எப்படிப்பட்ட கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 8 சனிக்கிழமை இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் !!

கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் இந்த உலகத்தில் உலாவிக் கொண்டுதான் கொண்டிருக்கின்றது என்பதை சொன்னால் சிலர் கட்டாயமாக நம்ப மாட்டார்கள். ஆனால் கெட்ட சக்திகளின் மூலம், அனுபவப்பூர்வமாக சில பிரச்சனைகளை எதிர் கொண்டவர்களுக்கு இதை பற்றி நன்றாக புரிந்து இருக்கும். ஆரம்ப காலத்திலேயே சொல்லி இருப்பார்கள் ‘உங்களின் வளர்ச்சியை பார்த்து, யாரோ ஒருவர் செய்வினை வைத்ததால் தான் இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது’ என்று. இதை நல்ல நிலைமையில் இருக்கும் வரை யாரும் நம்பாமல் இருப்பது இயற்கை தான். கையில் இருக்கும் சொத்து, செல்வம், கௌரவம் இவை அத்தனையும் இழந்த பின்புதான் யோசிப்பார்கள். நமக்கு ஏதோ ஒரு கெட்ட சக்தியால் பிரச்சனை இருக்கின்றது என்பதை. ஆரம்ப காலத்திலேயே யோசித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்டு இருக்காது அல்லவா?

சரி பிரச்சினைகள் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டோம். என்ன பரிகாரம் செய்தால், சுலபமாக நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். வாராஹி அம்மனை நினைத்து மனதார இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், உங்களை பிடித்திருக்கும் பில்லி, சூனியம், ஏவல் எப்படிப்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும் உங்களிடமிருந்து கண்காணாத தூரத்துக்கு ஓடிவிடும். இந்தப் பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். புதிதாக மண் அகல் விளக்கு ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவும். கருநீல துணியை புதியதாக வாங்கி சிறிதளவு வெட்டி எடுத்து, திரி செய்யும் அளவிற்கு உருட்டி அதனுள் வெண்கடுகுகளை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தயார் செய்து கொள்ள முடியாதவர்கள், வெண்கடுகை கருநீல துணியில் சிறிய முடிச்சாக கட்டிக் கொள்ளலாம்.

அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, வெண்கடுகு திரியை அந்த எண்ணெயில் போட்டு தீபமாக வராகி அம்மனின் முன்பு ஏற்ற வேண்டும். வெண்கடுகை மூட்டையாக கட்டி வைத்திருப்பவர்கள் அந்த மூட்டையை அப்படியே தீபமாக ஏற்றி விடலாம். உங்கள் வீட்டின் அருகில் வராகி அம்மனின் சன்னிதானம் இருந்தால் அங்கு சென்று இந்த பரிகாரத்தை செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். தொடர்ந்து 8 வாரம் சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 6 – 7 மணிக்குள் அல்லது இரவு 8 – 9 மணிக்குள் இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் தான் பலன் உண்டு. தீபம் ஏற்றும் இந்த 8 சனிக்கிழமைகளிலும் ஒரு வேளை உணவு அருந்தி விரதம் இருப்பது மேலும் நல்ல பலனை தரும். சிலர் சொன்னாலும் நம்ப மாட்டீர்கள். நிறைய பேருக்கு சொந்த பந்தத்திற்கு உள்ளேயே பொறாமை வந்திருக்கும்.

சில குடும்பத்திற்கு ஆண் வாரிசு இருக்கும். சில குடும்பத்திற்கு ஆண் வாரிசு இருக்காது. சொத்துக்கள் அனைத்தும் ஆண் வாரிசு உள்ள குடும்பத்திற்கு சென்று விடுமோ! என்ற பொறாமை குணத்தின் கூட அந்த ஆண் வாரிசை அழிப்பதற்கு நிறைய சதிவேலைகள் நடக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு கூட இந்த தீபத்தை ஏற்றி வராகி அம்மனை வழிபட்டால், எந்த ஒரு கெட்ட சக்தியையும் உங்கள் ஆண் வாரிசை நெருங்காமல் இருக்கும். வராகி அம்மனை வழிபடும் போது எந்த ஒரு தீய எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்கலாமே சென்னையில் இப்படி ஒரு கோவிலா? வீடு வாங்கும் கனவு இருந்தால் இந்த கோவிலுக்கு அமாவாசையில் செல்லுங்கள். இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.