என் மூலமாக வர காச வச்சு தான் உங்க அம்மாவுக்கு எல்லாம் நீங்க சோறு போடுறீங்க…? பாலாஜியின் காட்டமான பதிவு..?

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது இந்த சீசனில் ரியோ ராஜ் ஆரி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, வேல்முருகன், அனிதா சம்பத், ஆஜித், சுச்சித்ரா, ரேகா, சோம் சேகர், கேப்ரில்லா,என்று 18 பேர் இந்த சீசனில் கலந்துகொண்டனர் இந்த சீசன் முதலிடத்தை ஆரியம் இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர்

முதல் இடத்தைப் பிடித்த ஆரிக்கு 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு ஆக்ரோஷமான சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார் சில நேரங்களில் தனது கட்டுப்பாட்டை மீறி பாலாஜி சனம் ஷெட்டியை அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் அதே போல அடிக்கடி ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியதும் மைக்கை போட்டு உடைத்ததும் சர்ச்சைகளில் முக்கியமான ஒன்றாகும்.

பாலாஜியை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வந்த நிலையில் இந்த சீசனில் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பாலாஜியை சமூக வலைத்தளங்களில் சிலர் வறுத்தெடுத்து வருகின்றனர் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் போடும் பதில் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தனது அம்மா குறித்து பதிவிட்டுள்ள பாலாஜி என் அம்மாவை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் அன்பார்ந்த யூடியூப் நண்பர்களே என்னை மட்டம் தட்டி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உங்கள் அம்மாவிற்கு உணவளியுங்கள் அதை நான் எப்போதும் தடை செய்யமாட்டேன் என்னுடைய வலி தான் உங்களுக்கு உணவு என்றால் அந்த வலியை நான் எப்போதும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.