எந்த நோயாக இருந்தாலும் நீக்கி ஆரோக்கியமாக உங்களை வாழ வைக்கும் அபிராமி அந்தாதி பாடல் !!

அன்னை அபிராமியின் அருள் உள்ளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவளின் பாடலைப் பாடினாலே போதும், அனைத்து கஷ்டங்களும் நீங்கி விடும். பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி மிகுந்த சக்தி வாய்ந்த பாடல்களாகும். இப்பாடலை தினமும் பாடினால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும். இவ்வகையில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு கிடைக்கவும், பிறவிப்பிணி நீங்கவும், மனதை ஆட்கொண்டிருக்கும், மனநோயும் சுலபமாக போக்கி விடவும் அபிராமி அந்தாதி பாடலை இப்பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகின்றோம். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பயன்களைத் தரவல்லது. மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பாடலை தினமும் உச்சரிப்பதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நூறு பாடல்களையும் உச்சரிக்க முடியாதவர்களுக்கு 101 ஆவது பாடலாக நூற்பயன் பாடல் அமைந்திருக்கிறது.

இந்த ஒரு பாடலை பாடினாலே இந்நூலை முழுவதுமாக படித்து பயன் கிட்டுமாம். எந்த பாடலையும் பாடும் முன் நூற்பயன் பாடலை பாடி முடித்த பின்னர் பாடுவது பல மடங்கு பலன் தரும். 101. அபிராமி அந்தாதி நூற்பயன்: ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக் காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. மேற்கூறிய நூற்பயன் பாடலைப் பாடி முடித்ததும் நோய்கள் விலகுவதற்கான பாடல் எண் 24 ஐ பாட வேண்டும். இன்று இருக்கும் சூழ்நிலையில் புதிது புதிதாக நோய்கள் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பணம், காசு முக்கியம் இல்லை, ஆரோக்கியம் தான் முக்கியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான நோய்களிலிருந்தும் நம்மை காத்துக்கொள்ள இப்பாடலை தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் அல்லது மாலை வேளையில் நாலரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள்ளாக பாடி முடித்து விடவேண்டும்.

அபிராமி அந்தாதி பாடல் எண் 24: மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. பாடல் எண் 27 ஐ மனநோய் என்னும் கண்ணுக்கு தெரியாத நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பாடலாம். அவசர யுகத்தில் ஓய்வு எடுப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது. இதனால் உடல் மட்டுமில்லாமல் மனமும் நோயுற்று இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் கோபம், ஆத்திரம், வெறுப்பு என்று பொறுமை இழந்து என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பாடலைப் பாடுவதன் மூலம் மன அமைதி ஏற்படும். மன அழுத்தம், மன இறுக்கம் என்று வகை வகையாக கூறப்படும் மன நோயிலிருந்து நீங்கள் கட்டாயம் விடுபட்டு விடுவீர்கள். அபிராமி அந்தாதி பாடல் எண் 27: உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை;

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால் துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. பாடல் எண் 72 பிறவிப் பிணி தீர தினமும் பாடலாம். குறை இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். சிலர் மன அளவில் குறைபாடுகளுடன் இருப்பார்கள். சிலர் உடலளவில் குறைபாடுகளுடன் இருப்பார்கள். எவ்விதமான குறைபாடுகளையும், பிறவி பிரச்சனைகளையும் இப்பாடல் நீக்கும். அபிராமி அந்தாதி பாடல் எண் 72: என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின் நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்? தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே. அபிராமி அந்தாதி பாடல்கள் ஒவ்வொன்றும் அளப்பரிய சக்தி கொண்டுள்ளது. உங்கள் பிரச்சனைக்குரிய பாடலை தினமும் பாடுவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை நீங்கள் காணமுடியும். இப்பாடலை பாட ஆரம்பித்த சில நாட்களிலேயே நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நம்பிக்கையுடன் பாட ஆரம்பித்து விடுவார்கள். இத்தகைய சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி பாடலை பாடி பயன்பெறுங்கள்.