாதத்தையும் நம்மால் பெற முடியும். அதன் பின்பு மெதுவாக கண்களை திறந்து உங்களது உள்ளங்கைகளை பார்த்து, முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இந்த தியானத்தை தொடங்குவதற்கு முன்பாகவே ஒன்பது வெள்ளைத் தாள்களை உங்கள் அருகில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் குங்குமத்தை தொட்டு ஒவ்வொரு தாளிலும், ஒவ்வொரு ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, நான்கு மூலைகளிலும் நான்கு புள்ளிகளை வைத்து விடவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் போல் வரைய வேண்டும். உங்கள் கையில் இருக்கும் ஒன்பது தாளிலும் இந்த ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட பின்பு, அதை மடித்து உங்கள் உள்ளங்கைகளில் ஒருமுறை வைத்து, பஞ்ச பூதங்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் தொடங்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நிச்சயம் அதில் வரப்போகும் தடைகள் எல்லாம் குறையுமே தவிர, அதிகரிக்கவே அதிகரிக்காது. உயிருடன் நம் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பஞ்சபூதங்களை நீங்கள், உங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள் என்பதுதான் இதன் அர்த்தம். தடைகள் குறைந்து, விரைவாக முன்னேற வழிவகுக்கும் பரிகாரம் தானே, தவிர தடைகளே வராமல் வாழ்க்கையின் உச்சிக்கு சென்று விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.