எல்லா பெண்களும் தங்களுடைய வீட்டு பீரோவில் செய்யும் ஒரு தவறு !! தரித்திரத்தை தேடித்தரும் இந்த தவறை நீங்கள் செய்கிறீர்களா ??

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்கின்றோம். வீட்டில் கெட்ட வாடை அடிக்க கூடாது, குப்பை சேரக்கூடாது, ஒட்டடை சேரக்கூடாது, வீடு மங்களகரமாக இருக்க வேண்டும். அமங்கள வார்த்தை பேசக்கூடாது. வாசல் தெளித்து பச்சரிசி மாவு கோலம் போடவேண்டும். இப்படியாக எத்தனையோ விஷயங்களை பார்த்து பார்த்து செய்கின்றோம். ஆனால், மகாலட்சுமி வந்து அமரக்கூடிய பீரோவில், நாம் செய்யக் கூடாத தவறு ஒன்றை செய்தால், மேற்குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களுக்கும் பயண் இல்லாமல் போய்விடுமே! அது என்ன தவறு? உங்களுடைய வீட்டில் நீங்கள், அந்தத் தவறை செய்கிறீர்களா என்று பார்த்துவிடலாமா? மகாலட்சுமிக்கு பிடிக்காத ஒரு வாசம் என்றால், தரித்திரம் பிடிக்கும் ஒரு வாசம் என்றால், அது அழுக்கு துணி, துவைக்காத துணியின் வாடை.

நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது, விசேஷங்களுக்கு செல்லும் போது, விலை உயர்ந்த புடவைகளை, ஒருமுறை பயன்படுத்திவிட்டு, அதாவது ஒரு முறை உடுத்தி விட்டு, அதை அப்படியே மடித்து உங்கள் வீட்டு பீரோவில் வைக்கும் பழக்கம் உள்ளதா ?? இப்படி விலை உயர்ந்த புடவையாக இருந்தாலும் அதை உடுத்தி அவிழ்க்கும் போது, அந்த புடவையும் அழுக்குத் துணி கணக்கில் தானே சேர்கிறது. அந்தப் புடவையை என்னதான் கொடியில் போட்டு வியர்வை வாடை வராமல் உலர வைத்து, பீரோவில் எடுத்து வைத்தாலும், அது தரத்தின் அர்த்தம் தான். இனி ஒரு முறை உடுத்திய எப்பேர்பட்ட விலை உயர்ந்த புடவையாக இருந்தாலும், மற்ற துணிமணிகள் ஆக இருந்தாலும், அதை துவைக்காமல் உங்களுடைய பீரோவில் எடுத்து வைக்காதீர்கள். துவைத்தால் புடவை வீணாகி விடும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உங்களால் அந்த புடவையைத் துவைக்க முடியாத சூழ்நிலை, டிரை க்ளீன்க்கு தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தாலும் சரி, அந்தப் புடவையைப் பீரோவில் வைக்காமல், புடவைக்கென்று தனி சூட்கேஸ் வைத்து அதில் வேண்டுமென்றால் வைத்து பராமரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இருப்பினும் நாம் உடுத்திய துணியை துவைக்காமல், பீரோவில் எடுத்து வைப்பது என்பது சரியான முறை அல்ல. உங்களுடைய புடவை என்று மட்டும் அல்ல, உங்கள் வீட்டு உறுப்பினர்களின், எந்த துணிமணிகளாக இருந்தாலும், ஒரு முறை உடுத்தி விட்டு அதை துவைக்காமல் பீரோவில் வைப்பது தவறு தான். அந்த காலத்தில் பட்டுப்புடவையாகவே இருந்தாலும், கட்டிய புடவையை ஒரு முறை தண்ணீரில் நனைத்து துவைத்து உலர வைத்து தான் மடித்து வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எந்த ஒரு தோஷமாக இருந்தாலும், அதை தண்ணீரில் நினைக்கும்போது அந்த பொருளுக்கு தோஷம் நீங்கிவிடும். இதனால்தான் தினமும் குளிக்க வேண்டும் துவைத்த துணிகளை உடுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள்.

நம் வீட்டு மகாலட்சுமி வாழக்கூடிய அந்த பீரோவில், அழுக்கு துணியை வைப்பது கட்டாயம் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். காசு சேமித்து வைக்கும் பெட்டியில் அழுக்குத் துணியை வைக்காதீர்கள். அப்படியில்லையென்றால் அழுக்குத்துணி வைக்கும் பீரோவில் காசு சேர்க்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அது உங்கள் இஷ்டம். நம் பணத்தை சேர்த்து வைக்கும் பீரோவில் கட்டாயம் ஸ்வாமியின் படம் இருக்கும். மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய காசு இருக்கும். மகாலட்சுமி ஸ்வரூபத்தில் இருக்கும் தங்க நகைகள் இருக்கும். நாம் வைக்கக்கூடிய அழுக்குத்துணி யானது, இந்த பொருட்களை எல்லாம் அவமானப்படுத்துவதற்க்கு சமம் என்றே சொல்லலாம். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பூஜை புனஸ்காரங்களும், நம்முடைய உண்மையான பக்தியும் நமக்கு பலனளிக்காமல் போவதற்கு, இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளும் கட்டாயம் காரணமாக இருக்கும் என்று கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.