ஐசிசி சிறந்த அணியில் தோனியை தோ்ந்தெடுத்ததை குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா.

2020 வது வருடத்திற்கான ஐசிசி விருதகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிசி க்கான சிறந்த அணியையும் வெளியிட்டு உள்ளது ஐசிசி அந்த அணியில் தோனியை தோ்ந்தெடுத்தது ஆச்சரியமாகவும் ஜாஸ் பட்லர் இடம் பெராதது சதி எனவும் முன்னாள் இந்திய பேடஸ்மேன் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது சர்சையை கிளப்பியுள்ளது.

முன்னால் இந்திய அணியின் கேப்டனான தோனி சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் ஓய்வு பெற்றார் இதற்கிடையில் உலகின் தலை சிறந்த அணியை வெளியிட்டுள்ள ஐசிசி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது.

தோனி உலக அளவில் சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே ஏனென்றால் 2007ல் டி20 உலக கோப்பையும் 2011ல் ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையும் 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் தற்போது உள்ள சூழ் நிலையில் தோனி எந்த வித போட்டியிலும் வெற்றி பெற்றும் தரவில்லை அவரும் சரியாக விளையாடவில்லை எனவும் அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் தான் சரியாக இருப்பார் என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இந்திய கேப்டன் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ரோஹித் சர்மா, உட்பட நான்கு இந்தியர்களும் முன்னால் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

ஐசிசி யின் சிறந்த அணி: ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், விராட் கோஹ்லி, ஏபி டிவிலியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், எம்.எஸ்.தோனி(c) கெய்ரான் போலார்ட், ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.