எந்த பிரச்சனைக்கு என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் ?? உங்களின் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இந்த பதிவில் !!

மனிதனாக பிறந்து விட்டால் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கான பரிகாரத்தை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படியிருக்க உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது? அதற்கான சுலபமான, இறைவனிடத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கொடுத்த கடன் விரைவாக வசூலாக வேண்டும் என்றால், தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் பைரவர் சந்நிதியில், 2 நெய்தீபம் ஏற்றி சஹஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீர, வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிய, பில்லி, சூனியம் ஏவல், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, தொடர்ந்து 48 நாட்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியில் 2 நெய் தீபம் ஏற்றி வைத்து, 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். சக்கரத்தாழ்வார் சன்னதியில் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமைகள் 2 நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கொடுத்த கடன் விரைவில் வசூலாகும். உங்களது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளின் மூலம் பாதிப்புக்கள் இருப்பது தெரியவந்தால், வெள்ளெருக்கு விநாயகரை கைக்கு எட்டாத இடத்தில் மறைவாக வைத்து விடுங்கள். கண்திருஷ்டி உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், அம்மன் கோவில்களில் இருக்கும் சூலத்தில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மூன்று எலுமிச்சை பழங்களை சூலத்தில் குத்தி வழிபட்டு வர விரைவில் கண் திருஷ்டி நீங்கும்.

தினம்தோறும் நரசிம்மர் சன்னிதிக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வர திருமணத்தடை நீங்கும். ஜாதகத்தில் திருமணத்தடை காண தோஷங்கள் இருந்தாலும் விரைவாக நல்ல வரன் அமையும். தீர்க்கவே முடியாத எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது ஸ்ரீயோக நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் தீர்ந்துவிடும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் தீர வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சன்னிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபத்தில் இரண்டு கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவன் கோவில்களில் இருக்கும் வன்னி மரத்தையும், வில்வமரத்தின் ஐயும் 27 முறை வலம் வருவது நல்ல பலனை தரும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். இந்த இரண்டு மரங்களுக்கும் நம் கஷ்டங்களை கேட்கும் சக்தி உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிரதோஷ தினத்தன்று ஈசானிய மூலையில் ஈசனுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்ணார கண்டு, தரிசனம் செய்தால் தீர்க்க முடியாத நோய்களும் தீரும். வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பிறக்கும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக கடைசி அரைமணி நேர அமிர்தகடிகை நேரத்தில், நெய் விளக்கு தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பானது. வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தாமரை தண்டு திரி போட்டு, நெய் தீபமேற்றி வழிபட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும், இருந்தாலும் அது விலகிவிடும்.

முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், நீங்கள் செய்த பாவத்திற்கான விமோர்சனம், இப்படி உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் சாபத்தை நீங்க இது ஒரு நல்ல பரிகாரம். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கை அம்மனுக்கு சிகப்பு பட்டுத்துணியை சாத்த வேண்டும். சிகப்பு தாமரை மலரை அணிவிக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழங்களை கொண்ட மாலையை தயார் செய்து, குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை திருமணமாகாத பெண்கள் தொடர்ந்து நெற்றியில் வைத்து வந்தால் நல்ல கணவர் அமைவார் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனகாப்பு செய்து வழிபட கடன் தொல்லை நீங்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் 2 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் உங்கள் கையில் வேலை கிடைத்துவிடும். வண்டியை எடுத்தாலே விபத்து நடக்கும் சிலருக்கு! இப்படிப்பட்டவர்கள் அவிட்ட நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு வேலில் எலுமிச்சை பழத்தை சொருகி அர்ச்சனை செய்து வாருங்கள்.


ருத்ராட்சம், துளசிச் செடி, வில்வமரம், சாளகிராமம், சங்கு, வலம்புரி சங்கு இவைகள் உள்ள இடத்தில் கெட்ட சக்திகள் அண்டாது. குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் 6 தேய்பிறை அஷ்டமி தினத்தில் காலபைரவருக்கு சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து வர உடனடியாக நல்ல பலன் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை நினைத்து மனதார விரதமிருந்து, தொடர்ந்து நெய்தீபம் ஏற்றிவர 192 நாட்களில், கருத்தரிக்கலாம் என்ற ஐதீகம் நம் சாஸ்திரத்தில் உள்ளது. எப்படிப்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் தினம்தோறும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் அந்த தோஷத்திற்கான வீரியம் குறையும். குலதெய்வம் குற்றம் தீர தினம் தோறும் வீட்டில் வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றவேண்டும். வளமான வாழ்க்கையை பெற வேண்டுமென்றால் பவுர்ணமி தோறும் நடைபெறும் சத்தியநாராயண பூஜையில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. சர்ப்ப தோஷம் நீங்க பெருமாள் கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சந்நிதியே மூன்று முறை வலம் வந்து 2 நெய் தீபமேற்றி வழிபடவேண்டும் கால சர்ப்ப தோஷம் நீங்கும். இந்த பரிகாரங்கள் அனைத்துமே பல பேருக்கு சொல்லப்பட்டு, பலனை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இறைவனை நினைத்து செய்யப்படும் பரிகாரங்கள் எதுவுமே பொய்யாகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.