எப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம் !! இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன் !!

பிரச்சினைகள் இல்லாமல் கட்டாயம் நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்ல முடியாது. இருப்பினும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, நாம் கடினமாக கஷ்டப்பட்டு முயற்சி செய்து, காசு பணத்தை சம்பாதித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இருப்பினும், ஏதோ ஒரு கெட்ட நேரம் பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டு, கடன் சுமை அதிகரித்து விட்டது. இரவு பகலா கண் விழித்து கஷ்டப்பட்டாலும், கைக்கு வரும் காசு வீண் விரயம் ஆகிகிறது. சேமிக்க முடியவில்லை. கடன் தொந்தரவு, வட்டி பிரச்சினை இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஆன்மீக ரீதியாக நாம் செய்யக்கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை முடிந்தவர்கள் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்யலாம்.

முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் காலை அல்லது மாலை நேரத்தில் உங்களால் எந்த நேரத்தில் முடியுமோ அந்த நேரத்தில் செய்து கொள்வதால் எந்த ஒரு தவறும் கிடையாது. முதலில் வெற்றிலை 2, கொட்டைப்பாக்கு 2, 1 ரூபாய் நாணயம், ஒரு கைப்பிடி மொச்சை, ஒரு தாமரை பூ, இதை வாங்கிக் கொள்ள வேண்டும்.முந்தைய நாளே வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டாலும் சரி. அன்றைக்கே கடைக்கு போய் வாங்கினாலும் சரி. நவகிரகம் சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெற்றிலை பாக்கு, பழம், 1 ரூபாய் நாணயம், மொச்சை இவைகளை வைத்து உங்கள் பெயரைச் சொல்லி கடன் சுமை தீர வேண்டும். பணக்கஷ்டம் தீர வேண்டும். அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டும் என்று வேண்டுதலை வைக்க வேண்டும். தொடர்ந்து 6 வாரம் இந்த வழிபாட்டை கோவிலுக்கு சென்று செய்து வாருங்கள்.

6 வாரங்களும், 6 1 ரூபாய் நாணயத்தை, சுக்கிர பகவானின் காலடிகளில் வைத்தீர்கள் அல்லவா? அந்த காசை கடனை திருப்பிக் கொடுக்கும் போதோ, வட்டி தொகையை திருப்பிக் கொடுக்கும் போது சேர்த்துக் கொடுங்கள். மகா லட்சுமியின் அருள்கடாட்சம் கிடைப்பதற்கு சுக்கிரனுக்கு வழிபாடா என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதா? சுக்கிர பகவானால் வரக்கூடிய பிரச்சினைகள் தீர வேண்டுமென்றால் ஸ்ரீரங்கத்து பெருமாளை வணங்க வேண்டும். பெருமாளின் மார்பில் அமர்ந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தேவியை வணங்கும் போது, விஷ்ணுவின் ஆசீர்வாதம் தானாகக் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, மேல் சொன்ன பரிகாரத்தை 6 வாரங்கள் கோவிலில் சென்று செய்துவிடுங்கள். அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில், வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்வீர்கள் அல்லவா? அந்த சமயம் மொச்சையை உப்பு சேர்க்காமல் வேக வைத்து விட்டு, அதில் கொஞ்சம் நாட்டு சர்க்கரையை கலந்து, வெள்ளிக்கிழமை பூஜையிலே நைவேத்தியமாக வைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும், அந்த பிரசாதத்தை சாப்பிடலாம். இப்படியாக தொடர்ந்து 6 வாரங்கள், வீட்டில் பூஜை செய்து வரும் பட்சத்தில் உங்களது கடன் சுமை கட்டாயம் காணாமல் போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடன் சுமையைக் குறைப்பதற்கு, மேலும் கடன் வாங்கி மீண்டும் பிரச்சினைகளை சேர்த்துக்கொண்டு, பரிகாரங்கள், பூஜை புனஸ்காரங்கள் செய்வதைவிட, நம்பிக்கையான இறைவழிபாட்டை அந்த இறைவனுக்குரிய தானியங்களை வைத்து செய்வதன் மூலமாகவே நம்மால் விரைவாக பலனை அடைய முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.