கடன் தீர குறையாத செல்வம் பெற விற்க முடியாத வீட்டை விற்க வலம்புரி சங்கு காட்டும் அற்புதமான தீர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ??


வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை ஆலோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென நம் மனதில் அல்லது நம்மை சுற்றி இருக்கும் விஷயங்கள் நமக்கு தீர்வை தந்துவிடும். அப்படி ஒரு தீர்வாக தான் இந்த சங்கு பரிகாரம் இருக்கப் போகிறது. வலம்புரி சங்கு மிகவும் சக்தி வாய்ந்தது என்பார்கள். வலம்புரி சங்கை வைத்து நிறைய பரிகாரங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் அதீத சக்தி வாய்ந்தவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வகையில் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் பரிகாரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. கடன் தொல்லையில் இருந்து மீண்டு வருவதற்கு, விற்க முடியாமல் தவித்து வரும் வீட்டை சுலபமாக விற்பதற்கு, செல்வ வளம் நம் வீட்டில் பெருகி ஐஸ்வர்யம் கிடைப்பதற்கு, மேலும் சில கஷ்டங்களுக்கு வலம்புரி சங்கு எந்த முறையில் நமக்கு பயன்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வலம்புரி சங்கை பொருத்தவரை தாராளமாக வீட்டில் வைக்கலாம். அதில் சிறிதளவு நீர் ஊற்றி தங்கம், செம்பு, வெள்ளி ஆகிய ஏதேனும் ஒரு உலோகத்தின் மீது அல்லது மரத்தால் செய்த பொருளின் மீது வைக்க வேண்டும் வெறும் தரையில் படும்படி கீழே வைக்கக்கூடாது. வலம்புரி சங்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த தோஷமும் நெருங்காமல், துர்சக்திகள் அண்டாமல் மற்றவர்களின் பொறாமை கண்கள் நம் மீது படாமல் இருப்பதற்கு துணையாக இருக்கும் என்பார்கள். செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்கள் 6 செவ்வாய்க்கிழமைகள், செவ்வாய் பகவானை வணங்கி, வலம்புரி சங்கில் பால் வைத்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து செவ்வாய் பகவானுடைய 108 அஷ்டோத்திரம் கூறினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். பச்சிளம் குழந்தை தொடர்ந்து பாலை அருந்தாமல் அழுது கொண்டே இருந்தால் பிள்ளையாரை வணங்கிவிட்டு தாய்ப்பாலை சங்கில் ஊற்றி கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பவுர்ணமியின் இரவு நேரத்தில் இல்லத்தின் வாசலில் 16 சங்கு வருமாறு கோலம் போட வேண்டும். பின்னால் வலம்புரி சங்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதன்பின் குளிகை நேரம் காலண்டரில் பார்த்து கடன் தொகையில் இருந்து ஒரு தொகையை கொடுத்து விட்டு வந்தால் மொத்த கடனும் அதிவிரைவாக அடைந்து விடும் என்பது நம்பிக்கை. பழைய வீட்டை உங்களால் விற்க முடியாத நிலையில் இருக்கும் பொழுது, நடுவீட்டில் வலம்புரி சங்கை வைத்து அதில் வாஸ்து பகவான் மந்திரம் கூறி அவரை சங்கில் எழுந்தருளச் செய்து அதில் மஞ்சள் மற்றும் துளசி கலந்த தீர்த்தம் ஊற்றி வைக்க வேண்டும். பின்னர் தூப தீபம் காண்பித்து, பூஜைகள் செய்து அந்த தீர்த்தத்தை வேப்பிலை கொண்டு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதன் பிறகு மஞ்சள் துணி ஒன்றில் செம்பு நாணயம் உங்களிடம் இருந்தால் அதை முடிந்து வைத்து வீட்டின் ஈசானிய மூலையில் கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் நினைத்தபடி வீட்டை அதிக விலைக்கு விற்க முடியும். இதுபோல் வீட்டை புதுப்பிக்க முடியாமல் பாழடைந்து கிடக்கும் வீட்டிற்கும் நீங்கள் பரிகாரம் செய்தால் நிச்சயம் உங்கள் பிரச்சினை விரைவாக தீரும்.

அள்ள அள்ள குறையாத செல்வம் சேர்வதற்கு உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருக்கும் தெய்வத்தின் படமும், லக்ஷ்மி குபேரன் படம் மற்றும் யோக எண்ணையும் வைத்து சில சில்லறை நாணயங்களை வலம்புரி சங்கில் போட்டு பூஜை செய்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளம் கூடும். கோவில்களில் இடம்புரி சங்கு நீர்விட்டு 108, 1008 சங்காபிஷேகம் நடைபெறும் வேளையில் கலந்து கொள்பவர்களுக்கு தோஷங்கள் விலகி, அதிக அளவில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான கணபதியை தம்பதியராக அமர்ந்து வலம்புரி சங்கு வைத்து அதில் குங்குமப்பூ மற்றும் பால் சேர்த்து 48 நாட்களுக்கு பூஜைகள் செய்து நன்றாக வேண்டிக்கொண்டு அந்த பாலை இருவரும் சேர்ந்து அருந்தி வந்தால் பிள்ளைப்பேறு உடனடியாக உண்டாகும். இதுபோல் சங்கை வைத்து நிறைய பரிகாரங்கள் உள்ளன. வலம்புரி சங்கை வீட்டில் வைப்பவர்கள் முறையான பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் அவர்களுக்கு கைகூடும் என்பதை கூறி இந்த பதிவை முடித்து கொள்வோம்.