என் வெற்றிக்கு காரணம் நீங்கள்தான் அஸ்வினின் பதிலால் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் பேச்சால் சிவகார்த்திகேயன் கண்கலங்கி விட்டார்.. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக இது தொடர்ந்து வருகிறது தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் பிரபலமாக இருப்பவர் அஸ்வின்.

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன் அதில் எனக்கு எந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கும் என்பதை அவர் குறிப்பிட்டு பேசினார் அதில் அஸ்வின் குறித்து பேசும்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால் பெண்களின் ஒட்டு மொத்த கனவு நாயகனாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அஸ்வின் உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல என்னுடைய வெற்றிக்கு நீங்கள்தான் பெரிய காரணம் என்று கூறினார்.
எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு இருந்த சிவகார்த்திகேயனிடம்.சினிமா மேலிருக்கும் ஆசையால் ஊரிலிருந்து ஓடிவந்து ஒருவரை நம்பி ஏமாந்து உட்கார்ந்திருந்தேன் அப்போது தான் சந்தித்த முதல் சினிமா பிரபலம் நீங்கள்தான்.

அப்போது உங்களிடம் ஒரு வழி கேட்டேன் நீங்கள்தான் சமூக வலைத்தளத்தில் இயக்குனர்கள் எல்லாம் ஆடிஷன்களுக்கு விளம்பரம் செய்வார்கள் அதை பார்த்து அப்ளை செய்யுங்கள் என்று சொன்னீர்கள் அங்கு ஆரம்பித்தது தான் இங்க வந்து நிற்கிறேன் அன்று எடுத்த புகைப்படம் என்னிடம் உள்ளது அதை நான் உங்களுக்கு கண்டிப்பாக காட்டுகிறேன் என்றும் தெரிவித்தார் இதனையடுத்து இப்பொழுது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அஸ்வின்.