ஒரு போட்டோ போட்டு அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வெங்கட்பிரபு.! திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்களே..

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த திரைப்படத்தின் வெற்றியை பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதற்கு முன்னர், முழுக்க முழுக்க ஹீரோவாகவும் அல்லது இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று வில்லனாகவும் நடித்த அஜித், இதில் முழுக்க முழுக்க ஒரே வில்லனாக மட்டுமே நடித்து ஆச்சரியம் காட்டினார். அதுவும் அவரது ஐம்பதாவது திரைப்படத்தில் இதனை செய்து காட்டினார். அப்போதிலிருந்தே, மங்காத்தா இரண்டாம் பாகம் வெளிவருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கு அவ்வபோது பதில்களை அனுப்பி வந்த வெங்கட் பிரபு, அதற்கான கதை அமைந்தால் அதற்கு அஜித் கால்சீட்டு ஒதுக்கினால் நிச்சயம் நடக்கும் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், நேற்று வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், அஜித் சினிமா உலகுக்கு வந்து 30 வருடங்கள் ஆனதை ஒட்டி அதில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டில் மங்காத்தா இரண்டாம் பாகம் எப்போது வரும் என மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டன.ர் ஒரு போட்டோ போட்டது தற்போது குற்றமாகிவிட்டதே.! ரசிகர்கள் கமெண்ட்டிற்கு தற்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எதற்கும் பதில் சொல்லாமல் நழுவி விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.

By admin