ஐந்து ரூபாய் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் மேலும் பணம் சேரும் வியாபாரம், தொழில் செழிப்பாக இருக்கும் !!

இன்று இருக்கும் சூழ்நிலையில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது. பணம் இருந்தால் தான் எதையும் நம்மால் வாங்க முடியும் என்பதை இந்த சூழ்நிலையில் பலரும் உணர்ந்திருப்பார்கள். பணம் எவ்வளவு முக்கியம் என்பதை விட, பணத்தை சேமிப்பது என்பதை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். 500 ரூபாய் ஒரு காலத்தில் சர்வ சாதாரணமாக செலவு செய்தவர்கள் கூட, இப்போது அஞ்சி அஞ்சி செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். வீட்டில் செல்வம் சேர வேண்டும், வியாபாரம் செழித்தோங்க வேண்டும், தொழில் சிறந்து விளங்க வேண்டும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்க வேண்டும். இது தான் அனைவருக்கும் இருக்கும் முதன்மையான வேண்டுதலாக இருக்கும். பணத்தை ஈர்ப்பதற்கு சில பொருட்கள் உள்ளன.

அவற்றை ஒன்றாக இணைப்பதன் மூலம் நிச்சயம் பணத்தை ஈர்க்க முடியும். இது பணத்தை ஈர்க்கும் விதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சூட்சுமத்தை அறிந்து முறைப்படி பரிகாரத்தை செய்தால் வீட்டில் செல்வம் சேரும், வியாபாரம் செழிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வெற்றிலையின் வலது புறமும், இடது புறமும் ஒரே மாதிரியான வளைவுகளை கொண்ட வெற்றிலையாக இருக்க வேண்டும். வெற்றிலையின் மேல் ஐந்து ஏலக்காய்களை வைக்கவும். அதனுடன் ஐந்து கிராம்புகளை வைக்கவும். சிறிது பச்சைக் கற்பூரத்தையும் நுணுக்கி இதனுடன் சேர்க்கவும். ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை நீங்கள் ராசியாக நினைக்கும் நபர்களின் கைகளால் வாங்கிக் கொள்ளுங்கள்.

அதையும் வெற்றிலையின் மேல் வையுங்கள். இப்போது வெற்றிலையை நான்காக மடித்துக் கொள்ளவும். ஒரு மெல்லிய நூல் கொண்டு உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியே வராதபடி கட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இந்த முடிப்பை நீங்கள் பூஜை அறையில் வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருளைப் பெற முடியும். மகாலட்சுமியின் அம்சமாக தானே பணமும் இருக்கிறது! இந்த பொருட்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி படைத்தது. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் விரயம் ஆகாமல் தடுக்கும். மேலும் மேலும் வியாபாரத்தில் செழித்தோங்க இந்த வெற்றிலை பரிகாரத்தை வியாபார தளத்திலும் செய்யலாம். வியாபார தளத்தில் செய்தால் வியாபாரம் பன்மடங்காகப் பெருகும். நல்ல லாபம் கிடைக்கப் பெறும். வியாபாரம் செய்யும் இடத்தில் மட்டுமில்லாமல் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் தொழில் செய்யும் இடங்களிலும், உத்தியோகத்தில் இருப்பவராக இருந்தால், உங்களின் உத்தியோக இடத்திலும் தாராளமாக இதை செய்யலாம்.

எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்யுங்கள். நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் செய்வதில் பலனும் இல்லை. பரிகாரமும், நம்பிக்கையும் இணைந்தால் தான் பலனும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றிலை காய்ந்த பின் அதில் இருக்கும் பொருட்களை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி விடவேண்டும். கட்டாயம் அந்த பொருட்களை சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது. ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் அப்படியே வைத்திருக்கலாம். மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அஞ்சு ரூபாய் நாம் செலவழிப்பதன் மூலம் செல்வம் சேரும் என்றால் அதனை செய்து பார்ப்பதில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. இதை செய்து பலன் அடைந்தவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.