என்னோட சி.எஸ்.கே ஜெர்சில மட்டும் இதை நீக்கிடுங்க !! மொயின் அலி வைத்த கோரிக்கை !! என்ன தெரியுமா ??

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சென்னை அணிக்காக முதல் முறையாக விளையாட இருக்கும் இங்கிலாந்து வீரர் மொயின் அலியை 7 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது இந்நிலையில் சென்னை அணியின் ஸ்பான்சராக இருக்கும் SNJ 10000 மதுபான கம்பெனி அவளுடைய லோகோவை சென்னை அணியின் வீரர்கள் விளையக்கூடிய உடையில் இணைத்து இருந்தனர்.

இந்நிலையில் அந்த சின்னத்தை தனது உடையில் இருந்து நீக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த வருடம் சென்னை அணிக்காக ஆடும் மொயின் அலி இதுவரை ஐபிஎல் தொடரில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை 2018 இல் இருந்து இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.

ஆனால் இம்முறை சென்னை அணிக்காக விளையாட உள்ள அவா் தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதால் கண்டிப்பாக இம்முறை அதிக வாய்ப்புகள் பெற்று நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது மதுபானத்தின் மீது நாட்டமில்லாத மொயின அலி அதை தனது உடையில் அணிய விருப்பமில்லை என சென்னை அணியிடம் கூறியதை கேட்ட சென்னை அணியினர் அவர் உடையிலிருந்து மட்டும் அதை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.