எவ்வளவு கஷ்டம் வந்தாலும், உங்களது மனசு இரும்புபோல் தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டுமா ?? இந்த வழிபாட்டை செய்து வந்தால் நீங்க வெற்றியாளரா மாறிடுவீங்க !!

சில பேருடைய மனது எந்த தோல்வியையும் தாங்கிக் கொள்ளாது. சில பேருடைய மனது எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளாது. சிறு கஷ்டம் வந்தால்கூட வாடிய பூ போல, மனசு உடனடியாக துவண்டு போய்விடும். நம்முடைய மனது என்பது அடுத்தவர்களுக்காக இரக்க படலாமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் நம்மைப் பார்த்து யாரும் இரக்க படவே கூடாது. மன தைரியமும், உறுதியும் வர வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையையும் சமாளித்து எதிர்கொள்ள மன தைரியம் தான் முதலில் முக்கியம் தேவை. அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சத்தை நாம் பெற வேண்டுமென்றால், என்ன செய்வது? அஞ்சா நெஞ்சத்தை கொண்ட ஹனுமனை தான் வழிபட வேண்டும். இந்த ஹனுமன் வழிபாட்டை, இந்த முறைப்படி செய்து வருபவர்களுக்கு, மனது உறுதியாகும். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற துணிச்சல் ஏற்படும்.

தொட்ட காரியம் எல்லாம் ஜெயமாகும். நம்பிக்கையோடு வைக்கும் இந்த ஒரு பொட்டுக்கும், கோடி பலனை நீங்கள் பெறப் போகிறீர்கள். உங்கள் மனதில் இருக்கும் கோழைத்தனத்தை தூக்கி எறிந்துவிட்டு, தைரியமாக வழிபாட்டை செய்து பாருங்கள்! இந்த பரிகாரத்திற்க்கு முதலில் ஹனுமனின் திருவுருவப்படம் கட்டாயம் தேவை. அந்த ஹனுமானின் திரு உருவப்படமும் ராம் ராம் என்ற எழுத்தில் கடைகளில் கிடைக்கின்றது. அதாவது குட்டி குட்டியான வார்த்தைகள், ராம் ராம் என்று எழுதி இருக்கும். பார்த்தால் ஹனுமனின் திருவுருவப்படம் தெரியும். உற்று நோக்கினால் தான் அதன் உள்ளே ராம் ராம் என்று எழுதி இருப்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு திருவுருவப்படத்தை, உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட எழுத்து உள்ள படம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், சாதாரண அனுமன் படம், வால் உள்ள படமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் படத்தை தினம்தோறும் அடிக்கடி நீங்கள் பார்த்து வந்தாலே உங்களது மன தைரியம் அதிகரிக்கும். அது வேறு விஷயம்! இதோடு விட்டுவிடாமல், தினம்தோறும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு, முடிந்தவர்கள் வெறும் வயிற்றில் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களது வலது கை மோதிர விரலால் கொஞ்சமாக சந்தனத்தை பன்னீரில் குழைத்து, எடுத்து அனுமனின் வலது கால் பாதம் முதல், பொட்டுவைக்க தொடங்க வேண்டும். வலது காலில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக, ஏறுமுகமாக மேல் பக்கத்தில் ஏறி, அவரது நெற்றியில் பொட்டு, அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழ் பக்கமாக இறங்கி இடதுகால் முடியும்வரை, அனுமனை கீழிருந்து மேல் நோக்கி சுற்றிவந்து பொட்டை வைத்து மனதார உங்களது கஷ்டத்தை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். இறுதியாக அவரது நெற்றியில் மட்டும் ஒரு குங்குமப் பொட்டு வைத்து விடுங்கள். ராம் ராம் ராம் என்று உச்சரித்துக் கொண்டே போட்டு வையுங்கள். ஒரு 21 நாட்கள் நீங்கள், இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய மனது எப்படி மாறியது?

உங்களுடைய கஷ்டங்கள் எப்படி போனது? என்றே தெரியாது! அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பும் உங்களது மனதும், மூச்சுக்காற்றும் ராம் ராம் ராம் என்ற மந்திரத்தை ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். காலப்போக்கில் உங்களுடைய வாழ்க்கையில் வித்தியாசமான உணர்வை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வராது. யார் உதவி என்று உங்களை வந்து கேட்டாலும், மறுக்காமல் செய்ய தொடங்கி விடுவீர்கள். பிரச்சனை வந்துவிட்டதா? பார்த்துக் கொள்ளலாம்! என்று துணிவோடு எதிர்த்து நினைப்பீர்கள். உங்களுடைய மனது அப்படி பக்குவப்பட்டு இருக்கும். இதை படித்தோ அல்லது யாரோ ஒருவர் சொல்லியோ உங்களால் நிச்சயம் உணர முடியாது. 21 நாட்கள் முழு ராமர் பக்தராக இருந்து பாருங்கள். இதனால் உங்களது வாழ்க்கையில் சன்னியாசம் வந்துவிடுமோ என்ற பயம் கூட தேவையில்லை. ராமர் சீதையை சேர்த்து வைத்த அந்த ஹனுமன், உங்கள் இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை தரமாட்டார், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம். இதையும் படிக்கலாமே