எல்லா விதமான பயமும், பதற்றமும் உங்களிடமிருந்து நீங்க இந்த மந்திரத்தை ஒன்பது முறை உச்சரித்தால் போதும் !!

மனிதனாகப் பிறந்து விட்டாலே பயம் என்பது இயல்பாக வந்து விடுகிறது. ஒரு சிலர் பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்திருப்பார்கள். ஆனால் அவர்களையும் பயம் வாழ்க்கையில் ஒரு முறையாவது தான் யார் என்பதை, தன் சுய ரூபத்தை காட்டி விட்டு சென்றிருக்கும். அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் அவ்வளவு தான். ஆனால் இன்னும் சிலர் எதற்கெடுத்தாலும் பயந்து பதட்டம் அடைந்து விடுவார்கள். அது போன்றவர்கள் இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்தால் பலம் பெறுவார்கள். என்ன மந்திரம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் தேர்வு எழுத செல்வார்கள். தேர்வுக்கு படிக்கும் பொழுது நன்றாகத் தான் படிப்பார்கள். எல்லாவற்றையும் முழுமையாக மனப்பாடம் செய்து கொள்வார்கள். ஆனால் தேர்வறையில் பயமும், பதற்றமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

தொண்டை வரைக்கும் வரும் விடை, வாயில் நுழையாது. முதல் வரியே முற்றிலுமாக மறந்திருக்கும். இது போன்றவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களில் நிறைய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.அது போல் இன்னும் சிலர் வேலைக்காக விண்ணப்பித்து இருப்பார்கள். வேலைக்கான இன்டர்வியூ செல்கையில் உடம்பு முழுக்க வியர்த்து, பயமும், பதற்றமும் தொற்றிக் கொண்டிருக்கும். அவர்களும் சாதாரண மனிதர்கள் தான். எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள் அல்ல. இருந்தாலும் இது போன்ற சமயங்களில் பயமானது இவர்களைத் தொற்றிக் கொள்ள பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இதனை எதிர் கொள்ள வேண்டியது அவசியமாகும். நாம் தப்பு செய்யாமல் ஒரு விஷயத்திற்காக பயப்படுகிறோம் என்றால், அதை விட கெட்ட செயலாக இந்த உலகத்தில் எதுவும் இருக்க முடியாது.

எதற்கு பயப்பட வேண்டுமோ? அதற்கு மட்டும் பயப்பட வேண்டும். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தவறு செய்யாமல் பயம் உண்டாகி பதற்றம் கொள்ள நேரிடுகிறதோ, அந்த சமயத்தில் இந்த ஒரு மந்திரத்தை ஒன்பது முறை உச்சரித்து தலையில் தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள். நிமிடத்தில் உங்களுடைய பயம் நீங்கி தைரியம் புதிதாக பிறப்பதை நீங்களே உணர்வீர்கள். இதோ அதற்கான மந்திரம்! பகலில் பயம் நீங்க மந்திரம்: ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா: இது சாதாரண பகல் பொழுதில் தேவையே இல்லாமல் வரும் பயம், பதற்றத்திற்காக சொல்லப்பட வேண்டிய மந்திரம். இதில் வேறு சிலர் இரவில் தேவை இல்லாமல் பயப்படுவார்கள். இருட்டைப் பார்த்தால் பயம், தன் நிழலைப் பார்த்து தனக்கே பயம், பேய், பூதம் போன்ற கதைகள் கேட்டால் பயம், தனியாக படுப்பதற்கு பயம் என்று இரவு நேரத்தில் ஏதோ ஒருவிதமான பயம் இவர்களை ஆட்கொண்டிருக்கும். அத்தகையவர்கள் கீழ்கண்ட இந்த மந்திரத்தை ஒன்பது முறை தினமும் உச்சரித்து விட்டு தூங்க சென்றால் நாளடைவில் இந்த பிரச்சனைகள் நீங்கி மனோதைரியம் மேம்படும். இதோ உங்களுக்கான மந்திரம்! இரவில் பயம் நீங்க மந்திரம்: சுற்றும் கருடன் சூழக் கருடன் பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன்.