ஒரு மஞ்சளுக்கு இத்தனை மகத்துவங்கள் அடங்கி உள்ளதா ?? அடகு வைத்திருக்கும் நகையை மட்டுமல்ல, வீடு நிலம் போன்ற சொத்துக்களையும் நம்மால் மீட்க முடியும் இந்த ஒரு பரிகாலம் போதும் !!

கஷ்டப்பட்டு சம்பாதித்து, பணம் சேர்த்து பொருட்களை வாங்குவது என்பது ஒரு சிரமம் என்றால், அந்த பொருட்களை அடகு போகாமல், அடமானம் வைக்காமல் பாதுகாக்கும் பொறுப்பு என்பது நமக்கு அதிகமாகவே உள்ளது. இன்றைய சூழ்நிலையில், நம்முடைய தேவைக்காக நம் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். சில பேர் வீட்டில் நிலவிவரும் கஷ்டத்தை ஈடுகட்ட, தாங்கள் வசிக்கும் வீடு அல்லது தாங்கள் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருக்கும் சொந்த நிலம், தங்களுடைய வாகனம் இப்படி பெரிய அளவிலான சொத்துக்களையும் அடமானம் வைப்பது மிகவும் கஷ்டமான விஷயம் தான். நம் அடமானம் வைத்திருக்கும் பொருட்களை சுலபமாக மீட்க வேண்டும் என்றால், ஆன்மீகரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இது ஒரு சுலபமான பரிகாரம் தான். உங்களது அடமானம் வைத்த பொருளை மீட்கும் வரை இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.இந்த பரிகாரத்திற்க்கு ஒரு மஞ்சள் துணி, 1 ரூபாய் நாணயம், 2 மஞ்சள் கிழங்கு, நவதானியம் ஒரு கைப்பிடி இந்தப் பொருட்கள் மட்டுமே போதும். ஒரு ரூபாய் நாணயம் குலதெய்வத்தை வேண்டி வைக்க வேண்டும். மஞ்சள் கிழங்குகளை, ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் நீங்க வேண்டும் என்று வைக்க வேண்டும். நவதானியம் நவ கிரஹத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வைக்கப்பட வேண்டும். சிறிய மஞ்சள் துணியில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு முடிச்சு போட்டு, தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக உங்கள் பொருட்களை அடமானம் வைத்ததற்கு சாட்சியாக வைத்திருக்கும் ரசீதாக இருந்தாலும் சரி அல்லது பத்திரங்கள் எழுதி வைத்திருந்தாலும் சரி அதையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறையில் ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, அடமான சீட்டையோ பத்திரத்தையோ ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து, அதன் மேல் தயாராக இருக்கும் முடிச்சை வைத்து குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி, எப்படியாவது ‘அடமானம் வைத்த குறிப்பிட்ட அந்த பொருளை’ விரைவாக, இத்தனை நாட்கள் மீட்டு விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (அந்தப் பொருளை மீட்பதற்கு எவ்வளவு பணம் தேவை, அந்தப் பணத்தை உங்களால் எவ்வளவு நாட்களுக்குள் தயார் செய்ய முடியும் என்பதற்கு தகுந்தவாறு உங்களது வேண்டுதல் இருக்க வேண்டும்.) வேண்டுதல் முடித்த பின்பு, அந்த முடிச்சு உங்கள் பூஜை அறையிலேயே இருக்கட்டும். பத்திரத்தை எடுத்து பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் இந்த வேண்டுதலையும், இந்த பரிகாரத்தையும் செய்ய வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் பட்சத்தில் நீங்கள் அடமானம் வைத்திருக்கும் நிலத்தையோ நகையையோ அல்லது வீட்டையோ மீட்பதற்கு முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும், அதற்கான முயற்சிகளை நீங்கள் செய்து கொண்டே வரும் போது, குறுக்கே எந்த தடையும் வராமல், மீட்பதற்கான வேலைகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தடைகளைத் தகர்த்தெறி வதற்கு இந்த பரிகாரம் உறுதுணையாக நிற்கும். நீங்கள் உயிராக நினைக்கும் உங்களுடைய சொத்து உங்கள் கைக்கு வர வேண்டும் என்று நினைத்தால், இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பலனை அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.