எப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும் நிரந்தர தீர்வு தரும் பரிகாரம் !!

எப்பேர்ப்பட்ட பிரச்சினை உள்ள கணவன் மனைவி சண்டையையும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, நம்மால் தீர்த்துவிட முடியும். ஆனால், நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று சண்டை போட்டுக் கொள்ளும் கணவன் மனைவியை சேர்ப்பது என்பது மிகவும் கஷ்டம். இன்றைய காலகட்டத்தில் ஈகோ பிரச்சனையால் பிரியும் கணவன் மனைவி தம்பதியர்கள் அதிகம் என்று சொல்லிவிடலாம்‌. அந்த அளவிற்கு டைவர்ஸ் கேஸ் வரிசையில் நிற்கிறது. ஆன்மீக ரீதியாக இதற்கு ஏதாவது சுலபமான பரிகாரம் உண்டா என்று தீர்வு தேடுபவர்களுக்காகவே, இந்த பதிவு. இந்தப் பதிவை படிக்கும், எந்த ஒரு கணவன் மனைவியாக இருந்தாலும், அல்லது திருமணம் ஆகாதவர்கள், எதிர்காலத்தில் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்க போவதாக இருந்தாலும், நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை மட்டும் சிந்திக்காதீர்கள்!

தம்பதியர்களுக்கு பிரச்சனை வந்தால், குழந்தைகளுடைய வாழ்க்கையையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் மட்டும், ஒரு நிமிடம் சிந்திப்பவராக இருந்தால், எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பிரிய மாட்டீர்கள்! இது அடுத்தவர்களுக்காக கூறப்படும் அறிவுரை அல்ல. நம் முன்னோர்களின் அனுபவம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். (நம்முடைய அம்மா அப்பா, கணவன் மனைவியாக வாழ்ந்த போது, பிரிந்திருந்தால், இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து, திருமணமாகி நாம் கணவன் மனைவியாக வாழ்ந்து சண்டைபோட்டு இருக்கவே முடியாது. நம்முடைய வாழ்க்கை என்றோ திசை மாறிப் போயிருக்கும்.) சரி. பரிகாரத்தை பார்த்துவிடுவோம். இந்த பரிகாரத்திற்கு தேவை 2 வெற்றிகளும், கொஞ்சமாக சுத்தமான பசு நெய் கிடைத்தால் மிகவும் நல்லது.

அப்படி கிடைக்கவில்லை என்றால், சாதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கும் நெய்யை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் ஒரு வெற்றிலையில் கணவரின் பெயரை எழுதி விடுங்கள். மற்றொரு வெற்றிலையில், மனைவியின் பெயரை எழுதி விடுங்கள். ஒரு பேனாவினால் எழுதுங்கள். அதன்பின், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நெய்யை உங்கள் விரலில் தொட்டு, அந்த வெற்றிலை முழுவதிலும் தேய்த்து விடுங்கள். பெயர் கொஞ்சமாக அழிந்தாலும் பரவாயில்லை.இப்போது ஒரு வெற்றிலையின் மேல் மற்றொரு வெற்றிலையை வைத்து சுருட்டி விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும், ஒரு வெற்றிலையின் மேல் சாஸ்திரப்படி, மற்றொரு வெற்றிலையை கவிழ்த்து வைக்க கூடாது. எப்போதும் சாமி கும்பிடும்போது வைப்போம் அல்லவா?

ஒரு வெற்றிலைக்கு மேலே மற்றொரு வெற்றிலை, அப்படி வைத்து சுருட்டி, ஒரு கயிறால் அந்த வெற்றியை கட்டி விட வேண்டும். வெற்றிலை பிரியாத அளவிற்கு கட்டிவிடுங்கள். இப்போது, இதை காற்று புகாத டப்பாவில் போட்டு, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். 21 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 21 நாட்களுக்குள் இடையே டப்பாவை திருக்க வேண்டாம். கட்டாயம் விரிசல் விழுந்த கணவன் மனைவி மனதிற்குள், நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஒருமுறை செய்தும் பலன் இல்லையா? பழைய வெற்றிலையை, கால் படாமல் தூர போட்டுவிட்டு, மீண்டும் புதிதாக வெற்றிலையை எடுத்து, இதேபோல் பரிகாரத்தை செய்து டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். அதிகபட்சம் 3 முறை இந்த பரிகாரத்தை செய்தால், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.