எந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது என்று தெரிந்தால் நீங்களே வியந்து போவீர்கள் !!

கோவில் என்றாலே அது சக்தி வாய்ந்த இடம் தான். அதிலும் குறிப்பாக சில கோவில்கள் அதிக வலிமை உள்ள சக்திகளைப் பெற்று விளங்கும். அந்த கோவில்களை எல்லாம் கண்டுபிடிப்பது அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே முடியும். அதிக தெய்வீக சக்தி நிறைந்துள்ள பல கோவில்கள், நம் தாய்த் திருநாட்டில் எழுந்தருளியுள்ளன என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அந்த வகையில் எந்த கோவில்களில் அதிக சக்தி இருக்கும்? என்பதை சில விஷயங்களை வைத்து நம்மால் கண்டுபிடிக்க முடியும். அதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? எந்த கோவிலில் அதிக சக்தி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள மேலும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விசேஷ வரலாறுகளும், விருட்சங்களும் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஸ்தல புராணமும், வரலாறு போன்றவையும் ஆதிகாலம் முதல் மிகவும் அற்புதம் வாய்ந்தவையாக திகழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு புராணத்தை கேட்கும் பொழுதும், அங்கு விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் அமைந்துள்ள சிற்பக் கலைகளை பார்க்கும் பொழுதும் மெய் சிலிர்த்துப் போகிறது அல்லவா?சில கோவில்களுக்குள் சாதாரணமாக நம்மால் சென்று வந்துவிட முடியும். ஆனால் ஒரு சில கோவில்களுக்கு செல்லும் பொழுதே உடலில் ஒருவித நல்ல அதிர்வுகள் உண்டாகும். இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? சென்று வீட்டிற்கு வந்த பின்னால் மனம் அமைதியுடன் ஒருநிலையில் இருக்கும். எதைப் பற்றிய சிந்தனையும் அந்த நேரத்தில் நமக்கு வராது அத்தகைய கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. கோவில் என்றாலே விருட்சமும் நிச்சயம் இருக்க வேண்டும். விருட்சம் இல்லாத கோவில்கள் அவ்வளவு சக்தி உடையதாக இருப்பதில்லை. பழங்காலக் கோவில்களில் இருக்கும் ஸ்தல விருட்சம் தனி மதிப்புடையது. விருட்சத்திற்கு வழிபாடுகளும், பூஜை, புனஸ்காரங்கள், ஆராதனைகளும், அர்ச்சனைகளும் கூட செய்யப்படுவது உண்டு. தெய்வ சிலைகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அந்த ஸ்தலத்தில் இருக்கும் ஸ்தல விருட்சமும் மிகவும் முக்கியமான ஒன்று.

விருட்சத்தை சுற்றிலும் புற்று எழுந்தருளியிருப்பது இன்னும் விசேஷ சக்தி பெற்றது. அவற்றை எல்லாம் மனிதன் உருவாக்குவது கிடையாது. மனித அறிவுக்கு எட்டாத, கண்களுக்கு புலப்படாத அபூர்வ சக்திகள் இருப்பதற்கு சான்றாக இது போன்ற விஷயங்கள் எப்போதும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது. கோவில் என்றால் எப்படி விருட்சம் இருக்க வேண்டுமோ, அதே போல் தான் கொடி மரமும் கட்டாயம் இருக்க வேண்டும். கொடிமரம் இருக்கும் கோவில்கள் எல்லாம் அதிக சக்தி வாய்ந்தவையாக சாஸ்திரம் கூறுகிறது. தெய்வ விக்ரகங்களுக்கு எப்படி நாம் தரிசனம் பெற்று ஆசி வாங்கி வருகிறோமோ, அதே போல கொடிமரத்தை தொட்டு வணங்குவது மிகவும் நல்ல பலன்களை தரும் என்பார்கள். கோயிலை விட்டு எப்போதும் வெளியேறும் பொழுது கொடி மரத்தை தொட்டு வணங்கி விட்டு தான் வெளியேற வேண்டும் என்பார்கள். வேத ஆகம முறைப்படி கொடிமரம் அமைக்கப்பட்டிருப்பது விசேஷ சக்திகளை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அத்தகைய கொடிமரம் இருக்கும் கோவில்கள் அதிக சக்தி கொண்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறலாம். கொடிமரம் மற்றும் ஸ்தல விருட்சம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இந்த மாதிரியான கோவில்களில் நீங்கள் விளக்கேற்றுவது என்பது அதிக நன்மைகளை உண்டாக்க வல்லது என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.